என் மலர்
சினிமா செய்திகள்
- 'மாமன்னன்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தின் வெற்றிக்காக படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்காக படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, இப்படத்தின் உண்மையான மாமன்னன் வடிவேலு தான். நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவர்க்கும் நன்றி . இந்த படத்திற்கு நாங்கள் (படக்குழு) கொடுத்த விளம்பரத்தை விட நீங்கள் கொடுத்த விளம்பரத்தால் தான் மக்கள் மத்தியில் இப்படத்தை எளிதில் கொண்டு போய் சேர்க்க முடிந்தது.

தமிழ், மலையாளம், கன்னடம் என மொத்தம் 9 நாள்களில் இப்படம் 52 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. என்னுடைய முதல் படமும் (ஒரு கல் ஒரு கண்ணாடி ) வெற்றி.. கடைசி படமும் வெற்றி. சமூக நீதி - சமத்துவம் பேசிய மாமன்னனின் வெற்றிக்கு துணை நின்ற பத்திரிகை - ஊடக - இணையதள நண்பர்களுக்கு அன்பும், நன்றியும்" என்றார்.
- சின்னத்திரை நடிகர்களான லதாராவ்-ராஜ்கமல் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
- போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல சின்னத்திரை நடிகை லதாராவ். இவரது கணவர் ராஜ்கமலும் சின்னத்திரை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர்களுக்கு மதுரவாயல், கிருஷ்ணா நகர், 15-வது தெருவில் பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டை அவர்கள் சினிமா மற்றும் டி.வி. படப்பிடிப்புக்கு வாடகைக்கு கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பூட்டி கிடந்த அந்த பங்களா வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. இதுபற்றி நடிகை லதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள எல்.இ.டி. டி.வி.யை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதேபோல் அதே பகுதியில் வசித்து வரும் திருவள்ளூர் மாவட்ட பா.ஜனதா பிரமுகர் பொன்.பிரபாகரன் என்பவரது வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட் டிருந்த காரையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியதுவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
- முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்காதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.
அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, காக்கா முட்டை, தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, ஃபர்ஹானா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலேயே நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னணி கதாநாயகர்களுடன் படங்களில் நடிக்காதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "காக்கா முட்டை படத்தில் நடித்த பிறகு நடிகர்கள் பலர் என்னை பாராட்டினர். ஆனால் யாரும் அவர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. காக்கா முட்டை படத்துக்கு பிறகு ஒன்றரை வருடம் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் சும்மாதான் இருந்தேன்.

என்னுடைய நடிப்பை பாராட்டிய தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் போன்ற சில முக்கிய நடிகர்களைத் தவிர, என்னுடைய நடிப்பை பாராட்டிய மற்ற நடிகர்கள் எனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை வழங்கவில்லை. கதாநாயகியை மையமாக வைத்து உருவான 15-க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்தும் கூட இதுவரை பெரிய நடிகர்கள் ஏன் எனக்கு வாய்ப்பு தரவில்லை என்று புரியவில்லை. எனவேதான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்தேன். எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.
- இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'.
- இப்படத்தின் இரண்டாம் பாடலை இசையமைப்பாளர் யுவன் பாடியுள்ளார்.
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் 'அடியே' படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. அடியே படத்தின் இரண்டாம் பாடலான "முதல் காதல்" பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் குரலில் வெளியான இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ்-ஜஸ்டின் பிரபாகரன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த பாடல் லைக்குகளை குவித்து வருகிறது.
- “காந்தாரா” திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரிஷப் ஷெட்டி.
- தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குனருமாக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் சமீபத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ரிஷப் ஷெட்டியை இந்தியா முழுவதும் அறியவைத்தது.

