ஏ.ஆர்.ரகுமானுடன் இணையும் துருவ் விக்ரம்

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர்.ரகுமானுடன் இணையும் துருவ் விக்ரம்
Published on

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கவுள்ள படத்தில் ஆதித்யா வர்மா, மகான் படங்களில் நடித்த துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com