திடீரென படத்தலைப்பை மாற்றி வைத்த இயக்குனர் கவுதமன்

இயக்குனர் வா.கவுதமன் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை படக்குழு தொடங்கவிருக்கிறது.
கவுதமன்
கவுதமன்
Published on

இயக்குனர் வா.கவுதமன் இயக்கி நடிக்கும் திரைப்படம் 'மாவீரா'.இப்படத்தில் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை வி.கே. புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். 'மாவீரா' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி ஆகிய பகுதிகளில் நிறைவடைந்த நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை படக்குழு தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில், 'மாவீரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெயரை 'மாவீரா படையாண்டவன்' என படக்குழு மாற்றி வைத்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் வா.கவுதமன் கூறியதாவது, அனைத்துவித வயதினரும் கொண்டாடும்படி ஒரு அதிரடியான ஆக்க்ஷன் திரைப்படமாக வெளிவந்து தமிழ் திரையுலகில் 'மாவீரா படையாண்டவன்' ஒரு மாபெரும் பேரதிர்வை ஏற்படுத்தும் என உறுதிபட செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com