சிவகார்த்திகேயனின் SK23 படத்தில் இணைந்த பிஜு மேனன்

SK23 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி நடிக்கிறார். இப்படத்தில் பிஜு மேனன் இணைந்ததாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
sk 23 - piju menon
Published on

அயலான் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். எனவே ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

மேலும் கதாநாயகியாக ருக்மிணி நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com