என் மலர்
சினிமா செய்திகள்
- தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து.
- இவர் ஹிமாச்சல் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை வெள்ளம் குறித்து கவிதை எழுதியுள்ளார்.
1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.

இந்நிலையில் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, ஹிமாச்சல் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு குறித்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதில்,
இமாசலப் பிரதேசத்தின்
மழைப் படையெடுப்பில்
மலை வீழ்கிறது
அந்த வெள்ளத்தில்
மழையே மூழ்கிவிட்டது
என்ற கவிதை காட்சியாவது
கவலை தருகிறது
தீவிர மீட்சி தேவை
புவி வெப்பம் என்பது
பூமிபிளக்கும் வறட்சியும் தரும்
விலாவறுக்கும் வெள்ளமும் தரும்
உலக நாடுகளின் கவனத்திற்கு... என்று பதிவிட்டுள்ளார்.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சிவகார்த்திகேயன், "பொதுவாக படத்தின் ரிலீஸ் பற்றிய பதற்றம் இருக்கும், ஆனால் இந்த படத்தை உங்களுக்கு காட்ட வேண்டும் என்ற ஆர்வம் தான் அதிகமாக இருக்கிறது. மடோன் அஸ்வின் படத்தில் சமூக அக்கறையும், சமூக பார்வையும் இருக்கும். இதனை அனைவரும் விரும்பும் வகையில் கொடுப்பார்.

இந்த படத்திலும் அவரின் சமூக அக்கறை இருக்கிறது. பார்வையாளர்களிடம் கருத்து சொல்லும் வசனங்கள் படத்தில் இல்லை. ஆனால், படம் பார்த்து முடித்த பிறகு அந்த கருத்து மக்களிடம் போய் சேர்ந்திருக்கும். மிஷ்கின் சாரின் படங்கள் என்னுடைய ஃபேவரைட். அவர் ஸ்ட்ரிக்டான ஆள் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர் ரொம்ப ஸ்வீட். போன படம் சறுக்கிவிட்டது. பொதுவாக தோல்விகளுக்கு மட்டும் நான் பொறுப்பேற்றுகொள்வேன். வெற்றி என்பது மொத்த குழுவின் உழைப்பால் கிடைப்பது" என்றார்.
- திமுகவைச் சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் புகார்.
- கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவைச் சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் அளித்த புகாரின் பேரில், கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, கனல் கண்ணன் சமீபத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் மதபோதகரின் நடன வீடியோவை வெளியிட்டது தொடர்பான புகாரில் கனல் கண்ணனை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நிலையில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என கூறினார்.
- விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வபோது வழங்கி வருகிறார்.
விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில், நடிகர் விஜய் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என கூறினார்.
மேலும், விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வபோது வழங்கி வருகிறார்.
இதனால், நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்குகிறார் என்ற வெளிப்படையாக அறிவிக்கப்படாத தகவல் வலம் வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நாளை காலை 9 மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய மற்றும் அடுத்தகட்ட செயல் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகி... அரசியலில் கவனம் செலுத்துவதாக அறிவிப்பாரா விஜய்? என்ற கேள்விகள் எழுந்துள்ளதால் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- கிரிக்கெட் வீரர் டோனி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட்.
- காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டோனி, அவரது மனைவி சாக்ஷி சிங் டோனி, ஹரிஷ் கல்யாண், யுவனா, யோகி பாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் டோனி பேசியதாவது, "என்னுடைய டெஸ்ட் அறிமுகம் இங்கே சென்னையில்தான் நடந்தது. என்னுடைய அதிகபட்ச ஸ்கோரை சென்னையில்தான் ஸ்கோர் செய்தேன். ஐ.பி.எல். போட்டி நடந்த போது என்னை தமிழகம் தத்தெடுத்தது.
தன் மனைவி எப்போதெல்லாம் எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது என்று கூறுகிறாளோ அப்போது கணவன் பயப்படுகிறான், இதுதான் எல்.ஜி.எம். இரண்டு பெண்களுக்கு நடுவே ஹரீஷ் கல்யாண் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். சாண்ட்விச்சுக்கு நடுவே சிக்கியதை போலத்தான் இருந்தது ஹரீஷின் நிலைமை. நான் சாக்ஷியிடன் ஒரு விஷயம் தான் கூறினேன். இது வீடு கட்டுவது போன்றது அல்ல கதைக்களம் முடிவு செய்து நடிகர்களை தேடுவது. ஒரு தடவை நீங்கள் முடிவு செய்துவிட்டால் முழுமையாக ஈடுபடுங்கள் என்று கூறினேன்.

இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிப் பட வேலைகளில் இறங்கிய போது ஒன்றே ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னேன். கிரிக்கெட் ஆடும்போது நாங்கள் நல்ல உணவைத்தான் எதிர்பார்ப்போம். அதுபோல இங்கேயும் எல்லாருக்கும் முறையான நல்ல சாப்பாட்டைக் கொடுக்கச் சொன்னோம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்படக் குழுவில் உள்ள அனைவருக்கும் நல்ல உணவைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என்று கூறினார்.
- பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.
- ரவீந்தர் மீது கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக பணமோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல டி.வி. நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டு சமூக வலை தளங்களில் பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்தர். முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்னன்னு தெரியுமா?, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள ரவீந்தர் மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- கிளப் ஹவுஸ் என்கிற செயலி மூலமாக அறிமுகமான ரவீந்தர் என்னிடம் நன்றாக பழகினார். இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் அவர் என்னிடம் ரூ.20 லட்சம் கடன் கேட்டார். சினிமா நடிகர் ஒருவருக்கு 'அட்வான்ஸ்' கொடுக்க வேண்டி இருப்பதாக கூறி இந்த பணத்தை என்னிடம் அவர் கேட்டார். நான் ரூ.15 லட்சம் பணம் மட்டும் தன்னிடம் உள்ளதாக கூறி அந்த பணத்தை 2 தவணையாக ரவீந்தரின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தேன்.
இந்த பணத்தை ரவீந்தர் அவர் சொன்னபடி திருப்பி தரவில்லை. இதுபற்றி பல முறை தொடர்பு கொண்டு கேட்டும் அவர் என்னை அலைக்கழித்தார். சில நேரங்களில் அவதூறாக பேசினார். பின்னர் எனது செல்போன் அழைப்பை எடுக்காமல் பிளாக் செய்து விட்டார். ரவீந்தர் என்னிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அதுபற்றி உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தயாரிப்பாளர் ரவீந்தர் தரப்பில் இருந்து இந்த பணத்தை உடனடியாக கொடுத்துவிடுவதாக கூறியும் புகாரை வாபஸ் பெருமாறும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை விஜய்க்கு உரிய பணத்தை ரவீந்தர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் மீது மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ரவீந்தர்க்கு நேரடியாக சம்மன் அனுப்பட்ட நிலையில் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரவீந்தர் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
- நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது நடித்துள்ள திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட்.
- இப்படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. காமெடியாக உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- கிரிக்கெட் வீரர் டோனி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட்.
- காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டோனி, அவரது மனைவி சாக்ஷி சிங் டோனி, ஹரிஷ் கல்யாண், யுவனா, யோகி பாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் யோகிபாபு பேசியதாவது, லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. இயக்குனர் ரமேஷ் தமிழ் மணி இந்த படத்தில் நடிப்பதற்காக என்னிடம் ஹால்சீட் கேட்டிருந்தார். அப்போது நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் டோனியிடம் இருந்து பேட் வாங்கி தருவதாக் கூறினார். டோனி சாரின் பேட்டுக்காக நடிக்க ஒத்துக் கொண்டேன் என்று பேசினார்.
- நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'லெட்ஸ் கெட் மேரிட்'.
- இப்படத்தை 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கிறது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டோனி, அவரது மனைவி சாக்ஷி சிங் டோனி, ஹரிஷ் கல்யாண், யுவனா, யோகி பாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஹரிஷ் கல்யாண், " லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. 16 வருசத்துல இந்த சீசன்ல தான் ஐ.பி.எல் மேட்ச் பார்த்தேன்" என்று கூறினார்.
- விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' திரைப்படத்தில் தனக்கான காட்சிகளை விஜய் நடித்து முடித்துள்ளார். இதனை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். மேலும், "இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி அண்ணா" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
And it's a wrap for our @actorvijay portion! ??
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 10, 2023
Thank you for making the second outing yet again a special one na! ❤️#Leo ?? pic.twitter.com/t0lmM18CVt
- விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொலை’.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது கிரைம் திரில்லர் வகை படமான 'கொலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில், இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, சினிமா என்பது கூத்து என்ற கலையில் இருந்துதான் வந்தது. சினிமா எனும் கலையை புரிந்து இயங்குபவர்கள் இங்கு குறைவு. என்னைப் பார்ப்பவர்களே என்ன சார் அடுத்து கொலை படமா என்று கேட்பார்கள். அப்படி என் படங்களை சுருக்கி விட்டார்கள். 'கொலை' என்ற இந்தப் படத்தின் டைட்டில் எழுத்துக்காக இயக்குனர் அவ்வளவு சண்டைப்போட்டிருப்பார். ஒரு நல்ல இயக்குனர் படத்தலைப்பின் எழுத்திற்காக வேலை செய்கிறார்.

