படம் நல்லாலனா செருப்பால அடிப்பீங்களா? - ஹாட் ஸ்பாட் 2 வெளியான அப்டேட்

அடியே படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் கார்த்திக் ஹாட் ஸ்பாட் என்ற படத்தை இயக்கினார்.படத்தின் அடுத்த பாகத்தை குறித்து படக்குழு அப்டேட் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
படம் நல்லாலனா செருப்பால அடிப்பீங்களா? - ஹாட் ஸ்பாட் 2 வெளியான அப்டேட்
Published on

கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் மற்றும் கௌரி கிஷன் நடிப்பில் வெளியான அடியே திரைப்படத்தை இயக்கினார் விக்னேஷ் கார்த்திக் . அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் ஹாட் ஸ்பாட் என்ற படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் செல்வம், ஜனனி ஐயர், சோபியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

விக்னேஷ் கார்த்திக் வித்தியாசமான முயற்சி செய்கிறேன் என்று சர்ச்சைக்குறிய டிரைலரை வெளியிட்டார். இதனால் படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு மக்களிடம் குறைந்தது. இதனால் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

ஆனால் திரைப்படம் ஓடிடி-யில் வெளிவந்ததும் மக்கள் மற்றும் பிரபலங்கள் அனைவராலும் பாராட்டைப் பெற்றது. தற்பொழுது படத்தின் அடுத்த பாகத்தை குறித்து படக்குழு அப்டேட் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இரண்டாம் பாகத்தை நடிகர் விஷ்ணு விஷால் வழங்க கேஜேபி டாக்கீஸ் மற்றும் செவன் வாரியர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர். ப்ரோமோ விடியோவில் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனரான கார்த்திக் விக்னேஷ் மிகவும் நகைச்சுவையாக நடித்து உள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com