இவர் தற்போது "காந்தாரா" படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், ரிஷப் ஷெட்டி தனது 40வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கடந்த 7ஆம் தேதி கொண்டாடினார். அந்த விழாவில் "காந்தாரா" திரைப்படத்தில் இடம்பெற்ற 'பூத கோலா' நடனத்தை மேடையில் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதன்பின்னர் அவரது மனைவி பிரகதி, ரிஷப் ஷெட்டி பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்தார். இந்த அறக்கட்டளை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அறிவித்தார்.
ரிஷப் ஷெட்டியை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் திமிழில் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நவ்தீப்.
- இவர் விபத்தில் சிக்கி காலை உடைத்துக்கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் ஆர்யா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமான நவ்தீப், தொடர்ந்து நெஞ்சில், அஜித்குமாருடன் ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும், சீறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வீரமாதேவி படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ள நவ்தீப், சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றார்.

இந்நிலையில் நவ்தீப் விபத்தில் சிக்கி காலை உடைத்துக்கொண்ட தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க வீட்டுக்கு சென்ற நடிகை தேஜஸ்வி அங்கு நவ்தீப் கால் முறிவுக்கு சிகிச்சை எடுத்து கட்டுப்போட்டு ஊன்றுகோல் வைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி நவ்தீப், விரைவில் குணமடைய வாழ்த்தி வலைதளத்தில் பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
- அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அநீதி.
- இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
தமிழில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது "அநீதி" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூலை 21-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் 'அநீதி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது, "இத்திரைப்படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நான் மீண்டும் பிரவேசிக்கிறேன். இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம் கூட இல்லை.

அத்தனை எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார். அர்ஜுன் தாசை தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று கூறலாம். மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை. 'அநீதி' படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள். துஷரா விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். 'அநீதி' திரைப்படம் பெரிய வெற்றியை பெறும்" என்றார்.
- 'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற அதேசமயம் எதிர்ப்புகளும் கிளம்பியது.
- இந்த பாடல் போதைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'லியோ'. சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் இடம்பெற்றுள்ள விஜய் பாடிய 'நா ரெடி' பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் யூ-டியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேசமயம் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் போதைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வடசென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் சென்னை மாநகர காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்திருந்தார்.

இதனிடையே இப்பாடலுக்கான சென்சார் சான்றிதழ் குறித்த தகவலை அறிந்து கொள்ள மத்திய தணிக்கைக் குழுவை அவர் அணுகியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய தணிக்கைக்குழு, 'நா ரெடி' பாடலின் பொது வெளியீட்டிற்கு இதுவரை யு, ஏ, யு/ஏ போன்ற எந்தவித சான்றிதழும் வழங்கப்படவில்லை எனவும், சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த பாடல் திரைத்துறை தணிக்கை சட்டத்தின் கீழ் வராது எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அனுமதி பெறாமல் வெளியாகியுள்ள 'நா ரெடி' பாடலை நீக்கும்படி நீதிமன்றத்தை நாடப்போவதாக ஆர்.டி.ஐ. செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் அவர் மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"நா ரெடி" பாடலின் லிரிக் வீடியோவில் புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும் என டிஸ்க்ளைமர் (Disclaimer) இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தனியார் நிறுவனம் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்றார்.
- அப்போது அவர் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார்.
புதுடெல்லி:
பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தனியார் நிறுவனம் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்று பேசுகையில், நம் நாட்டில் மாற்றம் மெதுவாக உள்ளது. நாம் நமது மரபுகள் மற்றும் சிந்தனை செயல்முறைகளில் மூழ்கி இருக்கிறோம். கல்வி அறிவு இல்லாத அரசியல் தலைவர்கள் நம்மிடம் உள்ளனர் என குறிப்பிட்டார்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் கஜோவின் பேச்சுக்கு சிலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பத்திரிகையாளர் முகமது ஜூபைர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இதில் அவர் யாரையும் குறிப்பிடவில்லை, ஆனால் பல பக்தர்கள் கஜோலின் இந்த அறிக்கையை தங்கள் அன்பான தலைவரை அவமதிப்பதாக எடுத்துக் கொண்டனர் என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்து கஜோல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு கருத்தை மட்டுமே கூறினேன். எனது நோக்கம் எந்த அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்துவது அல்ல, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தும் சில சிறந்த தலைவர்கள் நம்மிடம் உள்ளனர் என பதிவிட்டிருந்தார்.
- சில தினங்களுக்கு முன்பு நரேஷ்-பவித்ரா லோகேஷ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
- இவர்களின் திருமணம் தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ், 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.

