என் மலர்
நீங்கள் தேடியது "டிஐஜி விஜயகுமார்"
- கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
- டிஐஜி விஜயகுமார் இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்கு பேரிழப்பாகும்.
சென்னை:
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் விஜயகுமார் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். விஜயகுமார் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.
அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்த விஜயகுமார் மிகவும் திறமையான அதிகாரி.
- டி.ஐ.ஜி. தற்கொலையில் அரசியல் செய்ய வேண்டாம்.
கோவை:
கோவையில் தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி விஜயகுமார் உடலுக்கு ஏ.டி.ஜி.பி. அருண் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்த விஜயகுமார் மிகவும் திறமையான அதிகாரி. அர்ப்பணிப்புடன் தனது வேலையை செய்து வந்தவர் ஆவார். அவர் தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
அவரது தற்கொலை தொடர்பாக நடத்திய விசாரணையில், அவர் கடந்த 2 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இதற்காக தொடர்ந்து டாக்டரிடம் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் அவர் இருந்ததாக தெரிகிறது.
இதனை அறிந்ததும் அவரது மனைவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சென்னையில் இருந்து உடனே கோவைக்கு வந்து கணவருடன் தங்கி உள்ளார். அவரிடம் ஐ.ஜி. உள்பட உயர் அதிகாரிகளும் பேசி அவரை மன அழுத்தத்தில் இருந்து மீட்க அறிவுரைகளை வழங்கினர்.
ஆனாலும் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமையோ, குடும்ப பிரச்சினையோ காரணம் இல்லை. மன அழுத்தத்தாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையில் அரசியல் செய்ய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் இன்று பிற்பகலில் தேனிக்கு கொண்டு வரப்படுகிறது.
- டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
தேனி:
கோவையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் சொந்த ஊர் தேனி மாவட்டம் அன்னஞ்சி அருகில் உள்ள ரத்தினம் நகராகும். விஜயகுமார் தனது பள்ளி படிப்பை போடி அணைக்கரைப்பட்டியில் உள்ள பள்ளியில் முடித்தார். இவரது தந்தை செல்லையா கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் ராஜாத்தி பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவருக்கு பிரேமலதா என்ற அக்காவும், நிர்மலா என்ற தங்கையும் உள்ளனர். நிர்மலா தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக உள்ளார். தேனி ரத்தினம் நகரில் விஜயகுமாரின் பெற்றோர் மட்டும் வசித்து வருகின்றனர். தனது மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து கதறி அழுதனர். தனது மகன் மிகவும் தைரியமானவன் என்றும், தற்கொலைக்கு யாரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் அறிவுரைகள் வழங்கி தேற்றுவார் எனவும் தெரிவித்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது ஆச்சரியமாக உள்ளது எனவும் கூறினர். டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் இன்று பிற்பகலில் தேனிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவால், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி. இரங்கல் தெரிவித்துள்ளார்.
- விஜயகுமார் ஐ.பி.எஸ். தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டும்.
சென்னை:
கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி. இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது தற்கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-
காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த விஜயகுமார் பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
ஆகவே, விஜயகுமார் ஐ.பி.எஸ். தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்ன ணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்து கிறேன்.
பா.ம.க.நிறுவனர் ராமதாஸ்:-
போலீஸ் அதிகாரி விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதை நம்ப முடியவில்லை. அவரது மன அழுத்தத்திற்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.
காவல்துறை அதிகாரி விஜயகுமாரின் தற்கொலையை அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன? என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க பா.ம.க. சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
- மன உளைச்சல் காரணமாக டி.ஐ.ஜி. விஜயகுமார் வீட்டிலேயே முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
- பிறந்தநாள் விழாவில் டி.ஐ.ஜி. விஜயகுமார் பங்கேற்று துணை கமிஷனர் மகனுக்கு பரிசுப்பொருள் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் தான் தங்கியிருக்கும் முகாம் அலுவலகத்தில் தினமும் அதிகாலை வேளையில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.
ஆனால் கடந்த 3 நாட்களாக அவர் நடைபயிற்சி செய்வதை தவிர்த்துள்ளார். மன உளைச்சல் காரணமாக அவர் வீட்டிலேயே முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையும் அவர் நடைபயிற்சி செய்யாமல் இருந்துள்ளார்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று மாலை கோவையில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இது தான் அவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியாகும்.
