விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விடாமுயற்சி படக்குழு தற்பொழுது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்பொழுது ஐதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது.
விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
Published on

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.

இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர் இவர்களுடன் நடிகைகள் திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்பொழுது ஐதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது. படத்தை குறித்து அடுத்தடுத்து புதிய போஸ்டர்கள் படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் படக்குழு தற்பொழுது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் ரெஜினா கசாண்ட்ரா, அஜித் மற்றும் திரிஷா இடம் பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com