இதையடுத்து பவித்ரா லோகேஷ் முதல் கணவரை விட்டு பிரிந்து, நடிகர் நரேசை ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வருவதாக நரேசின் மனைவி ரம்யா ரகுபதி குற்றம்சாட்டியிருந்தார். இதை இருவரும் மறுத்த நிலையில் மைசூருவில் உள்ள ஓட்டலில் இருவரும் தங்கியிருந்தபோது ரம்யா ரகுபதியிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்கபாய்ந்தார் பின்னர் அவரை போலீசார் சமாதானப்படுத்தினர். சில தினங்களுக்கு முன்பு நரேஷ்-பவித்ரா லோகேஷ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை பகிர்ந்திருந்தனர். இவர்களின் திருமணம் கடந்த சில மாதங்களாக தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பவித்ரா- நரேஷ் இணைந்து நடித்த 'மல்லி பெல்லி' படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் இவர்களின் காதல் கதையை படமாக்கி இருந்ததாக கூறப்படுகிறது. படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் பிரபல ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த படத்தில் தன்னை இழிவுப்படுத்தும் காட்சிகள் உள்ளதாகவும் ஓடிடியில் இருந்து படத்தை நீக்க வேண்டும் என்றும் நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து 'மல்லி பெல்லி' திரைப்படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- வசந்த் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'அஸ்வின்ஸ்'.
- இப்படம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
தரமணி, ராக்கி ஆகிய படங்களில் நடித்த வசந்த் ரவி நடித்த திரைப்படம் 'அஸ்வின்ஸ்' (ASVINS). இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான தருண் தேஜா இயக்கினார். இப்படம் இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல்- ஹாரர் வகையைச் சேர்ந்தது.

இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்துள்ளது. இப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'அஸ்வின்ஸ்' திரைப்படம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் நடிகர் வசந்த் ரவி பேசியதாவது, வளர்ந்து வளம் நடிகருக்கு வெற்றி என்பது மிக முக்கியமானது. இதற்கு காரணமாக இருந்த என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பாபி சார் தமிழில் இனி பெரிய படங்கள் தயாரிப்பார். அதற்கு 'அஸ்வின்ஸ்' முதல் படமாக இருக்கும் என்று சொன்னேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. தருண் ஒரு எனர்ஜியான இயக்குனர். 'ராக்கி' அருண் எப்படி இப்போது தனுஷை வைத்து 'கேப்டன் மில்லர்' இயக்குகிறாரோ அதுபோல தருணுக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.

என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்திற்கு தியேட்டர் விசிட் போனபோது, பார்வையாளர்கள் கொடுத்த வரவேற்பு அவ்வளவு எமோஷனலாக இருந்தது. இதுபோல, ரிப்பீட் ஆடியன்ஸ் சமீப காலத்தில் எந்தவொரு படத்திற்கும் வரவில்லை. இது எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். படத்தின் இரண்டாவது பாகம் குறித்தான அறிவிப்பு சீக்கிரம் வரலாம் என்றார்.
- நடிகை கிரண் தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
'ஜெமினி' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். அதனை தொடர்ந்து அஜித்துடன் 'வில்லன்', பிரஷாந்துடன் 'வின்னர்', கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்', எஸ்ஜே சூர்யாவின் 'நியூ' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் வாடி எம்மா ஜக்கம்மா என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை வியக்க வைக்கிறார். அந்த வகையில் அன்பே சிவம் படத்தில் கமலுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை பதிவு செய்து இருந்தார். அடுத்ததாக கோவா சென்று பாரில் இருந்த கிரண் அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது மும்பை சென்று பிரபலமான ஆலிவர் பாரில் இருந்தபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதற்கு இணையத்தில் ரசிகர்கள் பாரில் காலத்தை கழித்து வருகிறார் என பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.






