என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.
    • பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

    இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 இலட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
    • வழக்கமாக திரைப்படங்கள் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்தே திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும்.

    இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.

    இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் நாளில் மட்டும் இந்தியாவில் மூன்று மொழிகளிலும் சேர்த்து சுமார் 26 கோடி வசூல் செய்திருந்த இந்தியன் 2 திரைப்படம், இரண்டாவது நாளில் ஏறக்குறைய ரூபாய் 17 கோடி வசூல் செய்தது.

    இந்நிலையில் இந்தியன் 2 விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தின் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

    வழக்கமாக திரைப்படங்கள் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்தே திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும். ஆனால் இந்தியன் 2 திரைப்படம் அதற்கு முன்னரே நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகள்.

    கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.

    அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகள். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், களத்தில் உள்ள பொது மக்களுக்கும் தலைவணங்குகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • கீர்த்தி சுரேஷின் ரகுதாத்தா திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகிறது.
    • சிம்புவின் ரசிகர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    இந்தி திணிப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அண்மையில் கீர்த்தி சுரேஷ் தனியார் யூட்யூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் நடிகர் சிம்பு குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    அந்த பேட்டியில், "சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்றினால் நன்றாக இருக்கும். அவருடைய ரசிகர்களை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு அதிகமான ரசிகர்கள் அவருக்கு உள்ளனர். சிம்புவை இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. ஆனால் சிலமுறை போனில் பேசியிருக்கிறேன்" என்று பேசியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வயநாடு சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு மனவேதனையில் தவிக்கிறேன்.
    • கேரளம் மீண்டு வர துணை நிற்போம்.

    கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.

    அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "வயநாடு துயரம் , இயற்கை பேரிடர் எனும் போதிலும் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனையில் செய்வதறியாது தவிக்கிறேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுத்துறையை சார்ந்த பணியாளர்கள் , தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய களப்பணிக்கு அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளம் மீண்டு வர துணை நிற்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் விக்ரமின் மேலாளர் யுவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.
    • கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் நிதியுதவி.

    கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.

    அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், நடிகர் விக்ரம், நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சத்தை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து நடிகர் விக்ரமின் மேலாளர் யுவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 200 பேர் இறந்தனர், 197 பேர் காயமடைந்தனர் மற்றும் பலர் காணவில்லை என்ற சோகமான செய்தியால் வேதனையடைந்தேன். நடிகர் விக்ரம் இன்று கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு (sic) ரூ.20 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.
    • இத்திரைப்படம் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இதில் அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொள்ள தில் ராஜூ தயாரித்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இத்திரைப்படம் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

    இந்நிலையில், நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு 'கேம் சேஞ்சர்' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெற்று டீசர் வெளியானது.

    இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சுமன் குமார் இதற்கு முன் ஃபேமிலி மேன் என்ற பிரபல வலைத் தொடருக்கு கதையாசிரியாவார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் முதல் பாடலான அருகே வா பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். படத்தின் இரண்டாவது பாடலான `ஏக் காவ் மே' என்ற பாடல் நேற்று முன் தினம் வெளியானது. . இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும். 

    • வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.
    • மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள நடிகையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

    இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 160-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மக்களும் உதவ வேண்டும் என கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து நடிகை நிகிலா விமல் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகை நிகிலா விமல், மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்து வெளியான 'குருவாயூர் அம்பலநடையில்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள நடிகையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    • சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார்.
    • ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும்

    அயலான் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். எனவே ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

     

    மேலும் கதாநாயகியாக ருக்மிணி  நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மேலும் பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அஃலி படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • நடிகர் பிரசாந்த், 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது கம் பேக் கொடுக்கும் வகையில், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், நடிகர் பிரசாந்த், 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

    'அந்தகன்' படம் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 9-ந்தேதியே வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 15-ந்தேதிக்கு தங்கலான், டிமாண்டி காலணி 2 வெளியாக உள்ள நிலையில், இதனை கருத்தில் கொண்டு அதற்கு முன்னரே 'அந்தகன்' படத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 129 கதாநாயகிகள் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகி உள்ளனர்.
    • மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்தலில் வெற்றி.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. தனது 14 வயதில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய பாலகிருஷ்ணா, தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

    இவர் படங்களுக்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. 1974 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் பாலகிருஷ்ணா, திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்துள்ளார். இதுவரை 109 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் மொத்தம் 129 கதாநாயகிகள் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகி உள்ளனர்.

    இதுவரை இவர் நடித்த படங்கள் ரூ. 10 லட்சம் தொடங்கி அதிகபட்சம் ரூ. 250 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளன. இவரது புது படங்கள் வெளியீட்டின் போது இவரது கட்அவுட் குறைந்த பட்சம் 10 அடியில் துவங்கி அதிகபட்சம் 108 அடி வரை வைக்கப்பட்டுள்ளன.

    பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படங்கள் அதிகபட்சம் 1000 நாட்கள் வரை திரையில் ஓடியுள்ளன. திரையுலகில் பலவிதமான கதையம்சம் கொண்ட படங்களில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். சினிமா மட்டுமின்றி தொலைகாட்சி நிகழ்ச்சி, பொது சேவை மற்றும் அரசியல் என பலதுறைகளில் பாலகிருஷ்ணா கவனம் செலுத்தி வருகிறார்.

    ஆந்திர பிரதேச அரசியலில் பாலகிருஷ்ணாவின் தந்தை என்.டி. ராமாராவ்-க்கு அடுத்தப்படியாக தொடர்ச்சியாக மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×