என் மலர்
சினிமா செய்திகள்
- படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
- சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது. திரைப்படத்தில் இவர்கள் நடித்த கதாப்பாத்திரமான பாண்டி மற்றும் மீனா பற்றிய பதிவுகளை சில நாட்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கலீடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கொட்டுக்காளி திரைப்படம் சூரி நடிப்பில் வெளிவந்த விடுதலை மற்றும் கருடன் திரைப்படத்திற்கு முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என சூரி கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி. தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து டபுள் ஐஸ்மார்ட் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது 2019ல் வெளியான ஐஸ்மார்ட் சங்கர் எனும் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தை விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படம் இதுவே.
இந்த படத்தை பூரி ஜெகன்நாத் தயாரிக்க மணி ஷர்மா படத்திற்கு இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் ஒரு அராத்து ரவுடியாக நடித்துள்ளார் ராம் பொதினேனி. சஞ்சய் தத் மூளையை எடுத்து ராம் பொதினேனி மூளையையும் இடம் மாற்றுகின்றனர். இதற்கடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் கதை. திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் நேர அளவு 2 மணி நேரம் 42 நிமிடமாக உள்ளது. திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷனாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆணவப்படுகொலை என்பது வன்முறை அல்ல. பிள்ளைகள் மீதான அக்கறை என ரஞ்சித் பேசியிருந்தார்.
- நடிகர் ரஞ்சித் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக புகார்.
இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் இயக்கி நடித்துள்ள புதிய படம் கவுண்டம்பாளையம். அண்மை காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படம் கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட பின்னர் படத்தின் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஆணவப்படுகொலை தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், ஆணவப்படுகொலை என்பது வன்முறையோ, கலவரமோ கிடையாது. தங்கள் பிள்ளைகள் மீதான அக்கறையின் வெளிப்பாடு தான் அது. நாம் பயன்படுத்தும் பைக்கை ஒருவர் திருட முயற்சிக்கிறார் என்றால் அவரையே தாக்க முற்படுகிறோம். நாம் பயன்படுத்தும் காலணியை ஒருவர் மாற்றி எடுத்துக் சென்றால் அவரிடம் சண்டையிட தயாராகிறோம். அப்படி இருக்கும் போது குழந்தைகள் என்பது அவர்களை பெற்று வளர்த்த பெற்றோருக்கு தான் தெரியும். இவை அனைத்தும் உணர்ச்சிவசப்பட்டு செய்வது தான் என விளக்கம் அளித்தார்.
இவர் அளித்த இந்த பேட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இவரை திட்டி கமெண்டுகளை பதிவிட்டனர்.
இந்நிலையில், சமூக அமைதியை சீர்குலைப்பதாக நடிகர் ரஞ்சித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வி.சி.க. மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், "ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தில் திட்டமிட்டு விசிக-வை அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளன; தணிக்கை குழுவிடம் புகார் அளித்த பின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது. இப்படத்தில், ஆணவக் கொலைகளை நியாயப்படுத்தும் வகையில் ரஞ்சித் கருத்துகளை தெரிவித்துள்ளார். சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் பேசி வரும் ரஞ்சித் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வன்னியரசு தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது.
- நித்திலன் சுவாமிநாதன் அடுத்து இயக்கப் போகும் திரைப்படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார்.
இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.
இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை 100 கோடி ரூபாய் மேல் உலகளவில் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் திரைப்படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் - இல் வெளியாகியது. இந்தியாவில் அதிகமாக பார்த்த படங்களில் மகாராஜா இடம்பெற்றது. இந்தியாவை தவிர பிற வெளிநாட்டு மக்களும் திரைப்படத்தை பார்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நித்திலன் சுவாமிநாதன் அடுத்து இயக்கப் போகும் திரைப்படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நித்திலன் அடுத்ததாக நயன் தாரா நடிப்பில் படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மகாராணி என பெயரிடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இப்படத்தை மகாராஜா திரைப்படத்தை தயாரித்த பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.
இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் எம்மாதிரியான கதைக்களத்தில் அமையும் என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் .
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சத்யராஜ் அடுத்து நடித்திருக்கும் திரைப்படம் தோழர் சேகுவேரா.
- திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவின் வெர்சடைல் நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதுக்கேற்றார் போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தும் நபர். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது வெப்பன் திரைப்படம்.
