என் மலர்
சினிமா செய்திகள்
- விடாமுயற்சி படக்குழு தற்பொழுது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்
- படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்பொழுது ஐதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர் இவர்களுடன் நடிகைகள் திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்பொழுது ஐதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது. படத்தை குறித்து அடுத்தடுத்து புதிய போஸ்டர்கள் படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் படக்குழு தற்பொழுது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் ரெஜினா கசாண்ட்ரா, அஜித் மற்றும் திரிஷா இடம் பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.
- படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் கடந்த மாதம் வெளியாகியது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.
படத்தின் டிரைலர் குறித்து தற்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு நேற்று அறிவித்து இருந்த நிலையில். தற்பொழுது படத்தின் டிரைலர் நாளை மதியம் 1 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து படக்குழுவினர் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பாபி தியோல் மற்றும் சூர்யா எதிர் எதிரே முறைத்துக் கொண்டு இருப்பது போல் காட்சி அமைந்துள்ளது. படத்தின் இப்போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- படத்தின் 4 வது பாடலான பாதவத்தி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
`பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இயக்கம் மட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக களத்திற்கு சென்று உதவிகளை செய்தார். இதனால் பாராட்டுகளையும், சில விமர்சனங்களை மாரிசெல்வராஜ் சந்தித்தார்.
மாரி செல்வராஜ் தற்பொழுது 'வாழை' என்ற படத்தை இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். சந்தோஷ் நாராயணன் 'வாழை' படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் 3 பாடல்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது படத்தின் 4 வது பாடலான பாதவத்தி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இது ஒரு ஒப்பாரி பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலுக்கு மாரி செல்வராஜ் வரிகளை எழுதியுள்ளார். ஜெயமூர்த்தி மற்றும் மினாட்சி இளையராஜ இணைந்து பாடியுள்ளனர்.
பாடலை கேட்கும் போதே ஏனோ ஒரு சோகமும் , பாரமும் நம்முள் வந்து விடுகிறது. வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். படத்தின் முதல் பாடலான கரம் கரம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது. திரைப்படத்தில் இவர்கள் நடித்த கதாப்பாத்திரமான பாண்டி மற்றும் மீனா பற்றிய பதிவுகளை சில நாட்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. அதில் ஒரு நேர்காணலில் சூரி சில விஷயங்களை பகிர்ந்தார். அதில் "கொட்டுக்காளி படம் விடுதலை திரைப்படம் நடிக்கும் போது வந்த கதையாகும். விடுதலை படம் முடிவது வரை எந்த படத்திலும் கமிட் ஆக கூடாது என வெற்றிமாறன் கூறியிருந்தார். ஆனால் நான் வினோத்ராஜ் சொன்ன இக்கதையை சொன்னப்பின் அவர் வினோத்ராஜ் படத்தில் நடி என்றார். வினோத் ராஜ் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர். அவனை மிஸ் பண்ணிடாதே என்று வெற்றிமாறன் கூறினார்.
மேலும், கொட்டுக்காளி திரைப்படம் விடுதலை மற்றும் கருடன் திரைப்படத்தில் இருந்து மிகவும் வித்தியாசமானது. இப்படத்தை விடுதலை மற்றும் கருடன் படத்தை போல் இருக்கும் என மனநிலையில் வர வேண்டாம், இப்படத்தை புது கண்ணோடத்தில் வந்து பாருங்கள். இம்மாதிரி கதையை ஆதரியுங்கள்." என்று கேட்டுக் கொண்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அனந்த் `நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகியது.
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளியான மீசைய முறுக்கு படத்தில் நடித்து பலருக்கும் பரீட்சையமான முகமானார் அனந்த் .
தற்பொழுது அனந்த் `நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்கி மசாலா பாப்க்கார்ன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் அனந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருடன் பவானி ஸ்ரீ, ஆர் ஜே விஜய், மோனிகா, யூடியூபர் இர்ஃபான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முழுக்கமுழுக்க இப்படம் இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்து விட்டு படக்குழுவினரை பாராட்டி இருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குனர் அனந்த் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் " செயல்முறையை நம்புங்கள், நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் ஒரு நாள் கண்டிப்பாக பலன் தரும். ஒரு நாள். அந்த ஒரு நாள், அந்த ஒரு நொடி எனக்கு சிவகார்த்திகேயன் அண்ணாவை பார்க்கும் போது நடந்தது."