கோவை மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றும் சந்தீசின் மகன் பிறந்தநாள் விழா நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி பிறந்தநாள் விழாவில் டி.ஐ.ஜி. விஜயகுமார் பங்கேற்று துணை கமிஷனர் மகனுக்கு பரிசுப்பொருள் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விழாவில் அவர் அமைதியாக, இறுக்கமான மனநிலையிலேயே இருந்ததாக பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்தே இன்று காலை டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- டி.ஐ.ஜி.விஜயகுமார் உடல், அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் வசந்தம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
- டி.ஜி.பி. சங்கர்ஜூவால் சென்னையில் இருந்து தேனி மாவட்டம் அரண்மனைப்புதூருக்கு விரைகிறார்.
சென்னை:
கோவை முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்ததும் விஜயகுமாரின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
அங்கு உடற்கூராய்வு டாக்டர் பாலா தலைமையில் 4 மருத்துவர்கள் டி.ஐ.ஜியின் உடலை உடற்கூராய்வு செய்தனர். காலை 10.36 மணிக்கு தொடங்கிய உடற்கூராய்வானது காலை 11 மணிக்கு முடிந்தது.
அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை அறை முன்பு போலீஸ் சார்பில் டி.ஐ.ஜி. விஜயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அவரது உடல் முன்பு அவர் அணிந்திருந்த போலீஸ் சீருடை மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதில் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருண் ஆகியோர் விஜயகுமார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஐ.ஜி.சுதாகர், கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பத்ரிநாராயணன், திருப்பூர் எஸ்.பி.சாமிநாதன், நீலகிரி எஸ்.பி.பிரபாகர், ஈரோடு எஸ்.பி. ஜவஹர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் டி.ஐ.ஜி உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல், காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டது.
டி.ஐ.ஜி.விஜயகுமார் உடல் கார் மூலமாக, அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் வசந்தம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது.
இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி விஜயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் டி.ஜி.பி. சங்கர்ஜூவால் சென்னையில் இருந்து தேனி மாவட்டம் அரண்மனைப்புதூருக்கு விரைகிறார்.
அங்கு அவர் விஜயகுமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதுதவிர அவருடன் பணியாற்றிய சக போலீஸ்காரர்கள், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்துகின்றனர்.
அதன்பின்னர் அவரது உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.
- கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார்.
- திருவள்ளூரில் துணை கமிஷனராக பணியாற்றி இருக்கிறார்.
கோவை:
கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவி வகித்து வந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றினார். அப்போது அங்கு கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் தொடங்கியுள்ளது. அங்கும் அவர் சிறப்பான பணியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பின்னர் திருவள்ளூரில் துணை கமிஷனராக பணியாற்றி இருக்கிறார்.
தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை சி.பி.சி.ஐ.டி., திருவாரூர் போன்ற இடங்களிலும் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் நீட் தேர்வு மோசடி மற்றும் சிவசங்கர் பாபா வழக்குகளில் சிறப்பு விசாரணையும் நடத்தியுள்ளார்.
சென்னையில் அண்ணா நகர் துணை கமிஷனராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த ஜனவரி மாதம் தான் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவியேற்றதும் குறிப்பிடத்தக்கது.
- கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.விஜயகுமார் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
- இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றியவர் விஜயகுமார். 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற இவர் சென்னை அண்ணாநகரில் துணை கமிஷனராக பணியாற்றினார். அப்போதுதான் பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜி. ஆனார். கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி கோவையில் பதவியேற்று பணியில் ஈடுபட்டு வந்தார்.
டி.ஐ.ஜி. அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பீல்டு பகுதியில் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் முகாம் அலுவலகமும் (வீடு) உள்ளது. இங்குதான் டி.ஐ.ஜி. விஜயகுமார் தனது குடும்பத்தினருடனேயே தங்கி இருந்தார். இவர் இன்று காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பான விசாரணையில் டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஷால், டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது வருத்தமளிக்கிறது. இது அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியான செய்தி. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் அவரை பல முறை சந்தித்துள்ளேன். அவரது கடைசி முடிவு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் இறுதிச்சடங்குகள் தேனியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
- அரசியல் பிரமுகர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தேனி:
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் (45), இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் தேனி ரத்தினம் நகரில் வசிக்கும் அவரது பெற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், தேனி ரத்னம் நகரில் டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். அரசியல் பிரமுகர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
- கோவை சரகத்திற்கு வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று டி.ஐ.ஜி. மாத்திரை எடுத்துக்கொள்வார்.
- காலை 6.40 மணியளவில் பாலை குடித்துவிட்டு எனது அறைக்கு டி.ஐ.ஜி. வந்து DSR-ஐ பார்த்தார்.