வெப்பன் திரைப்படத்தின் ஒரு சூப்பர் ஹுயுமன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் ஒரு மாறுப்பட்ட கெட்டப்பில் நடித்து இருந்தார்.
சத்யராஜ் அடுத்து நடித்திருக்கும் திரைப்படம் தோழர் சேகுவேரா. இப்படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியானது. திரைப்படம் முன்னதாக மார்ட் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இருந்தது ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அது தள்ளிப்போனது. திரைப்படம் தற்பொழுது வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதிகார வர்கத்திற்கும் தொழிலாளி வர்கதுக்கும் இடையே நடக்கு போர் மற்றும் பாகுபாடுகளை பேசக் கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது. சத்யராஜுடன் இணைந்து ரஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ், அலெக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சாம் அலன் படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தின் இசையை பி.எஸ் அஷ்வின் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 90 ஸ் கிட்ஸ் -களின் பிரியத்துக்குரிய டாம் அண்ட் ஜெரி கார்ட்டூனில் உள்ளது காமெடி அல்ல வன்முறை என்று தெரிவித்துள்ளார்.
- ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 , ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களில் உள்ள பிரபல காட்சிகள் டாம் அண்ட் ஜெரியை ஒத்திருப்பதாக இணையத்தில் டிரோல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அக்சய் குமார், 90 ஸ் கிட்ஸ் -களின் பிரியத்துக்குரிய டாம் அண்ட் ஜெரி கார்ட்டூனில் உள்ளது காமெடி அல்ல வன்முறை என்று தெரிவித்துள்ளார்.
கேல் கேல் மெய்ன் என்ற புதிய படத்தின் அக்சய் குமார் நடித்து முடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஆகா கல்யாணம் புகழ் வாணி கபூர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சக நடிகர் பரீத் கான், தனக்கு டாம் அண்ட் ஜெரி மிகவும் பிடிக்கும் என்று பேசிக்கொண்டிருந்தார் .
அப்போது இடைமறித்த அக்சய், டாம் அண்ட் ஜெரி என்பது காமெடி அல்ல அது வன்முறை, இன்று உங்களுக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். நான் நடித்த படங்களில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் டாம் அண்ட் ஜெரியில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 , ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களில் உள்ள பிரபல காட்சிகள் டாம் அண்ட் ஜெரியை ஒத்திருப்பதாக சமீப நாட்களாக இணையத்தில் விவாதம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மர்மங்கள் பல நிறைந்த தனித் தீவில் வாழும், யாருக்கும் புரியாத மர்மம் ஒன்றைப் பற்றிய படம்
- தீவின் காடும், சுற்றியுள்ள கடலும் போர்க்களமாக மாறி சூர்யாவுக்கான களமாக திகழ்கிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் 'கங்குவா' . 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளது.
கடந்த மாதம் படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று [ஆகஸ்ட் 12 ஆம் தேதி] வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கத் தொடங்கினர்.
அதன்படி தற்போது கங்குவா படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகியுள்ளது. மர்மங்கள் பல நிறைந்த தனித் தீவில் வாழும், யாருக்கும் புரியாத மர்மம் ஒன்றைப் பற்றியதாகத் தொடங்கும் டிரைலர், வில்லன் பாபி தியோலின் விருந்தாருந்த வாரீரோ என்ற வசனத்துடன் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது.
தீவின் காடும், சுற்றியுள்ள கடலும் போர்க்களமாக மாறி சூர்யாவுக்கான களமாக திகழ்கிறது. உன் ரத்தமும், என் ரத்தமும் வெவ்வேறா, முன் நெற்றியும் முழங்காலும் மண் தொடா... மண்டியிடா என்று சூர்யா பேசும் வசனங்கள் காட்சிகளுடன் காணும்போது மிரட்டலாக அமைந்துள்ளது. மேலும் படத்தின் தூய தமிழை கையாண்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. மொத்தத்தில் அட்வென்ச்சர் ஆக்ஷன் போர்க்களமாக கங்குவா திரைகளை ஆளும் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வேதா படத்தின் புதிய காதல் பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
- இந்த பாடலின் இறுதியில் ட்விஸ்ட் உள்ளது.
ஷர்வாரி, ஜான் ஆபிரகாம் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடிப்பில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை வழங்கும் 'வேதா' படத்தில் இருந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் பாடலான, 'நீதானே நீதானே' வெளியாகியுள்ளது.