"ரெமோ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்தில் நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிவகார்த்திகேயன் அண்ணாவை ஒரு முறையாவது பார்த்திட மாட்டோமா என்ற எண்ணத்தில் ஓட் சென்றேன், ஆனால் இன்றோ அவர் நான் நடித்து இயக்கிய படத்தை பார்த்துவிட்டு பாராட்டும் போது, என்னுடைய பயணம் தொடங்கிவிட்டது என தோன்றுகிறது. உங்கள் அன்புக்கு என்றும் நன்றியுடன் இருப்பே. இதற்கு காரணமாக இருந்த வெங்கட் பிரபு சார் மற்றும் தயாரிப்பாளர் ஐஷ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்து அப்பதிவில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய் தி கோட் படத்தில் நடித்துள்ளார்.
- விஜய்யின் அரசியல் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது தி கோட் (தி கிடேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தி கோட் படத்திற்கான பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே விஜய் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்து தமிழ வெற்றிக் கழகம் என்று தனது கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விஜய்யின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பாரா என்பது தெளிவற்ற விஷயமாகவே இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் 69 படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முந்தைய நேர்காணல்களில் பேசும் போது, விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அது அரசியல் சார்ந்த கதையாகவே இருக்கும் என்று இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்து இருந்தார்.
அதன்படி தளபதி 69 படம் அரசியல் சார்ந்த கதையம்சம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஹெச். வினோத், நடிகர் விஜய் இணையும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அரசியல் அறிவிப்பு வெளியான நிலையிலும், நடிகர் விஜய் தி கோட் படத்தைத் தொடர்ந்து தளபதி 69 மற்றும் தளபதி 70 என இரண்டு படங்களில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியான விஷயம் என்றே கூறப்படுகிறது.
தற்போதைய தகவல்களில் தளபதி 69 படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி என கூறப்படும் நிலையில், தளபதி 70 படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- நிலச்சரிவை தொடர்ந்து நிவாரண பணிகளுக்கு பல பிரபலங்கள் நிதி உதவி அறிவித்தனர்.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. நள்ளிரவு வேளையில் அரங்கேரிய இந்த கோரம் காரணமாக வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உறக்கத்திலேயே மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவை தொடர்ந்து ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை, தன்னார்வலர்கள் என பலதரப்பினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக திரைப் பிரபலங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்த வரிசையில், நடிகர் தனுஷ் கேரளா நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூ. 25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். முன்னதாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர், நடிகைகள் கேரளாவுக்கு நிதி உதவி அறிவித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்சார் போர்டில் கட்செய்யப்பட்ட எல்லா காட்சிகளும் இங்கு காண்பிக்கப்பட்டது.
- படத்திலும் எல்லா சீன்களும் உள்ளன. ஆனால் வசனங்கள் வேறு.
சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தோழர் சேகுவேரா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது:-
நான் இதுவரை 250 படங்களில் நடித்துள்ளேன். எல்லாப்படங்களிலும் நடிப்பது மகிழ்ச்சியான விசயம்தான். வெற்றி அடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் அந்த நடிப்பு பணி என்பது எனக்கு மகிழ்ச்சியான விசயம். மகிழ்சியாக ஒரு படத்தில் சென்று நடிப்பேன். படம் ஓடினால் கூடுதல் மகிழ்ச்சி வரும். ஓடவில்லை என்றால் வர்த்தம்தான். ஆனால் நடிப்பு என்பது மகிழ்ச்சியான விசயம்.
பெருமைக்குரிய படம் என்றால் அதில் ஒருசிலதான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமேன்றால் தந்தை பெரியாராக நடித்ததுதான். அதன்பின் சில பெயர்களை தாங்கி நடிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். கதைக்கும் எம்.ஜி.ஆர்.-க்கும் எந்த வகையில் சம்பந்தம் கிடையாது. எம்.ஜி.ஆர். மகன் படத்தில் நான்தான் எம்.ஜி.ஆர்.
