என் மலர்
சினிமா செய்திகள்
- சித்ரா மரணத்தில் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.
- சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு திருவள்ளூர், நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சித்ரா மரணத்தில் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேர் மீது நசரேத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை சித்ரா வழக்கில் கணவர் ஹேம்நாத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் இல்லை, முகாந்திரம் இல்லை எனக்கூறி அவர்களை விடுதலை செய்து நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சில நாட்களுக்கு முன் பணத்தை முறைகேடு செய்தததாக கூறி நடிகர் விஷாலுக்கு அறிக்கை விட்டனர்,
- தற்பொழுது தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் கெடு வைத்துள்ளார்.
தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என சங்கம் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தில் இருந்து முறைகேடாக ரூ.12 கோடி செலவழித்த தொகையை திரும்ப அளிக்குமாறு பலமுறை கூறியும் விஷால் பதில் அளிக்கவில்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து படங்களில் நடிப்பேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என நடிகர் விஷால் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சவால் விடுத்தார்.
அதுக்குறித்து தற்பொழுது தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் கெடு வைத்துள்ளார். தன் மீது குற்றம் சுமத்தி வெளியிடப்பட்ட அறிக்கையை திரும்ப பெருமாறு கேட்டுள்ளார். அறிக்கையை திரும்ப பெறாவிட்டால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு அனுப்பப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும் எனவும். இந்த அறிக்கையை வன்ம அறிக்கை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கான பதிலை விரைவில் தயாரிப்பாளர் சங்க தரப்பினரிடம் இருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார்.
அயலான் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். எனவே ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
மேலும் கதாநாயகியாக ருக்மிணி நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5.49 மணியளவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் தலைப்பு அல்லது போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம்
- படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் அறிவித்தனர்.
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.
தற்பொழுது இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
ஆர்.ஜே பாலாஜி இப்படத்தை இயக்குவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது இச்செய்தி வெளியாகியுள்ளது. சுந்தர் சி தற்பொழுது வடிவேலுவை வைத்து திரைப்படம் இயக்கி கொண்டு இருக்கிறார், அதைமுடித்துவிட்டு இப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று
- ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 1 வருடம் முடிவடைந்தள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 ஆம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டனர்.
ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 1 வருடம் முடிவடைந்த நிலையில். இரண்டாம் பாகம் குறித்து இன்று அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு `ஹுகும்' என்ற தலைப்பு வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. படத்தில் மோகன் லால், சிவா ராஜ்குமார், யோகி பாபு மற்றும் பல இந்தி மற்றும் தமிழ் நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் இயக்கி நடித்துள்ள புதிய படம் கவுண்டம்பாளையம்.
- ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் இயக்கி நடித்துள்ள புதிய படம் கவுண்டம்பாளையம். அண்மை காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட பின்னர் படத்தின் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஆணவப்படுகொலை தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், ஆணவப்படுகொலை என்பது வன்முறையோ, கலவரமோ கிடையாது. தங்கள் பிள்ளைகள் மீதான அக்கறையின் வெளிப்பாடு தான் அது. நாம் பயன்படுத்தும் பைக்கை ஒருவர் திருட முயற்சிக்கிறார் என்றால் அவரையே தாக்க முற்படுகிறோம். நாம் பயன்படுத்தும் காலணியை ஒருவர் மாற்றி எடுத்துக் சென்றால் அவரிடம் சண்டையிட தயாராகிறோம். அப்படி இருக்கும் போது குழந்தைகள் என்பது அவர்களை பெற்று வளர்த்த பெற்றோருக்கு தான் தெரியும். இவை அனைத்தும் உணர்ச்சிவசப்பட்டு செய்வது தான் என விளக்கம் அளித்தார்.
இவர் அளித்த இந்த பேட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அனைவரும் இவரை திட்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்).
- கோட் திரைப்படம் செப்டம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகும்
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
தி கோட் படத்தின் டிரைலர் ஆக்ஸ்ட் மாதத்தின மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தி கோட் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் தி கோட் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் படக்குழு நேற்று ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் திரைப்படம் எபிக் ஸ்கிரீன்களிலும் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். இப்போஸ்டரில் விஜய், அஜ்மல் , பிரசாந்த் மற்றும் பிரபு தேவா கையில் துப்பாக்கியுடன் காணப்படுகின்றனர். இப்போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் படத்தை குறித்து மேலும் ஒரு சுவாரசிய அப்டேட் வெளியாகியுள்ளது. கோட் திரைப்படம் செப்டம்பர் 5 வெளியாகும் நாள் அன்று தமிழ்நாடு முழுவதும் இருக்கும் எல்லா திரையரங்களிலும் கோட் திரைப்படம் மட்டுமே ஓடும் என தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலக வரலாற்றில் இவ்வாறு நடப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர். படத்தின் மீது எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சத்யராஜ் ஓடிடி சீரிஸ் ஆன `மை பெர்ஃபக்ட் ஹஸ்பண்ட்' என்ற தொடரில் நடித்துள்ளார்.
