என் மலர்
சினிமா செய்திகள்
- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
- தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகின்றனர். கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.
சமீபத்தில் 'வடக்கன்' படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'வடக்கன்' திரைப்படம் வருகிற மே 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான் தான் கிங்கு' படத்தில் சந்தானம் நடித்துள்ளார்.
- சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான் தான் கிங்கு' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. முதலில் படம் வரும் மே மாதம் 10 ஆம் தேதி வெளியாக போவதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் படம் தற்பொழுது மே 17 ஆம் தேதி வெளியாகும் என வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாடலான மாலு மாலு என்ற பாடல் இன்று மதிய வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படம் குறித்த அப்டேட்டை நடிகர் விக்ரம் தன்னுடைய 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.
- இந்த படத்துக்கு தற்போது 'பைசன்' (Bison) என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019- ம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 'மகான்' படத்தில் தந்தையுடன் நடித்தார். இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
இந்நிலையில் துருவ்விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார்.
இந்த படம் குறித்த ஒரு அப்டேட்டை நடிகர் விக்ரம் தன்னுடைய 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.

அதில், வருகிறான் என்ற வாசகத்தை குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தார். இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று வெளியாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு இந்த படத்தின் 'டைட்டில்' இன்று வெளியிடப்பட்டது.இந்த படத்துக்கு தற்போது 'பைசன்' (Bison) என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.இதனை பட தயாரிப்பு குழு அறிவித்தது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 10-ந்தேதி 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்து இருந்தது.
- தயாரிப்பு குழு தற்போது 'ரிலீஸ்' தேதியை ஒத்தி வைத்து உள்ளது.
சின்னத்திரையில் காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் 2004- ம் ஆண்டு வெளியான 'மன்மதன்' படத்தின் மூலம் நடிகர் சிம்புவால் சினிமாவில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து 'சச்சின், பொல்லாதவன், சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் காமெடிய நடிகராக கலக்கினார்
மேலும் சந்தானம். 2012-ம் ஆண்டு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2013-ல் :கண்ணா லட்டு திண்ண ஆசையா' படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் ஆனார்.

2014-ம் ஆண்டு ஸ்ரீநாத் இயக்கத்தில் வெளிவந்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படம் மூலம் முழுநேர கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் தொடர்ந்து ஹீரோவாகவே சந்தானம் நடித்து வருகிறார்.
சில படங்கள் வெற்றி பெற்றாலும், பல படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவில் வசூல் செய்ய வில்லை. இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத் தொடர்ந்து "இங்க நான் தான் கிங்கு" என்ற படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கினார். எழிச்சுர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.
கோபுரம் பிலிம் புரொடக்ஷன் இந்த படத்தை தயாரித்துள்ளது. மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் இதில் நடித்து உள்ளனர்.

பிரியாலயா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்கை' கமல்ஹாசன் கடந்த மாதம் வெளியிட்டார். இப்படத்தின் டிரைலர் கடந்த 26 - ந்தேதி வெளியிடப்பட்டது.
இப்படம் வருகிற 10-ந்தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்நிலையில் பட தயாரிப்பு குழு தற்போது திடீரென 'ரிலீஸ்' தேதியை ஒத்தி வைத்து உள்ளது. மேலும் வருகிற 17- ந்தேதி (மே) தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்படும் என அறிவித்து உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டைட்டானிக் தவிர பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
- பார்பரா டிக்சன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 79 ஆகும். உலகளவில் மிகவும் பிரபலமான திரைப்படம் டைட்டானிக்-இல் கேப்டன் எட்வார்ட் ஜான் ஸ்மித் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் பெர்னார்ட் ஹில். டைட்டானிக் தவிர தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மற்றும் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.
