என் மலர்
சினிமா செய்திகள்
- வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'தளபதி 68'.
- இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'தளபதி 68' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு வெந்து தணிந்தது காடு, கேப்டன் மில்லர் படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின்.
- இவர் தற்போது ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இவர் தற்போது தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ள 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், எந்த தனிப்பட்ட காரணங்களுக்காக சில காலம் நடிக்கவில்லை என்று மீரா ஜாஸ்மின் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, மாதவனுடன் 'ரன்', 'ஆய்த எழுத்து' படங்களில் நடித்திருக்கிறேன். சித்தார்த்தும் 'ஆய்த எழுத்து' படத்தில் நடித்திருந்தார். அவர்களுடன் 'டெஸ்ட்' படத்தில் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.
நயன்தாராவுடனும் இந்தப் படத்தில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது. இடையில் சில காலம் என் தனிப்பட்ட காரணங்களுக்காக நடிக்கவில்லை. இப்போது மீண்டும் நடிப்பைத் தொடங்கி இருக்கிறேன். எனது சமூகவலைதளப் படங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து நேர்மறையான கருத்துகள் வருகின்றன. என்னைப் பின்தொடர்பவர்களுக்கு இதையெல்லாம் பகிர்வதற்கு சமூக வலைதளம் உதவுகிறது என்று பேசினார்.
- நடிகர் போண்டாமணி பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
- இவர் சமீபத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.

சமீபத்தில் நடிகர் போண்டாமணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது நலமுடன் உள்ளார். இவரின் சிகிச்சைக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் தமிழ் நாடு அரசு பல உதவிகள் செய்தது.
இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் மருத்துவ முகாம் மற்றும் இலவச மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர் போண்டா மணி பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது பெரிய திரை சங்கம் வரவில்லை சின்னத்திரை சங்கம் தான் ஓடி வந்து உதவியது. இன்றைக்கு நான் உயிருடன் வாழக் காரணமே தமிழ்நாடு முதலமைச்சர் தான். அவருக்கு நன்றி சொல்லணும்.

என்னுடைய நிலைமையை ஊடகங்கள் தான் எல்லாரிடமும் கொண்டு போய் சேர்த்தார்கள். அதைப் பார்த்துத்தான் முதலமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை அனுப்பி வைத்தார். அதனால் தான் எனக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அதனால் தான் இன்றைக்கு நான் எம தர்மனிடம் இருந்து மீண்டு வந்து உட்கார்ந்து இருக்கிறேன். மீண்டும் கலைத்துறையில் இறங்கிவிட்டேன். மிகவும் பெருமையாக இருக்கிறது. பெரிய திரை சங்கத்தைவிட சின்னத்திரை நண்பர்கள் தான் நிறைய உதவி செய்தார்கள். மகளிர் குழுவினர் வந்து உதவி செய்தார்கள்.
அதேபோல் சின்னத்திரை கலைஞர்கள் நிறையப் பேர் வந்து உதவி செய்தார்கள். பெரிய திரையை எடுத்துக் கொண்டால் நடிகர்கள் ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி சாருக்கு எல்லாம் நன்றி சொல்ல வேண்டும். வடிவேல் சார் உதவி செய்யவில்லை என்று நிறையப் பேர் சொன்னார்கள். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. போண்டாமணியை உலகத்திற்கு தெரியவைத்ததே வடிவேலுசார் தான். வடிவேல் உடன் சேர்ந்து நடித்ததால் தான் போண்டா மணி என்ற ஒருத்தன் இருப்பது உலகத்திற்கு தெரியவந்தது. ஒருவர் நமக்கு செய்யவில்லை என்று வருத்தப்படக்கூடாது. நானும் நடிச்சேன். ஆனால் சேர்த்து வைக்கவில்லை. அந்த அளவுக்கு சம்பாதிக்கவில்லை. அதுதான் உண்மை" என்று கூறினார்.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'தளபதி 68'.
- இப்படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

