என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நாளை ஆலோசனை
    X

    விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நாளை ஆலோசனை

    • மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என கூறினார்.
    • விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வபோது வழங்கி வருகிறார்.

    விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சமீபத்தில், நடிகர் விஜய் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.

    மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என கூறினார்.

    மேலும், விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வபோது வழங்கி வருகிறார்.

    இதனால், நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்குகிறார் என்ற வெளிப்படையாக அறிவிக்கப்படாத தகவல் வலம் வருகிறது.

    இந்நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நாளை காலை 9 மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய மற்றும் அடுத்தகட்ட செயல் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

    சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகி... அரசியலில் கவனம் செலுத்துவதாக அறிவிப்பாரா விஜய்? என்ற கேள்விகள் எழுந்துள்ளதால் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


    Next Story
    ×