'டாம் அண்ட் ஜெரி' கார்ட்டூன் காமெடி அல்ல வன்முறை - அக்சய் குமார் சொல்லும் ரகசியம்

90 ஸ் கிட்ஸ் -களின் பிரியத்துக்குரிய டாம் அண்ட் ஜெரி கார்ட்டூனில் உள்ளது காமெடி அல்ல வன்முறை என்று தெரிவித்துள்ளார்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 , ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களில் உள்ள பிரபல காட்சிகள் டாம் அண்ட் ஜெரியை ஒத்திருப்பதாக இணையத்தில் டிரோல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
'டாம் அண்ட் ஜெரி' கார்ட்டூன் காமெடி அல்ல வன்முறை - அக்சய் குமார் சொல்லும் ரகசியம்
Published on

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அக்சய் குமார், 90 ஸ் கிட்ஸ் -களின் பிரியத்துக்குரிய டாம் அண்ட் ஜெரி கார்ட்டூனில் உள்ளது காமெடி அல்ல வன்முறை என்று தெரிவித்துள்ளார்.

கேல் கேல் மெய்ன் என்ற புதிய படத்தின் அக்சய் குமார் நடித்து முடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஆகா கல்யாணம் புகழ் வாணி கபூர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சக நடிகர் பரீத் கான், தனக்கு டாம் அண்ட் ஜெரி மிகவும் பிடிக்கும் என்று பேசிக்கொண்டிருந்தார் .

அப்போது இடைமறித்த அக்சய், டாம் அண்ட் ஜெரி என்பது காமெடி அல்ல அது வன்முறை, இன்று உங்களுக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். நான் நடித்த படங்களில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் டாம் அண்ட் ஜெரியில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 , ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களில் உள்ள பிரபல காட்சிகள் டாம் அண்ட் ஜெரியை ஒத்திருப்பதாக சமீப நாட்களாக இணையத்தில் விவாதம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com