'ஹோலியான்' மற்றும் 'மம்மி ஜி' ஆகிய இரண்டு எனர்ஜிட்டிக் பாடல்களுக்குப் பிறகு, இந்த அழகான பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். இந்தப் பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இடையேயான கெமிஸ்ட்ரி நிச்சயம் பார்வையாளர்களை மயக்கும். அதேசமயம், பாடலின் முடிவில் ஒரு அதிர்ச்சி தரும் ட்விஸ்ட்டும் உள்ளது.

பாடலை வெளியிட்ட ஜான் ஆபிரகாம், "'நீதானே நீதானே...' பாடல் 'வேதா' படத்தின் ஆன்மா. என் கதாபாத்திரத்தின் எமோஷனல் மற்றும் ரொமாண்டிக் பக்கத்தை இது காட்டும். இந்தப் படத்தில் வெறும் ஆக்ஷன் மட்டுமல்லாது காதலும் உண்டு என்பதற்காகதான் இந்தப் பாடல்" என்றார்.
தமன்னா பாட்டியா, "ஜானுடன் முதல்முறையாக பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தனது கதாபாத்திரத்திற்குக் கொடுத்த அர்ப்பணிப்பு திரையில் சிறப்பாக வந்துள்ளது. இந்த பாடல் காதல் மற்றும் பல நல்ல நினைவுகள் நிறைந்ததாக இருக்கும். இது அனைவருக்கும் கனெக்ட் ஆகும் என நான் நம்புகிறேன்!" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தம்பதியினர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளனர்.
- இந்த படத்தில் கணவன் மனைவியே அறிமுக நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.
திரை உலக வரலாற்றில் முதன்முறையாக காதல் தம்பதிகள் தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் "ல் த கா சை ஆ." சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா கூறுகையில் இப்படம் விறுவிறுப்பான திரில்லர் கலந்த வினோதமான திரைக்கதை கொண்டிருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தம்பதியினர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளனர். இந்த படத்தில் சதா நாடார் நாயகனாக நடித்து, இயக்கித் தயாரித்திருக்கிறார். அவரது மனைவி மோனிகா செலேனா நாயகியாக நடித்துள்ளார். இப்படிக் கணவன் மனைவியே அறிமுக நாயகன் நாயகியாக நடித்து அவர்களே இயக்கித் தயாரித்திருப்பது தமிழ் சினிமாவிற்கு அனேகமாக இதுவே முதல் முறையாக இருக்கும்.

படம் பற்றி இயக்குநர் சதா நாடார் பேசும் போது, "எனக்குச் சிறுவயதில் இருந்து அரசியல் போல சினிமாவில் ஆர்வம் உண்டு. திரைப்படங்கள் மூலம் நமது சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அதற்கு முன்பு ஒரு முன்னோட்டம் போல ஒரு திரைப்படம் எடுப்பது என்று முடிவு செய்தோம். அதுதான் 'ல் தகா சைஆ."
"நானும் என் மனைவியும் மோனிகா செலேனா இணைந்து இதில் பணியாற்றினோம். என் காதல் மனைவி இருவருமே கதாநாயகன் நாயகியாக நடிக்கிறோம் கதாநாயகனாக நானும் , கதாநாயகியாக என் மனைவி மோனிகா செலேனாவும் நடித்திருக்கிறோம். நாங்களே கூட்டாக இயக்கிக் தயாரிக்கிறோம்."
"இதில் எங்களைத் தவிர ஏராளமான கலைஞர்கள் நடித்துள்ளனர். ஒரு குடும்பத்தில் காதல் மனைவியுடன் இருக்கும் ஒருவனுக்கு ஒரு பிரச்சினை வரும்போது எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறான் என்பதை ஒரு முழுப் படமாக சுவையான திரைக்கதையுடன் உருவாக்கி இருக்கிறோம்."
"இதற்கான படப்பிடிப்பை ஊட்டி ,ஈரோடு, சென்னை, கோயம்புத்தூர், ஏற்காடு, பாண்டிச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, கோவா போன்ற இடங்களில் நடத்தி முடித்துள்ளோம். குடும்பத்தினருடன் பார்க்கும் படியாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். இப்படம் பார்ப்பவர்களுக்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என்று நம்புகிறோம்" என்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு.