கொலை இசை வெளியீட்டு விழா
இந்த எழுத்தின் மூலம் என் ஒட்டுமொத்த படத்தையும் புரிந்து கொள்ள முடியுமா என்று இயக்குனர் யோசிப்பார். மகாபாரதம், ராமாயணம் என இதிகாசங்களில் கொலை. ஷேக்ஸ்பியரின் நாவல்களில் நான்கு கொலை பற்றிதான் சொல்கிறது. அது ஏன் என்று யோசிப்பவர்களால்தான் இதுபோன்ற படங்களை உருவாக்க முடியும். அந்த வகையில், இயக்குனர் பாலாஜிக்கு நன்றி. தொடர்ந்து அவர் கொலை படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
- நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.
- இவர் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். இந்த கூட்டணியின் மூலம் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்-இல் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான 50 சென்ட் கலந்து கொள்கிறார்.

விஜய பிரபாகரன்
சர்வதேச அளவில் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன். தன்னிகரற்ற பாடல் வரிகளை எழுதுவதில் புகழ்பெற்ற 50 சென்ட், முதன் முதலில் வெளியிட்ட "Get Rich or Die Tryin" பட்டித்தொட்டி எங்கும் சென்றடைந்து. இந்த ஆல்பம் இவரது புகழை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்தது. இந்த ஆல்பத்தில் உள்ள "In da club", "p.i.m.p" மற்றும் "candy shop" போன்ற பாடல்கள் ரசிகர்களை இன்றும் கவர்ந்து வருகிறது.
இவரது உலகளாவிய இசைக்கச்சேரி "The Final Lap Tour 2023" இந்தியாவில் நவம்பர் 25 -ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நடைபெற உள்ளது. இதனை விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் வி.ஜெ.பி. (VJP) மற்றும் டராக்டிகல் (Tracktical) கான்சர்ட்ஸ் என்ற இரு முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைந்து 50 சென்ட்-இன் வரலாறு, பிரபல பாடல்கள் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாடல்கள் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி குறித்து விஜய பிரபாகரன் கூறும்போது, திரை மற்றும் கலை உலகில் எனது தந்தை விஜயகாந்திற்கு ஒரு தனி அடையாளம் உள்ளது. அதை முன் எடுத்துச் செல்லும் வழியில் எனது இந்த முயற்சி புதிதாகவும், கலை துறையில் ஒரு மாறுபட்ட தொடக்கமாக இருக்கும் என்று கூறினார்.