பெர்னார்ட் ஹில் உயிரிழப்பு தொடர்பாக அவரது குடும்பத்தினர் விரைவில் தகவல் தெரிவிப்பர் என்று தெரிகிறது. இவரது மறைவு தொடர்பான தகவலை டைட்டானிக் படத்தில் இவருடன் நடித்த பார்பரா டிக்சன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பதிவில், "பெர்னார்ட் ஹில் உயிரிழந்தார் என்ற தகவலை மிகவும் துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் இருவரும் ஜான் பால் ஜார்ஜ் ரிங்கோ மற்றும் பெர்ட், வில்லி ரசல்-இன் அற்புதமான நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அவருடன் இணைந்து பணியாற்றியது பெருமையாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல் பென்னி," என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜாபர் சாதிக் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அப்படத்தில் நடித்த என்னை பற்றி அவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள்.
- என் கருத்தியலோடு மோத முடியாதவர்கள், என் மீது அவதூறுகள் பரப்பி என்னை வீழ்த்த நினைக்கிறார்கள்
இயக்குநர் அமீர் நடித்துள்ள 'உயிர் தமிழுக்கு' என்ற திரைப்படம் வரும் மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அரசியல் நையாண்டிப் படமான இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பேசிய அமீர், "ஜாபர் சாதிக்கை எனக்கு தெரியும், அவருடன் பழகியிருக்கிறேன். ஆனால், அவர் என்னவெல்லாம் செய்கிறார், அவர் தொழில்கள் என்னென்ன, அவருக்கு எப்படி பணம் வருகிறது என்றெல்லாம் நான் ஒரு நாளும் கேட்டதில்லை. நம்முடன் நிறைய பேர் பழகுவார்கள் அவரின் பின்னணியெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்க முடியாது.
'லைகா' நிறுவனம் மீது பல வழக்குகள் இருக்கிறது. 'லைகா' தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கிறார். என்றாவது ரஜினியிடம், லைகா நிறுவனத்தின் வழக்குகள் குறித்து யாரும் கேட்டிருக்கிறீர்களா. ஆனால், ஜாபர் சாதிக் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அப்படத்தில் நடித்த என்னைப் பற்றி அவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள்.
என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது.
இந்த சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வரும் சீதையும், நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார். நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன்.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று விளக்கமளித்த பின்பும் என்னைப் பற்றி அவதூறுகள் பரப்பப்படுகிறது. என் கருத்தியலோடு மோத முடியாதவர்கள், என் மீது அவதூறுகள் பரப்பி என்னை வீழ்த்த நினைக்கிறார்கள்.
இந்த அவதூறுகள் எல்லாம் என்னை பாதிப்பதில்லை. ஆனால், இவையெல்லாம் என் குடும்பத்தையும், என் குழந்தைகளையும் பாதிக்கிறது. அவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தைக் கொடுக்கிறது.
அமலாக்கத்துறை என்னை விசாரித்தது, நானும் முழு ஆதரவுக் கொடுத்து அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதிலளித்தேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் எனக்கு எந்தப் பயமுமில்லை. என் மீது சந்தேகப்படுவது, கேள்வி கேட்பதையெல்லாம் நான் தாங்கிக் கொள்வேன், ஆனால் அவதூறு பரப்புவது சரியானதல்ல. சிலர் அதைத் திட்டமிட்டுச் செய்கின்றனர்" என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.
- யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்
- நிறைய படித்தவருக்கு கொஞ்சம் படித்தவர்கள் கூட அச்சாணியாக இருக்கிறார்கள். இல்லையென்றால் வண்டி ஓடாது
மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், "யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அவ்வளவு பெரிய சூரியனை கையில் இருக்கும் குடை காத்து நிழல் கொடுக்கும். அது போல நிறைய படித்தவருக்கு கொஞ்சம் படித்தவர்கள் கூட அச்சாணியாக இருக்கிறார்கள். இல்லையென்றால் வண்டி ஓடாது" என்று மறைந்த நடிகர் குமரிமுத்து நாலடியார் பாடலை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்திருந்தார்
ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், இளையராஜாவை ஏ.ஆர்.ரகுமான் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா தொடர்பான கவிஞர் வைரமுத்துவின் பேச்சை, கங்கை அமரன் கண்டித்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் பதிவும் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
- திரிஷா தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
- திரிஷாவுக்கு பலத்தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் திரையுலகில் லேசா லேசா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் இருந்து நடிகையான திரிஷா இன்றும் பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேல் திரைத்துறையில் கதாநாயாகியாக இருக்கும் திரிஷா நேற்று (மே 4) தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாளை ஒட்டி நடிகை திரிஷாவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பலத்தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகை திரிஷா தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அனைவருக்கும் நன்றியை தெரிவித்து தனது பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
♥️♾️?????#blessed #grateful #thankful
— Trish (@trishtrashers) May 5, 2024
Thanks to each and every one of you who took the time out to make me feel this way?? pic.twitter.com/CH4UBLvSFl
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியன் 2 தயாரிப்பாளர்கள் இப்படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு தள்ளிவைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
- இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
பிரபல நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம் இந்தியன். 1996 -ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு விழிப்புணர்வு அதிரடி படமாகும். இதில் கம்ல் 'சேனாபதி' என்ற வயதான சுதந்திரப் போராட்ட வீரராக நடித்தார்.
சமூகத்தில் நடக்கும் ஊழலுக்கு எதிராக போராடிய சேனாதிபதி இந்தியாவை விட்டு ஓடிப்போய் ஹாங்காங் செல்வதுடன், ஊழல் எப்போதாவது திரும்பினால் திரும்பி வருவேன் என்று மிரட்டுவதுடன் 'இந்தியன்' முதல் பாகம் முடிந்தது.

இதை தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் எடுத்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இந்தியன் 2 படம் ஜூன் மாதம் தியேட்டர்களில் வெளியாகும் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு "ரிலீஸ்" தேதியை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் நெகட்டிவ் வேடத்தில் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- இப்படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
பிரபல நடிகர் அஜித்குமார் சில வருடங்களாக சினிமா படங்களில் நரைத்த முடி, தாடியுடன் 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக்கில் நடித்து வருகிறார் .
2015- ம் ஆண்டு அஜித் 'என்னை அறிந்தால்: படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளுக்கு மட்டும் டை அடித்து இளமையான தோற்றத்தில் நடித்து இருந்தார். அதன் பின் அவர் எந்த படத்திலும் இளமை தோற்றத்தில் நடிக்கவில்லை. மேலும் மகிழ்திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' படத்திலும் இதே போன்று தான் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்ற புதிய படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு வருகிற மே 10 -ந் தேதி தொடங்க இருக்கிறது.
இப்படத்தில் மற்ற நடிகர்களின் சம்பந்தப்பட்ட காட்சிகள் இதில் படமாக உள்ளன. அதன் பின் அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.மேலும் இந்த படத்தில் தலை முடிக்கு 'டை' அடித்து அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்க உள்ளார்
மேலும் இப்படத்தில் அஜித் பல்வேறு கெட்டப்புகளில் தோன்ற உள்ளார். அவரை இளமையாக காட்ட நவீன தொழில்நுட்பம் பயன் படுத்துகிறது.

மேலும் அஜித் நெகட்டிவ் வேடத்தில் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இப்படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.மேலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர் என்பதால் இப்படத்தை மிக சிறப்பாக இயக்கவும் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
- சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர் திஷா பதானி.
சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் 'கங்குவா' படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் திஷா பதானி.
லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி சினிமாவிலும், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன், பிரபாஸ், அமிதாப்பச்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் கல்கி 2898 ஏடி என்ற படத்திலும் திஷா பதானி முக்க்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர் திஷா பதானி.
திஷாவும் அவரது நெருங்கிய தோழியான மவுனி ராயும் அடிக்கடி பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் திஷாபதானி விடுமுறை கொண்டாட்டமாக தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் துள்ளி விளையாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'ஓடிடி பிளஸ்' என்ற புதிய ஓடிடி தள அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
- இந்த ஓடிடி தளத்தில் மாதம் ரூ.29 சந்தா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் உள்ளிட்டவைகள் ஒளிபரப்பாகவுள்ளது.
