என் மலர்
சினிமா செய்திகள்
- சமந்தா தற்போது குஷி படத்தில் நடித்து வருகிறார்.
- மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகிறதாக சமந்தா உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சாகுந்தலம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார்.

சமந்தா, மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சமந்தா நடிப்பதில் இருந்து 6 மாதம் ஓய்வு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் மயோசிட்டிஸ் நோய் பாதிப்புக்காக வெளிநாட்டில் சிக்கிச்சை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சமந்தா, மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகிறதாக உருக்கமாக பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கவுள்ள படத்தில் ஆதித்யா வர்மா, மகான் படங்களில் நடித்த துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'.
- இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து 'சலார்' திரைப்படத்தின் டீசர் ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'சலார்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ’மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தை பார்த்த திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'மாமன்னன்' படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்த நடிகர் வடிவேலுவை படக்குழுவினர் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர். இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் 'மாமன்னன்' படத்தை புகழ்ந்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்.

முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு சார் இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை!
உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் நாளை (6-ஆம் தேதி) வெளியாகவுள்ளதாக படக்குழு புரோமோ வெளியிட்டிருந்தது.

ஜெயிலர் போஸ்டர்
இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கவர்ச்சியான உடையில் தமன்னா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகர் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் நடிக்கும் 50-வது படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

தனுஷ் 50 போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- நடிகர் வசந்த் ரவி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் மெஹ்ரின் பிரசன்டா கதாநாயகியாக நடிக்கிறார்.
ஐரா, நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் முன்னதாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான 'வி ஆர் பிரெக்னன்ட்' என்ற தொடரை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் புதிய படத்தை ஜெ.எஸ்.எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் இர்பான் மாலிக்கும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தனுஷின் 'பட்டாஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்த மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். மேலும், சுனி, அனிகா சுரேந்திரன், நடன இயக்குனர் கல்யாண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு 'சொப்பன சுந்தரி' படத்திற்கு இசையமைத்த அஜ்மல் தசீன் இசையமைக்கிறார். பிரபாகரன் ராகவன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக இயக்குனரும் நடிகருமான அமீர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சலங்கை துரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கடத்தல்’.
- இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
காத்தவராயன், காந்தர்வன், இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கடத்தல்'. இப்படத்தை பி.என்.ஆர். கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் கதாநாயகனாக எம்.ஆர். தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா,ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ் வாணன், ஆர். ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'கடத்தல்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, கடத்தல் இது என்ன கடத்தல், ஆள் கடத்தலா? எம்.எல்.ஏ.கடத்தலா? உலகிலேயே மிகப்பெரிய கடத்தல் நாள்கடத்தல் தான். நாம் அனைவரும் நாளைக் கடத்திக்கொண்டிருக்கிறோம். சில டைட்டில்களை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தோன்றும் அப்படியான டைட்டில் இந்தக் கடத்தல். இந்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். செல்வாக்கால் படம் வெற்றி பெறுவதாகச் சொன்னார்கள். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி படங்களை வெற்றிப்படமாக்கலாம் ஆனால் அந்த வெற்றி நிலைக்காது. எவர்கிரீன் வெற்றி என ஒன்று உண்டு, 10 வருடம் கழித்துப் படத்தின் டைட்டில் சொன்னால் நடித்த நடிகர்கள், படத்தின் கதை, சீன் எல்லாவற்றையும் மக்கள் சொல்வார்கள் அந்த வெற்றியைச் செல்வாக்கால் தர முடியாது.
சில படங்களுக்கு விளம்பரம் நிறையச் செய்ய முடியும் அவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளம்பரம் செய்து தியேட்டருக்கு ஆட்களை வரவைக்கிறார்கள். ஆனால் வெற்றியை மக்கள் தர வேண்டும். என்ன பிரச்சினையை வேண்டுமானாலும் படத்தில் சொல்லலாம் நமது வலியைச் சொல்லலாம் ஆனால் அதை மக்கள் அனைவரும் கனெக்ட் செய்து கொள்ள வேண்டும். ஆனால் மக்கள் சிலருக்கு வலியைத் தரும்படி படமெடுக்கக் கூடாது. வன்முறையைத் தூண்டக்கூடாது. இப்போது மக்கள் என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க என்று கவலையுடன் கேட்கிறார்கள். மக்கள் சில நேரம் படம் ஏன் சரியில்லை என கேட்பார்கள் ஆனால் அதை விட, என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க? எனக் கேட்பது பெரிய வலி.

