`டபுள் ஐஸ்மார்ட்' படத்திற்கு A சான்றிதழ் கொடுத்த தணிக்கை குழு

இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
`டபுள் ஐஸ்மார்ட்' படத்திற்கு A சான்றிதழ் கொடுத்த தணிக்கை குழு
Published on

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி. தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து டபுள் ஐஸ்மார்ட் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது 2019ல் வெளியான ஐஸ்மார்ட் சங்கர் எனும் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படம் இதுவே.

இந்த படத்தை பூரி ஜெகன்நாத் தயாரிக்க மணி ஷர்மா படத்திற்கு இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் ஒரு அராத்து ரவுடியாக நடித்துள்ளார் ராம் பொதினேனி. சஞ்சய் தத் மூளையை எடுத்து ராம் பொதினேனி மூளையையும் இடம் மாற்றுகின்றனர். இதற்கடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் கதை. திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் நேர அளவு 2 மணி நேரம் 42 நிமிடமாக உள்ளது. திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷனாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com