என் மலர்
சினிமா செய்திகள்
- ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார்.
- இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் இன்று மாலை வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

இந்நிலையில், இந்த பாடல் வெளியான அரைமணி நேரத்தில் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார்.
- இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன.
2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் -நயன்தாராவிற்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இவர்கள் சமீபத்தில் தங்களது இரட்டை குழந்தைகளுடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது அவர்களது உறவினர்கள் திருச்சி, லால்குடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். அதாவது, லால்குடியில் உள்ள விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் மற்றும் கோயம்பத்தூரில் வசித்து வரும் குஞ்சிதபாதம் அவரது மனைவி சரோஜா ஆகியோர் புகார் மனு கொடுக்க வந்துள்ளனர்.

அப்போது குஞ்சிதபாதம் கூறியதாவது, தனக்கு உடல்நிலை சரியில்லை. இதயத்தில் நான்கு அடைப்புகள் உள்ளன. அதற்கு சிகிச்சை பெற வேண்டும். இது குறித்து லால்குடியில் வசித்து வரும் தனது அண்ணன் மாணிக்கத்திடம் உதவி கேட்டேன். தங்களது சொத்தில் வில்லங்கம் உள்ளதால் சொத்தை விற்று கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் சொத்தை விற்க வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர் வந்து வில்லங்கத்தை தீர்க்க வேண்டும் என லால்குடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
- ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் இன்று(6-ஆம் தேதி) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு புரோமோ வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் கவர்ச்சியான பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- பாலிவுட் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப்.
- இவர் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அனுராக் காஷ்யப்
இந்நிலையில், அனுராக் காஷ்யப் படத்தில் நடித்தது குறித்து பிரபல நடிகை அம்ருதா சுபாஷ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, அனுராக்குடன் எனது முதல் நெருக்கமான காட்சிகளை ஸேக்ரெட் கேம்ஸ் பாகம் இரண்டில் நடித்தேன். ஆண், பெண் பேதங்கள் இல்லை. அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுபவராக இருந்தார். அவர் இயக்குனர் குழுவை அழைத்தார். இக்காட்சிகளுக்கான படப்பிடிப்பு நேரங்களை சரியான தேதிகளில் அமைக்க உதவும் வகையில் எனது மாதவிடாய் தேதி குறித்து அவர்தான் என்னிடம் கேட்டறிந்தார். அத்தகைய தேதிகளில் உங்களால் இக்காட்சிகளில் நடிக்க முடியுமா? எனவும் கேட்டார். என்று கூறினார்.

அம்ருதா சுபாஷ்
அம்ருதா சுபாஷ் சமீபத்தில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெப் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கமல், தற்போது இந்தியன்-2 படத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.
- கமலின் 233வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார்.
நடிகர் கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து கமல், நாக் அஸ்வின் இயக்கத்தில் புராஜெக்ட் கே படத்தில் நடிக்கிறார். இதில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் கமல்ஹாசனின் "கேஎச்233" படத்தை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இப்படம் முழுக்க முழுக்க சமூக அக்கறைக் கொண்ட அரசியல் படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான வீடியோவில் "Rise to Rule" என்று குறிப்பிட்டுள்ளதாக கண்டிப்பாக இது அரசியல் படமாகவே இருக்கும் என்று பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
- இயக்குனர் வா.கவுதமன் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
- விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை படக்குழு தொடங்கவிருக்கிறது.
இயக்குனர் வா.கவுதமன் இயக்கி நடிக்கும் திரைப்படம் 'மாவீரா'.இப்படத்தில் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை வி.கே. புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். 'மாவீரா' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி ஆகிய பகுதிகளில் நிறைவடைந்த நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை படக்குழு தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில், 'மாவீரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெயரை 'மாவீரா படையாண்டவன்' என படக்குழு மாற்றி வைத்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் வா.கவுதமன் கூறியதாவது, அனைத்துவித வயதினரும் கொண்டாடும்படி ஒரு அதிரடியான ஆக்க்ஷன் திரைப்படமாக வெளிவந்து தமிழ் திரையுலகில் 'மாவீரா படையாண்டவன்' ஒரு மாபெரும் பேரதிர்வை ஏற்படுத்தும் என உறுதிபட செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
- விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் 'லியோ' கிளைமேக்ஸ் காட்சி குறித்து மிஷ்கின் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'லியோ' படத்தின் கிளைமேக்ஸில் ஒரு பாக்ஸ் எடுத்து என்னை விஜய் அடிக்க வேண்டும். அப்போது சண்டை பயிற்சியாளரை அழைத்து விஜய் நான் மிஷ்கினை அடிக்க மாட்டேன் என்று கூறினார். பின்னர் நான் விஜய்யிடம் அடி தம்பி ஒன்றும் இல்லை என்று கூறினேன். அதற்கு விஜய் இல்லை அப்படி செய்தால் உங்களுக்கு காயம் ஏற்படும் என்று கூறினார். நீ அடித்துதான் ஆக வேண்டும் என்று நான் கூறிய பின்னர் விஜய் அந்த காட்சியை செய்தார்" என்று பேசினார்.

'லியோ' குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது மிஷ்கின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து கூறியிருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், சிலர் இப்படி உளறிட்டீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
- தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தை தொடர்ந்து தனது 50வது படத்தை இயக்கி நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக நேற்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு தனுஷ்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் மரியான், ராஞ்சனா, அந்த்ராங்கி ரே ஆகிய மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. நான்காவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கமல்ஹாசன்.
- இவர் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்படம் சயின்ஸ் ஃபிக்சன் ரொமாண்டிக் காமெடியாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க அனிருத் இசையில் உருவாகும் எனவும் தன்னுடைய காதலுக்காக மொபைல் ஃபோன் மூலம் டைம் டிராவல் செய்யும் இளைஞனை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது உறுதியானால் இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'சலார்' படத்தின் டீசர் இன்று காலை 5.12 மணிக்கு வெளியானது.
- இந்த டீசர் தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. 'சலார்' திரைப்படத்தின் டீசர் இன்று காலை 5.12 மணிக்கு படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், 'சலார்' படத்தின் டீசர் வெளியாகி குறுகிய நேரத்தில் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 'மாமன்னன்' திரைப்படம் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து 'மாமன்னன்' படத்தின் மாபெரும் வெற்றியை படக்குழு கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் சிறு வயது அதிவீரனாக நடித்த சூர்யாவிற்கு உதயநிதி மற்றும் மாரி செல்வராஜ் லேப்டாப் வழங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின், "மாமன்னன் திரைப்படத்தில் சிறு வயது அதிவீரனாக சிறந்ததோர் நடிப்பை வெளிப்படுத்திய தம்பி சூர்யாவை இன்று நேரில் வாழ்த்தினோம். அவரது கல்விக்கு உதவிடும் வகையில் லேப்டாப் வழங்கி மகிழ்ந்தோம். சூர்யாவின் கல்விக்கும், வளர்ச்சிக்கும் என்றும் துணை நிற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ’மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படம் தெலுங்கில் வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாமன்னன் திரைப்படம் "நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளீல் வெளியாகிறதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.