சினிமாவில் தாழ்த்தப்பட்டவன் என யாருமில்லை. ஜெயித்தவன், ஜெயிக்கப்போகிறவன் என இரண்டே ஜாதிதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவன் என்ற சொல்லை, எனக்குச் சொல்லவே வலிக்கிறது. உலகமே கொண்டாடிய இசை மேதை ஜீனியஸ் தாழ்த்தப்பட்டவர், அவர் காலில் விழுந்து வணங்கவில்லையா அவரை ஜாதி பார்த்தார்களா சினிமாவில் ஜெயித்தவர் காலில் எல்லோரும் விழுவார்கள். அது தான் சினிமா, அவரை ஜாதி என்ன என பார்க்க மாட்டார்கள். என்னை உதவியாளராக சேர்த்த போது நான் என்ன ஜாதி என கேட்கவில்லை.
விஜய் சார் வாய்ப்பு தந்தார் அவர் என்னிடம் கதை தான் கேட்டார் ஜாதி கேட்கவில்லை, தயாரிப்பாளர் சவுத்திரி சார் ஜாதியைக் கேட்கவில்லை. வாய்ப்பு கேட்டு வருகிறவனிடம் ஜாதி என்ன என கேட்பவன் இயக்குனரே இல்லை. சிறுபான்மையினர், ஜாதி, மதம் இதையெல்லாம் சினிமாவில் கலக்காதீர்கள். இப்படி ஆரம்பித்தால் தேவர் மகன், கவுண்டர் மகன் என படம் வரும் தனித்தனி ஜாதி குழுக்கள் வரும். அதையெல்லாம் குறை சொல்லவில்லை. ஜாதிப்படம் வரட்டும் ஜாதிப்பெருமை பேசட்டும் ஆனால் அடுத்த ஜாதியைக் குறை சொல்லாதீர்கள். முன்பு நடந்த கதையை இப்போது பேசி பிரச்சினை ஆக்காதீர்கள். சினிமாவிற்குள் ஜாதி வேண்டாம் ஜாதியைக் கலக்காதீர்கள். கடத்தல் திரைப்பட குழுவினர் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி" என்று கூறினார்.
- ஒரு இளம்பெண்ணிடம் சினிமா தயாரிப்பாளர் படம் எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.
- பின்னர், நிதி பிரச்சினை காரணமாக படம் எடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக கூறி இருக்கிறார்.
கேரள மாநிலம் மலப்புரம் கீழபரம்பு பகுதியைச் சேர்ந்தவர் ஷாகிர், (வயது 46). இவர் ஒரு இளம்பெண்ணிடம் சினிமா தயாரிப்பாளர் எனவும், சினிமா படம் எடுக்க உள்ளதாகவும், அதில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் கூறி இருக்கிறார்.
இதனை நம்பிய அந்த இளம்பெண், ஷாகிர் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். மொத்தம் ரூ.27 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி படத்தில் எதுவும் அந்த இளம்பெண்ணை நடிக்க வைக்கவில்லை.
இது குறித்து அவர், ஷாகிரிடம் கேட்டுள்ளார். அப்போது நிதி பிரச்சினை காரணமாக படம் எடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக கூறி இருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளம்பெண், தான் கொடுத்த ரூ.27 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார்.
ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் தயாரிப்பாளர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி, செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்.
ஆகவே தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்தது, மற்றும் செல்போனில் ஆபாச படங்கள் அனுப்பி கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசில் அந்த இளம்பெண் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், சினிமா தயாரிப்பாளர் ஷாகிரை தேடி வந்தனர். அவர் கோழிக்கோட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.மோசடி தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’.
- இப்படத்திற்கு ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'மாமன்னன்' படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்த நடிகர் வடிவேலுவை படக்குழுவினர் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர். இதனை தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம், "மாமன்னன் படத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி வடிவேலு சார். நீங்கள் நடிக்கவில்லை கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளீர்கள். உங்களுடன் பணியாற்றியது பெருமையாக இருக்கிறது மற்றும் இதற்காக என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்று பதிவிட்டுள்ளனர்.
- நடிகர் மாதவன் இயக்கி நடித்த திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
- இப்படத்தில் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் மாதவன் நடித்திருந்தார்.

இப்படம் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை ஈட்டியது. மேலும், இந்த படத்தில் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதையடுத்து படத்தில் பணியாற்றியவர்களுக்கு விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை மாதவன் பரிசாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக பேசியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாமன்னன் படம் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, "நாட்டில் விலைவாசி ஏறிப்போச்சு. மாமன்னன் படம் ஓடுனா என்ன, ஓடலனா என்ன? இதுவா நாட்டு மக்களுக்கு தேவை? இதுவா வயிற்று பசியை போக்க போகுது? என்று தெரிவித்தார்.






