சூர்யா VS பாபி தியோல் - கங்குவா படத்தின் டிரைலர் நாளை முதல்

வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது
சூர்யா VS பாபி தியோல் - கங்குவா படத்தின் டிரைலர் நாளை முதல்
Published on

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் கடந்த மாதம் வெளியாகியது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

படத்தின் டிரைலர் குறித்து தற்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு நேற்று அறிவித்து இருந்த நிலையில். தற்பொழுது படத்தின் டிரைலர் நாளை மதியம் 1 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து படக்குழுவினர் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பாபி தியோல் மற்றும் சூர்யா எதிர் எதிரே முறைத்துக் கொண்டு இருப்பது போல் காட்சி அமைந்துள்ளது. படத்தின் இப்போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com