- தங்கலான் வெளியீட்டுக்கு முன் பணம் செலுத்த வேண்டும்.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி செலுத்த வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல விஐபிக்கள் பணம் கொடுத்து வைத்துள்ளனர். இவர் அந்த பணத்தை பலரிடம் கடனாக கொடுத்தார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலனவராக அறிவிக்கப்பட்டார்.
மேலும், அவர் உயிரிழந்துவிட்டார். இவரது சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றத்திடன் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த பணத்தை திருப்பி வாங்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆன ஞானவேல் ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் கடந்த 2013 ஆம் ஆண்டு ரூ. 10 கோடியே 35 லட்சம் கடன் வாங்யிருந்தனர். இந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஞானவேல்ராஜா மற்றும் ஈஸ்வரன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் திவாலானவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சொத்தாட்சியர் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில் ரூ. 10 கோடியே 35 லட்சம் கடனுக்கு கடந்த 2013 ஆண்டு முதல் 18 சதவீதம் வட்டி, வழக்கறிஞர் கட்டணம் சேர்த்து ரூ. 26 கோடியே 36 லட்சம் வழங்க வேண்டும் என்றும் இந்த தொகையை வழங்காத இவர்களை திவாலனவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஜி ஜெயசந்திரன் மற்றும் சிவி கார்த்திகேயன் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அதன் பின் படத்தை வெளியிடலாம்.
இதே போல் கங்குவா படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் பணம் செலுத்தியது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
- படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விக்ரமிடம் ஒரு பத்திரிக்கையாளர் உங்களுக்கு ஏன் அஜித், சூர்யா போன்ற அளவுக்கு ரசிகர்கள் இல்லை என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு விக்ரம் சவாரசியமான பதிலை அளித்துள்ளார்.
அதற்கு விக்ரம் " என்னோட ரசிகர்கள் பட்டாளத்தைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை. படம் ரிலீஸாகும் போது வந்து தியேட்டரில் பாருங்கள். அனைத்து மக்களும் எதோ ஒரு வகையில் என்னோட ரசிகர்கள் தான்." என்றார். மேலும் ரசிகர்க் ஒருவர் இதை கேட்டு "அஜித் சூர்யாவிற்கெல்லாம் வெறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் விக்ரமிற்கு அது கிடையவே கிடையாது." என்றார்.
மேலும் விக்ரம் " நான் சினிமாவை நேசிக்கிறேன், கமெர்ஷியல் படங்கள் செய்யாமல், வித்தியாசமான சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன்." என்றார்.
பின் அந்த பத்திரைக்கையாளரிடம் விக்ரம் " நீங்க யாரோட ரசிகர் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பத்திரிக்கையாளர் " பிடித்த நாயகன் அப்பா, பிடித்த நாயகி அம்மா" என்று சாமர்த்தியமாக பதிலளித்தார்.
அதற்கு விக்ரம் " நீங்க நல்லா நடிக்கிறீங்க.. பாத்தீங்களா பொண்டாட்டி பெயர சொல்லல" என்று கேட்க. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரிந்தவுடன், இதனால் தான் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள் என்று நகைச்சுவையாக சிரித்துக் கொண்டே செய்தியாளரை கட்டிப்பிடித்தார்.
இந்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- , 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது.
- இந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வசூலித்த படங்களின் பட்டியலில் இப்படம் இடம் பெற்றுள்ளது.
உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் 'டெட்பூல் & வால்வரின்' படத்தை திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கு சான்று இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்தான். இந்த படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது.
மேலும் தற்பொழுது திரைப்படம் வெளியாகி இரண்டு வாரம் கடந்த நிலையில் திரைப்படம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது நம் இந்திய மதிப்பில் 8000 கோடி மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வசூலித்த படங்களின் பட்டியலில் இப்படம் இடம் பெற்றுள்ளது. மார்வல் யூனிவர்சில் இடம் பெற்றுள்ள ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படத்திற்கு அடுத்து இப்படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த கேமியோஸ், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் பல கமர்ஷியல் பொழுதுபோக்கு விஷயங்களுடன் இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒன்றாக மாறியுள்ளது.
மார்வெல் ஸ்டுடியோவின் 'டெட்பூல் & வால்வரின்' ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






