நான்காவது முறையாக தனுஷுடன் இணையும் ஏ.ஆர்.ரகுமான்

தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தை தொடர்ந்து தனது 50வது படத்தை இயக்கி நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக நேற்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
நான்காவது முறையாக தனுஷுடன் இணையும் ஏ.ஆர்.ரகுமான்
Published on

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு தனுஷ்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் மரியான், ராஞ்சனா, அந்த்ராங்கி ரே ஆகிய மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. நான்காவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com