சென்னை:
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான எப்.ஐ.ஆர். வெளியிடப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து தகவல்களை ஆயுதப்படை முதல்நிலைக் காவலர் ரவிச்சந்திரன் பதிவு செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
டி.ஐ.ஜி.யின் முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். கோவை சரகத்திற்கு வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று டி.ஐ.ஜி. மாத்திரை எடுத்துக்கொள்வார்.
DSR பார்ப்பதற்காக 7ம் தேதி காலை 6.30 மணிக்கு டி.ஐ.ஜி. வந்தார். அலுவலில் இருந்த காவலர் ரவிவர்மாவிடம் டி.ஐ.ஜி. விஜயகுமார் குடிப்பதற்கு பால் கேட்டார்.
காலை 6.40 மணியளவில் பாலை குடித்துவிட்டு எனது அறைக்கு டி.ஐ.ஜி. வந்து DSR-ஐ பார்த்தார். எனது துப்பாக்கியை கையில் எடுத்த டி.ஐ.ஜி. எப்படி பயன்படுத்துவது என்று கேட்டுக்கொண்டே வெளியில் சென்றார்.
நான் வெளியே வருவதற்குள் வெடிச்சத்தம் கேட்டது. தலையில் ரத்த காயத்துடன் மல்லாந்த நிலையில் டி.ஐ.ஜி. கீழே விழுந்து கிடந்தார்.
கோவை அரசு மருத்துவமனைக்கு டி.ஐ.ஜி.-ஐ கொண்டு சென்றோம். டி.ஐ.ஜி ஏற்கனவே இறந்துவிட்டாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 2016-ம் ஆண்டு முதல் நான் கோவை சரக டி.ஐ.ஜி.க்கு தனி பாதுகாப்பு காவலராக இருந்து வருகிறேன்.
- ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, டி.ஐ.ஜி. இறந்து விட்டதாக தெரிவித்தார்.
கோவை:
கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார் (வயது 45). இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி.
விஜயகுமார் கோவை டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே உள்ள முகாம் அலுவலகத்திலேயே (வீடு) குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
நேற்று காலை காலை 6 மணி அளவில் தனது வீட்டில் இருந்த டி.ஐ.ஜி விஜயகுமார், அறையை விட்டு வெளியில் வந்தார். அங்கிருந்த தனது பாதுகாவலரான ரவிச்சந்திரனிடம் கைத்துப்பாக்கியை வாங்கி கொண்டு வீட்டிற்குள் சென்றவர் திடீரென தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சியான பாதுகாவலர் சக போலீசார் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சியாகினர். டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மனைவி கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகளும் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊரான தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், டி.ஐ.ஜி. விஜயகுமார் 2 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்ததும், இதற்காக சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. மேலும் மன அழுத்தம் காரணமாகவே அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மன அழுத்தத்தால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பாதுகாவலரான ரவிச்சந்திரன், டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் புகார் அளித்துள்ள போலீஸ்காரர் ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது:-
எனது பெயர் ரவிச்சந்திரன். நான் கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தேன். ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறேன்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் நான் கோவை சரக டி.ஐ.ஜி.க்கு தனி பாதுகாப்பு காவலராக இருந்து வருகிறேன். இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக எனக்கு கோவை மாவட்ட ஆயுதப்படையில் இருந்து, 183 என்ற 9 எம்.எம் ரக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டது.
எனக்கு டி.ஐ.ஜி. முகாம் அலுவலகத்தில் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நான் தங்கி இருந்து பணியாற்றி வருகிறேன்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் டி.ஐ.ஜி விஜயகுமார் இங்கு வந்தார். அவர் வந்த நாளில் இருந்தே தனக்கு தூக்கம் வரவில்லை. அதனால் மாத்திரை எடுத்து கொள்கிறேன் என்று தெரிவிப்பார். தினமும் தூக்கத்திற்காக மாத்திரை எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
கடந்த 6-ந் தேதி நான் முகாம் அலுவலகத்தில் இருந்தேன். அப்போது டி.ஐ.ஜி. குடும்பத்துடன் வெளியில் சென்றார். பாதுகாப்புக்காக நாங்களும் சென்றோம். பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டோம். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. வீட்டிற்குள் சென்று ஓய்வெடுத்தார்.
வழக்கமாக டி.ஐ.ஜி விஜயகுமார் தினமும் காலை 7 மணிக்கு அலுவலகத்தில் உள்ள டி.எஸ்.ஆர் அறைக்கு வந்து டி.எஸ்.ஆரை (தினமும் பதிவாகும் வழக்கு விவரங்கள்) பார்ப்பது வழக்கம்.
ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக காலை 6.30 மணிக்கெல்லாம் டி.எஸ்.ஆர். அலுவலகத்திற்கு வந்து விட்டார். அப்போது முகாம் அலுவலகத்தில் இருந்த ரவிவர்மா என்பவரிடம் பால் கேட்டார். அவரும் பால் காய்ச்சி கொடுக்கவே அதனை அவர் குடித்தார்.
இதைபார்த்த நான் டி.எஸ்.ஆரை எடுத்து கொண்டு அவரிடம் செல்ல முயன்றேன். ஆனால் அதற்குள்ளாகவே சரியாக 6.40 மணிக்கெல்லாம் அவரே டி.எஸ்.ஆர் கேட்டு நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்து விட்டார்.
அங்கு வந்தவர் ரவிச்சந்திரன் டி.எஸ்.ஆர் எங்கே கொடுங்கள், பார்ப்போம் என கேட்டார். நானும் அதனை கொடுக்க, அதனை வாங்கி பார்த்தார். பின்னர் நான் பயன்படுத்தும் துப்பாக்கி வைத்திருந்த இடத்துக்கு டி.ஐ.ஜி. சென்றார்.
அங்கு சென்றவர் அந்த துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் அதனை பார்த்தார். அதனை பார்த்து விட்டு இந்த துப்பாக்கியை எப்படி பயன்படுத்த வேண்டும் என என்னிடம் கேட்டார்.
நான் சொல்லி கொண்டு இருந்த போதே துப்பாக்கியுடன் அவர் வெளியில் சென்று விட்டார். உடனே நான் டி-சர்ட் அணிந்து கொண்டு வெளியில் வர முயன்றேன். அதற்குள் வெளியே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நானும், என்னுடன் இருந்த டிரைவர் அன்பழகனும் ஓடி வந்து பார்த்தோம். அப்போது டி.ஐ.ஜி. மல்லாந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். என்னிடம் இருந்து எடுத்து சென்ற துப்பாக்கி அவரின் அருகிலேயே கிடந்தது.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான நாங்கள் இதனை அவரது மனைவியிடம் தெரிவிக்க சத்தம் போட்டு கொண்டே ஓடினோம். எங்களது சத்தம் கேட்டு, அவரும் ஓடி வந்து என்ன என்று கேட்டார். நாங்கள் நடந்தவற்றை தெரிவிக்க உடனடியாக அனைவரும் சேர்ந்து, முகாம் அலுவலகத்தில் இருந்து ஒரு காரில் உயிருக்கு போராடிய டி.ஐ.ஜியை தூக்கிக்கொண்டு காலை 7 மணியளவில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.
செல்லும் வழியிலேயே இதுபற்றிய தகவலை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டேன். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, டி.ஐ.ஜி. இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அவர் சுட்டு கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
- 2024 மக்களவை தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அ.தி.மு.க. தொடங்கி விட்டது.
தூத்துக்குடி:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளது வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் காவலர் நலவாழ்வு திட்டம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மன அழுத்தம் உள்ள காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டனர். ஆனால் அந்த காவலர் நலவாழ்வு திட்டத்தை தற்போதைய தி.மு.க. அரசு நிறுத்தி விட்டதாக தெரிகிறது.
அந்த திட்டம் இருந்திருந்தால் தற்போதைய டி.ஐ.ஜி. தற்கொலை ஏற்பட்டிருக்காது. டி.ஐ.ஜி. தற்கொலை பற்றி அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை. காவலர் குடும்பத்திலும் மன அழுத்தம் இல்லை. அவருக்கும் மன அழுத்தம் இல்லை என தெரிகிறது. எனவே அவரது இறப்பு தற்கொலையா என விசாரிக்க வேண்டும்.
தற்போதைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஊழல் பற்றி பேச தகுதி இல்லை. அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஊழல் வழக்கு உள்ள அவர் ஊழல் தடுப்பு பிரிவை கண்காணித்து வருகிறார். இது எப்படி சரியாக இருக்கும்.
தி.மு.க.வின் தற்போதைய அமைச்சர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்குகளில் தற்போதைய தி.மு.க. வக்கீல்கள் சரியான வாதங்களை எடுத்து வைக்காததால் அவர்கள் விடுதலையாகி வருகிறார்கள்.
தி.மு.க. அமைச்சர்கள் பாதி பேர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு பயந்து போய் உள்ளனர். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






