

2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7-ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.