என் மலர்
சினிமா செய்திகள்
- கடந்த மே 20 ஆம் தேதி என்.டி.ஆர் பிறந்தநாள் அன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.
- இந்நிலையில் 'NTR-31' படம் இன்று பூஜையுடன் துவங்க உள்ளது
கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கே.ஜி.எப் படத்தின் 3 ஆம் பாகத்தில் அஜித் குமார் இணையலாம் என்று வைரலாக பேசப்பட்டது.
இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக கடந்த மே 20 ஆம் தேதி என்.டி.ஆர் பிறந்தநாள் அன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.
இந்நிலையில் 'NTR-31' படம் இன்று பூஜையுடன் துவங்க உள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை விரைவில் படக்குழு முடிவு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கிடையில், கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர்.என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவரா', படம் வரும் அக்டோபர் 10 அன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இன்று மதியம் 12.07 மணிக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
- அஜித் நடிக்கும் 62 - வது படமாக இது உருவாகி வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித் நடிக்கும் 62 - வது படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர் இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் 12.07 மணிக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் பிக் பாஸ் புகழ் ஆரவின் புதிய போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அர்ஜெய் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.
- இந்த படத்திற்கு அஸ்வத் இசையமைக்கிறார்.
தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக உருவாகும் GANGSTER-FANTASY படத்தை ஸ்மால் ஃபாக்ஸ் ஸ்டூடியோ (Small Fox Studio) நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் அர்ஜெய் - லிங்கா இணைந்து கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். முன்னதாக தெறி, சுல்தான், அண்ணாத்த, சண்டக்கோழி - 2, எமன், அன்பறிவு, தேள், போன்ற படங்களில் மிரட்டிய அர்ஜெய் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.
அதுபோல் "சேதுபதி" படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிங்கா அதன்பிறகு அதே கண்கள், ஹர ஹர மஹாதேவகி, கருப்பன், கஜினிகாந்த், சிந்துபாத், மிக மிக அவசரம், வி1, பெங்குயின், அனபெல் சேதுபதி, பரோல், டிஎஸ்பி, உடன்பால் என பல்வேறு படங்களில் மிரட்டிய லிங்கா இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.
தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்த அர்ஜெய் மற்றும் லிங்கா கூட்டணி தற்போது புதிய படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட பணிகளை அறிமுக இயக்குநர் கௌதம் செல்வராஜ் மேற்கொள்கிறார். F.I.R, இன்ஸ்பெக்டர் ரிஷி, படத்தின் புகழ் அஸ்வத் அவர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு பிரேண்டன் ஷசாந்த். கேங்ஸ்டர் ஃபேண்டஸி படத்தில் ஜெயக்குமார், சரத் ரவி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- தி கோட் படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
தி கோட் படத்தின் டிரைலர் ஆக்ஸ்ட் மாதத்தின மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தி கோட் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் தி கோட் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கோட் படத்தின் புதிய அப்டேட் உடன் படத்திற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
- கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
தென்னிந்திய திரை உலகில், அனைவராலும் அறியப்பட்ட ஹீரோயினாக மாறி உள்ளவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படம் ஒரு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது.
இதன் பின்னர் புத்தகம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு.. 'காக்கா முட்டை' திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

தற்போது தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான ஃபர்ஹானா திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றார். தற்போது கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க, போன்ற தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்கள் மற்றும் ஒரு கன்னட திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வபோது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். பெரிதும் கவர்ச்சியில் ஆர்வம் காட்டாத இவர் தற்போது கிளாமர் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன்.
- முதல் பதிப்பை விட இரண்டாம் பதிப்பில் கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.
திரைப்பட துறையில் யாரும் எதிர்பாராமல் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம் உண்டு. அத்தகைய படங்கள் பெரும்பாலும் நம்பிக்கை என்ற ஒற்றை அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து சிறப்பான கதை மற்றும் தொழில்நுட்ப குழுவின் நேர்த்தியான படைப்பு தான் அதை வெற்றி படமாக மாற்றும்.
அந்த வரிசையில் "மாயன்" திரைப்படம் நிச்சயம் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது.

ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.
இந்த படத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டு உள்ளன.
2 பதிப்புகளாக மாயன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஒன்று, மாயன் காலண்டர் மற்றும் உலகின் முடிவு பற்றியும், இரண்டு, உலகம் அழிந்ததா இல்லையா? மாயனுக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றி உருவாக்கி இருக்கிறார்கள்.
முதல் பதிப்பை விட இரண்டாம் பதிப்பில் கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.
ஜெ.ராஜேஷ் கன்னா எழுதி, இயக்கி இருக்கும் "மாயன்" படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜி.வி.கே.எம். எலிபன்ட் பிக்சர்ஸ் டாட்டோ கணேஷ் மோகன சுந்தரம் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆங்கில பதிப்பில் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இவர்கள் தவிர பியா பாஜ்பாய், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு, ராஜ சிம்மன், ஶ்ரீ ரஞ்சனி, ரஞ்சனா நாச்சியார், கே.கே. மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு எம்.எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே. அருண் பிரசாத், படத்தொகுப்பு பணிகளை எம்.ஆர். ராஜேஷ் மேற்கொண்டுள்ளனர். கலை இயக்க பணிகளை ஏ. வனராஜ் மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
- தங்கலான் திரைப்படத்தில் ஆரத்தி என்கிற கேரக்டரில் மாளவிகா நடித்துள்ளார்.
- தங்கலான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
கேரளாவில் இருந்து கோலிவுட் வந்து பேமஸ் ஆன நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் மாளவிகாவுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.

