அரைமணி நேரத்தில் அசத்திய ஜெயிலர் முதல் பாடல்.. வைரலாகும் வீடியோ

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார்.இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அரைமணி நேரத்தில் அசத்திய ஜெயிலர் முதல் பாடல்.. வைரலாகும் வீடியோ
Published on

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் இன்று மாலை வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

இந்நிலையில், இந்த பாடல் வெளியான அரைமணி நேரத்தில் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com