இணையத்தில் வைரலாகும் ஜீனி கிளிம்ப்ஸ் வீடியோ

நடிகர் ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் திரைப்படம் ஜீனி.இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
இணையத்தில் வைரலாகும் ஜீனி கிளிம்ப்ஸ் வீடியோ
Published on

அகிலன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, இறைவன், ஜெஆர்30 மற்றும் சைரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து ஜெயம் ரவியின் 32 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜீனி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கவுள்ளார்.

கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கெபி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வேல்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஜீனி படத்தின் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com