மாஸ்டர் படமும் ஹிட்டானதால் கோலிவுட்டில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தார் மாளவிகா. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
தங்கலான் திரைப்படத்தில் ஆரத்தி என்கிற கேரக்டரில் மாளவிகா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் தங்கலான் புரமோஷனின் போது டார்க் ரெட் கலர் சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது.
- வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக தகுதி நீக்கம்.
- கடினமான நேரங்களே வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதியில் வென்று, இறுதிப்போட்டிக்கு நுழைந்தார்.
ஆனால், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், மல்யுத்தம் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்தார்.
இதனால், வினேஷ் போகத்திற்கு இந்தியாவில் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
வினேஷ் போகத் வென்றார். ஆம், மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார். கடினமான நேரங்களே வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன. நீங்கள் தனியாக இல்லை.. எது வந்தாலும் நாங்கள் அனைவரும் உங்களுடன் நிற்கிறோம். உறுதியாக இருங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து வெளியாகியது இந்தியன் 2 திரைப்படம்.
- பிரியா பவானி சங்கர் அடுத்ததாக டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து வெளியாகியது இந்தியன் 2 திரைப்படம். வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படத்தின் தோல்விக்கு காரணம் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்தது தான் என்றும், அவரது துரதிஷ்டம் தான் காரணம், என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். பிரியா பவானி சங்கர் நடித்த பொம்மை, அகிலன், ருத்ரன், ரத்னம், இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.
நெட்டிசங்களின் கமெண்டை குறித்து பிரியா சமீபத்தில் நடந்த நேர்காணலில் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் " திரைப்படம் நன்றாக ஓடாதத்துக்கு காரணம் முழுக்க, முழுக்க என்னை காரணம் சொல்வது நியாயம் இல்லை, என்னை துரதிஷ்டசாலி என்று கூறும் பொழுது மிகவும் மனக்கஷ்டத்துக்கு ஆளானேன். இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்ததற்கு நான் எந்த விதத்திலும் வருத்தப்படமாட்டேன். " என்று கூறியுள்ளார். கூடுதலாக அடுத்தாண்டு அவருக்கு அவருடைய காதலரான ராஜ வேலை திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார்.
பிரியா பவானி சங்கர் அடுத்ததாக டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தற்பொழுது வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்தும் உள்ளார்.
- மாரி செல்வராஜ் அவர் அடுத்து இயக்கப் போகும் படங்களை குறித்து பகிர்ந்துக் கொண்டார்.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாம்மன்னன் திரைப்படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசிப் படம் இதுவே.
தற்பொழுது வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் மாரி செல்வராஜ் அவர் அடுத்து இயக்கப் போகும் படங்களை குறித்து பகிர்ந்துக் கொண்டார்.
அவர் பைசன் திரைப்படத்திற்கு அடுத்து தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கப்போகிறார். அதைதொடர்ந்து கார்த்தியை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
`மாமன்னன் திரைப்படம் எடுக்கும் சமயத்தில் கார்த்தி என்னை நேரில் அழைத்து கதைக் கேட்டார், நான் ஒரு 5 நிமிட கதையை கூறினேன், என்னுடௌ கதைக்களமும், கதையின் வீரியமும் அவருக்கு நன்றாக புரிந்தது அதனால். நானும் அவரும் ஒன்றாக பணியாற்றவுள்ளோம்.' என கூறியுள்ளார்.
கார்த்தி தற்பொழுது மெய்யழகன், வா வாத்தியார், சர்தார் 2 , போன்ற படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் பிரபல இயக்குனர்களுடன் இணைந்து படத்தில் நடித்து வருவதால் கார்த்தி நடிக்கும் படம் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது.
- புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் .
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நடிகர் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 6 ஆம் தேதி-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஃபகத் ஃபாசிலிற்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஃபகத் ஃபாசில் புஷ்பா திரைப்படத்தில் பன்வர் சிங் ஷேகாவத் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். போஸ்டரில் லுங்கி அணிந்துக் கொண்டு ஒரு கையில் கோடாரியும் மற்றொரு கையில் துப்பாகியுடன் மிகவும் மாஸான லுக்கில் காணப்படுகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
- கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தை தொடர்ந்து டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
யாஷ் கன்னட சினிமாவின் முன்னணி நடிகராவார். ராக்கி என்ற கன்னட திரைப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ். அப்படத்திற்கு பிறகு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தை தொடர்ந்து டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்கவுள்ளார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நட்க்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை விழாவுடன் தொடங்கப்பட்டது. இதுக்குறித்து பூஜை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் அவர்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த பூஜை விழாவில் நடிகர் யாஷ் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலந்துக்கொண்டார். இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது என குறிப்பிடத்தக்கது.
படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்து விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் எடுக்கப்பட்ட யாஷின் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






