வம்பிழுக்கும் நெட்டிசன்கள் - மனம் திறந்த பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து வெளியாகியது இந்தியன் 2 திரைப்படம். பிரியா பவானி சங்கர் அடுத்ததாக டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
வம்பிழுக்கும் நெட்டிசன்கள் - மனம் திறந்த பிரியா பவானி சங்கர்
Published on

சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து வெளியாகியது இந்தியன் 2 திரைப்படம். வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இப்படத்தின் தோல்விக்கு காரணம் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்தது தான் என்றும், அவரது துரதிஷ்டம் தான் காரணம், என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். பிரியா பவானி சங்கர் நடித்த பொம்மை, அகிலன், ருத்ரன், ரத்னம், இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.

நெட்டிசங்களின் கமெண்டை குறித்து பிரியா சமீபத்தில் நடந்த நேர்காணலில் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் " திரைப்படம் நன்றாக ஓடாதத்துக்கு காரணம் முழுக்க, முழுக்க என்னை காரணம் சொல்வது நியாயம் இல்லை, என்னை துரதிஷ்டசாலி என்று கூறும் பொழுது மிகவும் மனக்கஷ்டத்துக்கு ஆளானேன். இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்ததற்கு நான் எந்த விதத்திலும் வருத்தப்படமாட்டேன். " என்று கூறியுள்ளார். கூடுதலாக அடுத்தாண்டு அவருக்கு அவருடைய காதலரான ராஜ வேலை திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார்.

பிரியா பவானி சங்கர் அடுத்ததாக டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com