'ஓடிடி பிளஸ்' என்ற புதிய ஓடிடி தள அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த ஓடிடி தளத்தில் மாதம் ரூ.29 சந்தா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் உள்ளிட்டவைகள் ஒளிபரப்பாகவுள்ளது. அதன் டிரைலர்கள் தொடக்க விழாவில் திரையிடப்பட்டன. விழாவில் சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் சமீப காலங்களில் தங்களது சினிமாக்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் சீனு ராமசாமி பேசுகையில், "இன்றைக்கு இந்த இணையதள வளர்ச்சி, அனைத்தையுமே பார்த்து படிச்சு புரிஞ்சிக்கிற அளவிற்கு வந்துவிட்டது. இன்றைக்கு பெரும்பான்மையான பெற்றோருடைய கவலை, குழந்தைகளிடம் கொடுத்த போனை எப்படி திரும்ப வாங்குவது என்பதுதான். அப்பா, அம்மா, டீச்சர் என யார் சொன்னாலும் கேட்கமாட்டேங்குறான். ஆனால் கூகுள் சொன்னால் கேட்கிறான். இப்படி இருக்கும் சூழலில் இந்த இணையதளத்தின் மூலமாக கதைகள், அதன் மூலமாக கருத்துக்கள், நல்ல செய்திகள் சொல்ல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சினிமாவிற்கு புதிய வெளிச்சமாக இந்த ஓ.டி.டி இருக்கும் என நம்புகிறேன். புதிய தொழில்நுட்பத்தின் வழியாக தமிழ் கதைகள் மக்களை போய் சேர வேண்டும். மிகப்பெரிய நிறுவனங்களுக்கு மத்தியில், இப்போது தோன்றியுள்ள இந்த ஓடிடி, நிறைய புதியவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் என நம்புகிறேன்.
எங்கெல்லாம் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதோ அங்கு ஒரு புதிய வாசல் திறந்து கொண்டே இருக்கிறது. அதை காலமும் விஞ்ஞானமும் செய்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த ஓ.டி.டி பிளஸ் நிறைய தமிழ் கலைஞர்கள், உலக மக்களோடு உரையாடுவதற்கும் தன் கலைகளை வழங்குவதற்கும் உதவும். சினிமா என்பது திரையரங்கிற்கான அனுபவம். இந்தியாவை பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சினிமாவுக்கான வெளியீட்டு விதி எப்போது வந்ததோ, அந்த விதியில், சிறு படங்கள், கடை படங்கள், பெண்களுக்கான படங்கள் பாதிக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால் முதல் காட்சியிலே திரையரங்கிற்கு கூட்டம் வரவேண்டும் என்ற நிலை இருக்கிறது. முதல் மூணு நாளில் காட்சிகள் நிறைய வேண்டும்.
அப்போது நட்சத்திர அந்தஸ்து இல்லாத திரைப்படங்களுக்கு நிச்சயம் கூட்டம் வராது. இந்த நிலையில் மக்களிடம் படம் பேசப்பட்டு, அவர்கள் திரையரங்கிற்கு வருவது வரைக்கும் படங்களை திரையரங்கில் தாங்கி பிடிக்க முடியாது. அப்போது மூணு நாள் கழித்து அதிக தியேட்டர் கிடைக்கும் போது அந்த வியாபார விரிவு தான் சிறிய படங்களுக்கான கதவுகளை அடைத்துவிட்டது. அப்படி அடைத்தாலும் மேலும் மேலும் முயற்சி செய்து வெளியில் வருவது தான் கலையுடைய வேலை. அப்படி நிராகரிக்கப்பட்ட படங்கள், இந்த ஓ.டி.டி.யின் வழியாக, தன் வாழ்க்கையை பணயம் வைத்திருக்கும் இளைஞர்களுக்கு புது வெளிச்சம் தரும் என நம்புகிறேன்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






