imax-ல் விஜய்-ன் "தி கோட்" - வெளியான சூப்பர் போஸ்டர்..!

தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.தி கோட் படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
the goat movie poster
Published on

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

தி கோட் படத்தின் டிரைலர் ஆக்ஸ்ட் மாதத்தின மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தி கோட் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் தி கோட் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கோட் படத்தின் புதிய அப்டேட் உடன் படத்திற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com