யார் நீ.. இணையத்தை கலக்கும் விஜய் ஆண்டனி பாடல்

விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’கொலை’.இப்படம் வருகிற ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் நீ.. இணையத்தை கலக்கும் விஜய் ஆண்டனி பாடல்
Published on: 

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமான 'கொலை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், 'கொலை' படத்தின் மூன்றாவது பாடலான யார் நீ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை எம்.எஸ்.கிர்ஸ்ணா, அஞ்சனா ராஜகோபாலன் குரலில் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com