இவரை தமிழ் திரையுலகின் ஷாருக்கான் என்று கூறலாம்... வனிதா விஜயகுமார் நெகிழ்ச்சி

அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அநீதி.இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இவரை தமிழ் திரையுலகின் ஷாருக்கான் என்று கூறலாம்... வனிதா விஜயகுமார் நெகிழ்ச்சி
Published on

தமிழில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது "அநீதி" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூலை 21-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. 

இந்நிலையில் 'அநீதி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது, "இத்திரைப்படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நான் மீண்டும் பிரவேசிக்கிறேன். இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம் கூட இல்லை.

அத்தனை எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார். அர்ஜுன் தாசை தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று கூறலாம். மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை. 'அநீதி' படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள். துஷரா விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். 'அநீதி' திரைப்படம் பெரிய வெற்றியை பெறும்" என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com