தனுஷ் 50-வது படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

நடிகர் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் நடிக்கும் 50-வது படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷ் 50-வது படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
Published on

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

தனுஷ் 50 போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com