இருள் ஆளப்போகிறது.. ட்ரெண்டாகும் டிமான்ட்டி காலனி- 2 வீடியோ

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு டிமான்ட்டி காலனி- 2 திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.
இருள் ஆளப்போகிறது.. ட்ரெண்டாகும் டிமான்ட்டி காலனி- 2 வீடியோ
Published on

2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7-ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

'டிமான்ட்டி காலனி -2' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com