என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘ஜவான்’.
- இப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'.இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் அர்த்தனா பினு.
- இவர் தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
மலையாள திரையுலகின் பிரபல நடிகையான அர்த்தனா பினு, தமிழில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். தொடர்ந்து 'செம', 'வெண்ணிலா கபடிக்குழு -2' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் தந்தை விஜயகுமார் மலையாள திரையுலகில் நடிகராக வலம் வருகிறார்.

விஜயகுமார்- அர்த்தனா பினு
விஜயகுமாருக்கும் அர்த்தனா பினுவின் தயாருக்கும் விவாகரத்தாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அர்த்தனா பினு தனது தயாருடன் கேரளாவில் வசித்து வருகிறார். இதையடுத்து தந்தை விஜயகுமார் தொடர்ந்து அர்த்தனா பினுவிற்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய்குமார் கேரளாவில் உள்ள அர்த்தனா பினுவின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து சென்றுள்ளார். வீடு உட்பக்கமாக பூட்டியிருந்ததும் ஜன்னல் வழியாக அர்த்தனா பினு, அவரது தங்கை, தாய் மற்றும் பாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு அவர் வந்த வழியே சுவர் ஏறி குதித்து சென்றுள்ளார். தந்தை சுவர் ஏறி குதித்து செல்லும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அர்த்தனா பினு தன் அனுபவிக்கும் வேதனையையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நடிகை திரிஷா தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்து வருகிறார்.
- இவர் தற்போது 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் திரிஷா அடுத்ததாக மலையாள நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளார். அதாவது, அகில் பால்-அனஸ்காஸ் ஆகிய இரண்டு இயக்குனர்களும் இணைந்து இயக்கும் திரைப்படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
இதற்கு ரசிகர்கள் திரிஷா, டோவினோ தாமஸ்சைவிட 6 வயது பெரியவர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'சலார்'.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சலார் போஸ்டர்
கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. 'சலார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

சலார் அறிவிப்பு
இந்நிலையில், 'சலார்' படத்தின் டீசர் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் இறுதியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
- இப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாவீரன்' திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான 'வா வீரா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. யுகபாரதி வரிகளில் பரத் சங்கர் மற்றும் வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'.கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், "மனிதநேயத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை" என்று 'லால் சலாம்' படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- நடிகர் விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் சமீபத்தில் வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 'மாமன்னன்' திரைப்படம் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
- நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 27). மண்பாண்ட கலைஞரான இவர் மண் பாண்டங்கள் மட்டுமல்லாமல் சிலைகள் மற்றும் கால்நடைகள் என அனைத்து விதமான உருவ பொம்மைகளையும் செய்து வருகிறார். தீவிர ரஜினி ரசிகரான இவர் தனது பெயரையே ரஜினி ரஞ்சித் என மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ரஜினியின் உருவ பொம்மை சிலை செய்த இவர் அதனை ரஜினியிடம் நேரில் கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார்.
தற்போது ரஜினி மகள் ஐஸ்வர்யா தயாரிக்கும் 'லால் சலாம்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்தநிலையில் மொய்தீன் பாய் சிலையை 2 அடி உயரத்தில் ஒரு மணி நேரத்தில் ரஞ்சித் செய்து முடித்துள்ளார். அந்த சிலையை ரஜினியை நேரில் சந்தித்து கொடுக்க உள்ளதாக ரஞ்ஜித் தெரிவித்துள்ளார்.
- மாணவி அமுதா பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
- இவரது குடும்பம் ஜூன் மாதம் ஒரு விபத்தில் இறந்து விட்டனர்.
சேலம், கல்பாறைப்பட்டி, செவ்வாய் காட்டில் வசித்து வரும் அமுதா என்ற மாணவி பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் ஜூன் மாதம் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். மொத்த குடும்பத்தையும் இழந்த அமுதா தன் படிப்பிற்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மாணவி அமுதாவிற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். இதற்கு முன்பு இசையமைப்பாளர் டி.இமான் அந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்து விவரங்களை பகிருமாறு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏழு ஆண்டுகளுக்கு பிறகு டிமான்ட்டி காலனி- 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.
2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7-ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

'டிமான்ட்டி காலனி -2' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் ஹரிஷ் கல்யாண் லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இந்த படத்தை டோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'டோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டோனி இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். உங்கள் நிழல்கூட உங்களை ரசிக்கும். நாங்களும் உங்கள் மீது அளவுக்கடந்த அன்பு வைத்திருக்கிறோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டோனி சார்" என்று மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.