- சீரிஸின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் வெர்சடைல் நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதுக்கேற்றார் போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தும் நபர். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது வெப்பன் திரைப்படம்.
வெப்பன் திரைப்படத்தின் ஒரு சூப்பர் ஹுயுமன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் ஒரு மாறுப்பட்ட கெட்டப்பில் நடித்து இருந்தார்.
அடுத்ததாக சத்யராஜ் ஓடிடி சீரிஸ் ஆன `மை பெர்ஃபக்ட் ஹஸ்பண்ட்' என்ற தொடரில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியானது. சத்யராஜுடன் சீதா, ரேகா மற்றும் ரேஷ்மா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்தொடரில் வர்ஷா பொல்லமா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடரை தமிரா இயக்கியுள்ளார். முகமத் ரசித் தயாரித்த இத்தொடரை வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
இந்த சீரிஸ் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
சீரிஸின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. சத்யராஜ் மற்றும் சீதா அன்பான கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இவரின் மகன் காதலிக்கும் பெண் வர்ஷா பொல்லமா. அவளின் தாயான ரேவதி , சத்ய ராஜின் முன்னால் காதலியாக இருக்கிறார். இது போன்ர காட்சிகள் டிரைலரின் இடம் பெற்றுள்ளது.
இந்த சீரிஸ் காமெடி நிறைந்த பொழுது போக்கு தொடராக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அடியே படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் கார்த்திக் ஹாட் ஸ்பாட் என்ற படத்தை இயக்கினார்.
- படத்தின் அடுத்த பாகத்தை குறித்து படக்குழு அப்டேட் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் மற்றும் கௌரி கிஷன் நடிப்பில் வெளியான அடியே திரைப்படத்தை இயக்கினார் விக்னேஷ் கார்த்திக் . அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் ஹாட் ஸ்பாட் என்ற படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் செல்வம், ஜனனி ஐயர், சோபியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
விக்னேஷ் கார்த்திக் வித்தியாசமான முயற்சி செய்கிறேன் என்று சர்ச்சைக்குறிய டிரைலரை வெளியிட்டார். இதனால் படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு மக்களிடம் குறைந்தது. இதனால் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
ஆனால் திரைப்படம் ஓடிடி-யில் வெளிவந்ததும் மக்கள் மற்றும் பிரபலங்கள் அனைவராலும் பாராட்டைப் பெற்றது. தற்பொழுது படத்தின் அடுத்த பாகத்தை குறித்து படக்குழு அப்டேட் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இரண்டாம் பாகத்தை நடிகர் விஷ்ணு விஷால் வழங்க கேஜேபி டாக்கீஸ் மற்றும் செவன் வாரியர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர். ப்ரோமோ விடியோவில் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனரான கார்த்திக் விக்னேஷ் மிகவும் நகைச்சுவையாக நடித்து உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- `கடைசி உலகப் போர்’ படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
- படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.
ஹிப்ஹாப் ஆதி இன்றைய இளம் சமூதாயத்திற்கு பிடித்தமான இசையமைப்பாளராவர். அவர் இசையமைத்த பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இசையமைப்பது மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
கடைசியாக கார்த்திக் வேணுகோபால் இயக்கிய பி.டி சார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் பெற்றது.
தற்பொழுது அடுத்ததாக `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. ஆதி நடிக்கும் 8 - வது திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.
படத்தின் ப்ரோமோ பாடலான பூம்பாஸ்டிக் என்ற பாடலின் வீடியோ படக்குழுவினர் தற்பொழுது வெளியிட்டுள்ளனர். இப்பாடலை சின்ன பொன்னு, ஹிப்ஹாப் ஆதி, ராஜன் செல்லையா இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் மிகவும் பெப்பியாகவும், எனர்ஜட்டிக்காக இருக்கிறது. பாடலுக்கு இடையே வரும் படத்தின் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாகவும். அதிரடி ஆக்ஷனாக அமைந்து இருக்கிறது.
இப்படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
- இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் , துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசில் தனது டப்பிங் பணிகளை ஏற்கனவே முடித்துவிட்டார். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஃபகத் ஃபாசிலிற்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் இப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். துஷாரா அவரது டப்பிங் பணிகளை சில நாட்களுக்கு முன் முடித்தார். அடுத்ததாக ரித்திகா சிங் அவரது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
அவர் டப்பிங் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
- படப்பிடிப்பு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஊட்டியில் நடைப்பெற்று வருகிறது.
சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கி முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.
சில நாட்களுக்கு முன் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஊட்டியில் நடைப்பெற்று வருகிறது. இதில் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அவருக்கு ஏற்பட்டது சிறிதளவான காயம் தான் என மருத்துவர்கள் கூறீயுள்ளனர். அவர் இப்பொழுது நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