தோழர் சேகுவேரா உடன் என்னை எந்த வகையிலும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒப்பற்ற புரட்சியாளர். சேகுவாராக இருக்க முடியாது. அவரது பெயரில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி.
புரட்சிக்காரன் படத்தில் சேகுவேரா கெட்அப்பில் நடித்திருக்கிறேன். சென்சார் போர்டில் கட்செய்யப்பட்ட எல்லா காட்சிகளும் இங்கு காண்பிக்கப்பட்டது. படத்திலும் எல்லா சீன்களும் உள்ளன. ஆனால் வசனங்கள் வேறு. சென்சார் விதிக்கு உட்பட்ட வசனங்கள் பேசப்பட்டுள்ளது. மீண்டும் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் செப்டம்பர் 20-ந்தேதி படம் ரிலீஸ் ஆவதில் தடங்கல் வந்துவிடுமோ என வினியோகஸ்தரர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சென்சாரில் என்ன சொல்லப்பட்டதோ அதை மாற்றி செய்து விட்டோம்.
இவ்வாறு சத்யராஜ் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- SK23 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி நடிக்கிறார்.
- இப்படத்தில் பிஜு மேனன் இணைந்ததாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
அயலான் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். எனவே ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
மேலும் கதாநாயகியாக ருக்மிணி நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சம் நிதியுதவி
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் வீடுகள் நிலச்சரிவால் இழுத்துச் செல்லப்பட்டன. மேலும், மணல் சேற்றால் மூழ்கின. இதில் சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் நன்கொடை அளித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சமும், நயன்தாரா விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சமும் வழங்கினர்.
இந்நிலையில், தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி, லிசி ஆகியோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர்.
அது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "சென்னையைச் சேர்ந்த சிலர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் வயநாடு பேரிடர் நிவாரணத்திற்காக 1 கோடி ரூபாய் வழங்கினோம். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினோம்.
ராஜ்குமார் சேதுபதி, சுஹாசினி மணிரத்னம், ஸ்ரீப்ரியா, மணிரத்னம், குஷ்பு சுந்தர், மீனா சாகர், ஜி ஸ்கொயர், கல்யாணி பிரியதர்சன், கோமளம் சாருஹாசன், லிஸ்ஸி லட்சுமி, மைஜோ ஜார்ஜ், ஷோபனா, ரஹ்மான் ஆகியோருக்கு நன்றி. வயநாடு மக்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா : தி லயன் கிங் படம்.
- தற்பொழுது முஃபாசா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டில் ஒன்றும், 2019 ஆம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது. இரண்டிலும் ஒரே கதைதான் , 1994 ஆம் ஆண்டு வெளிவந்தப் படம் கார்டூன் டெக்னாலஜியில் இருக்கும், 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புது டெக்னாலஜியான அனிமேஷன் தொழில்நுட்பத்தில் அமைந்து இருக்கும்.
லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது.
இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா : தி லயன் கிங் படம்.
அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முஃபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. தற்பொழுது முஃபாசா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
முஃபாசா காட்டில் இடம் மாறி வருகிறான், அவனை ஸ்கார் காப்பாற்றி தன் ராஜ குடும்பத்துடன் அழைத்துச் செல்கிறான். ஸ்கார் மற்றும் முஃபாசா சகோதரர்களைப் போல் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி அனாதையாக இடம் மாறி ராஜ வம்சத்தில் வந்தடையும் முஃபாசா பின் எப்படி அந்த ராஜாங்கத்தை கைப்பற்றியது என்பதே கதை. ஸ்கார் ஏன் முஃபாசாவிற்கு எதிரியாக மாறுகிறான்.
இப்படத்தை ஆஸ்கர் விருதை வென்ற ஜெஃப் நதன்சன் எழுத பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.
இப்படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லயன் கிங் படத்தின் ரசிகர்கள் மத்தியில் முஃபாசா: தி லயன் கிங் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






