என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் திரைப்படம் ஜீனி.
- இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
அகிலன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, இறைவன், ஜெஆர்30 மற்றும் சைரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து ஜெயம் ரவியின் 32 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜீனி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கவுள்ளார்.

கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கெபி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வேல்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஜீனி படத்தின் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.விஜயகுமார் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
- இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றியவர் விஜயகுமார். 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற இவர் சென்னை அண்ணாநகரில் துணை கமிஷனராக பணியாற்றினார். அப்போதுதான் பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜி. ஆனார். கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி கோவையில் பதவியேற்று பணியில் ஈடுபட்டு வந்தார்.
டி.ஐ.ஜி. அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பீல்டு பகுதியில் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் முகாம் அலுவலகமும் (வீடு) உள்ளது. இங்குதான் டி.ஐ.ஜி. விஜயகுமார் தனது குடும்பத்தினருடனேயே தங்கி இருந்தார். இவர் இன்று காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பான விசாரணையில் டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஷால், டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது வருத்தமளிக்கிறது. இது அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியான செய்தி. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் அவரை பல முறை சந்தித்துள்ளேன். அவரது கடைசி முடிவு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் இறுதிச்சடங்குகள் தேனியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாமன்னன் திரைப்படம் தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.
- இப்படம் தமிழ்நாட்டில் 465-க்கும் அதிகமான திரையரங்குகளிலும், இந்தியாவின் பிற பகுதிகள் முழுவதும் 250-க்கும் மேலான திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மாமன்னன் போஸ்டர்
இந்நிலையில், 'மாமன்னன்' திரைப்படத்தின் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 'மாமன்னன் திரைப்படம் வெளியாகி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் 465-க்கும் அதிகமான திரையரங்குகளிலும், இந்தியாவின் பிற பகுதிகள் முழுவதும் 250-க்கும் மேலான திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாமன்னனை வெற்றி படமாக கொண்டாடும் மக்களின் பேராதரவுக்கு எங்கள் அன்பும், நன்றியும்" என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'டிமான்ட்டி காலனி- 2'
- இப்படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7-ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் நேற்று வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், இப்பாடலை பாராட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தலைவர் ரஜினியின் அட்டகாசமான ஸ்டைல், அனிருத் இசை, தமன்னா நடனம் மற்றும் ஜானியின் நடன அமைப்பு ஆகியவை 'காவாலா' பாடலுக்கு மேலும், ஆற்றலை சேர்க்கிறது. 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றியடைய படக்குழுவிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
- உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ’மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படம் தெலுங்கில் "நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹரிஷ் கல்யாண்-அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்து வரும் படம் லப்பர் பந்து.
- இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லப்பர் பந்து படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'மாவீரன்' திரைப்படம் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக நிலையில் படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரசிய தகவல்களை மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், மாவீரன் படக்குழு கமல் மற்றும் ரஜினியை படத்தில் பின்னணி குரல் கொடுக்க அணுகியதாகவும், ஆனால் அவர்கள் இருவரும் பட பணிகளில் பிசியாக இருப்பதால் இதில் இணைய முடியவில்லை. இருந்தாலும் படத்தில் ஒரு முக்கிய பிரபலம் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். அது உங்களுக்கு சர்ப்ரைசாக இருக்கும் என்றார்.
- இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'.
- இதில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் 'அடியே' படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில் அடியே படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் இரண்டாம் பாடலான "முதல் காதல்" பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'.
- இப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
- ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பஜாரி- தி பிகினிங்'.
- இப்படத்திற்கு பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
இயக்குனர் நிஜந்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'பஜாரி- தி பிகினிங்' . இதில், அறிமுக நடிகர் ஜான் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், ஹாசினி, 'காக்கா முட்டை 'புகழ் நடிகை சாந்தி மணி, தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜோ புரொடக்ஷன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வில்லிங்டன் தாமஸ் தயாரித்திருக்கிறார். பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரண் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இப்படம் குறித்து பி. சிரஞ்சீவி பேசியதாவது, 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணி ஒருவரின் கதை தான் இந்த ஹாரர் திரில்லர் திரைப்படமான 'பஜாரி'. 2000 வருடத்திற்கு முன் அந்த ராணியை அந்த ஊர் மக்கள் விவரிக்க இயலாத காரணத்திற்காக கொலை செய்திருப்பார்கள். அவர்களை பழி வாங்குவதற்காக அரக்கியாக அவர் அவதாரம் எடுக்கிறார். அரக்கியான பிறகு அவர் யாரை அழிக்கிறார்? என்பதனை படத்தின் முதல் பாகமாகவும், அவர் ராணியாக மக்களுக்கு சேவை செய்ததும், தவறான புரிதலுக்காக அவர் கொலை செய்யப்பட்டது போன்றவை இரண்டாம் பாகமாகவும் உருவாக்கி இருக்கிறோம்.

பஜாரி- தி பிகினிங் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
'காக்கா முட்டை' படத்தில் நடித்த சாந்தி மணி எனும் பாட்டி தான் கதையை விவரிக்கும் கதை சொல்லியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் சர்வதேச தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறோம். விரைவில் இசை மற்றும் முன்னோட்டம் வெளியாகும் என்று கூறினார்.
- 'ஜெய்பீம்' திரைப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான '2 டி' எண்டர்டைன்மென்ட்ஸ் தயாரித்தது.
- இப்படக்குழுவினர் மீது சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான '2 டி' எண்டர்டைன்மென்ட்ஸ் மற்றும் படக் குழுவினர் மீது, சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர்.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 'ஜெய்பீம்' படம் எடுக்கப்பட்ட நிலையில், காவல்துறை சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் உறவினரும், அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருமான கொளஞ்சியப்பன் என்பவர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை, தங்கள் அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியதாகவும், காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜாக்கண்ணுவின் உறவினர் கொளஞ்சியப்பன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி, விரைந்து விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், வழக்கை செப்டம்பர் 15 -ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.






