ஜி.வி.பிரகாஷ்-ஜஸ்டின் பிரபாகரன்-யுவன் கூட்டணியில் வெளியான பாடல்

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'.இப்படத்தின் இரண்டாம் பாடலை இசையமைப்பாளர் யுவன் பாடியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்-ஜஸ்டின் பிரபாகரன்-யுவன் கூட்டணியில் வெளியான பாடல்
Published on

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் 'அடியே' படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. அடியே படத்தின் இரண்டாம் பாடலான "முதல் காதல்" பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் குரலில் வெளியான இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ்-ஜஸ்டின் பிரபாகரன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த பாடல் லைக்குகளை குவித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com