'தளபதி 68' படத்தின் நடிகர், நடிகைக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிகர் ஜெய்-ஐ நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. 'பகவதி' படத்தை தொடர்ந்து, 21 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் உடன் நடிகர் ஜெய் இணையவுள்ளதாக வெளியாகும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28, சரோஜா, கோவா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 -2 உள்ளிட்ட படங்களில் ஜெய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் சூர்யா ’கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவரின் பிறந்தநாளன்றும் ரசிகர்கள் அவர்களின் நற்பணி மன்றம் சார்பாக பலவிதமான உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். இரத்ததானம், அன்னதானம், மாணவர்களின் கல்விக்கு உதவுவது போன்ற பல செயல்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா வருகிற 23-ஆம் தேதி தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்நிலையில், சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக ரசிகர்கள் பழனி அருகே உள்ள குட்டிக்கரடு கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியினருக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அரசு ஆவணங்களை பதிவு செய்ய இலவசமாக முகாம் நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சாலையோர வாசிகளுக்கு ஒருமாத காலமாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உணவும் வழங்கி வருகின்றனர்.

நடிகர் சூர்யா இயக்குனர் சிவா இயக்கத்தில் தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- சமந்தா -விஜய் தேவரகொண்டா இணைந்து தற்போது 'குஷி' திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
- இப்படத்தின் இரண்டாம் பாடலான "ஆராத்யா" பாடல் 12ம் தேதி வெளியாகவுள்ளது.
சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'என் ரோஜா நீயே' பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

'குஷி' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாம் பாடலான ஆராத்யா பாடல் 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்பாடலின் புரோமோ வீடியோ இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- வனிதா விஜயகுமார் தற்போது நடித்து வரும் படம் “கடைசி தோட்டா”.
- மர்டர் மிஸ்டரி ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வனிதா நடிக்கிறார்.
இயக்குனர் நவீன் இயக்கத்தில் ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படம் "கடைசி தோட்டா". இப்படத்தில் வனிதா விஜயகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ராதாரவி, ஸ்ரீகுமார், வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மர்டர் மிஸ்டரி ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரியாக நடிக்கும் வனிதா விஜயகுமார், சுருட்டு பிடிக்கும் அதிகாரியாக நடித்திருக்கிறார். வி.ஆர்.சுவாமிநாதன் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை சினேகன் எழுதியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியான “ராஞ்சனா” படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
- இப்படத்தில் இடம்பெற்ற ஹூவா மை தேரா பாடலுக்கு ஒரு இளம் தம்பதி நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனஷ் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இந்தி படம் "ராஞ்சனா". இப்படத்தில் இடம்பெற்ற ஹூவா மை தேரா பாடலுக்கு ஒரு இளம் தம்பதி நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடகர் ஜஸ்விந்தர் சிங் மற்றும் ஷிராஸ் உப்பல் ஆகியோர் பாடியிருந்த இந்த பாடல் ஹிட் ஆகி இருந்தது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இந்த பாடலுக்கு சக்தி கோக்ரு-முகன் கோத்தாரி என்ற இளம்ஜோடி நடனமாடிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது. இந்த வீடியோ பலரையும் கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
- ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'.இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இது வெறும் ஆரம்பம்.. இனிமே தான் ஆட்டமே.. போன்ற மாஸான வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட்.
- இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை தோனி மற்றும் சாக்ஷி தோனி இன்று வெளியிடவுள்ளனர்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை தோனி மற்றும் சாக்ஷி தோனி இன்று (10.07.2023) வெளியிடவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான சக்தி ஃபிலிம் பேக்ட்ரி நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
- தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் உள்ளனர். 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.

அப்போது புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ற அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை. இதையடுத்து நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற விநாயக சதூர்த்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' படத்தின் டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்து, விஷால் டப்பிங் பணிகளில் ஈடுப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






