என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜீவாவுடன் கீ படத்தில் நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, கேமரா மேனுடன் லின்க் இருக்கா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். #Kee #NikkiGalrani
    சார்லின் சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து நிக்கி கல்ராணி நடிப்பில் தற்போது ‘கீ’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். காலீஸ் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நிக்கி கல்ராணி மாலைமலருக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு,

    கீ தலைப்பு கேட்டவுடன் உங்களுக்கு நினைவில் வந்தது?

    ‘கீ’ என்ற தலைப்பு கேட்டவுடன் பூட்டுக்கு தேவைப்படும் சாவி தான் நினைவிற்கு வந்தது. ஆனால், இயக்குனர் அந்த கீ இல்லை என்றார். நாம் எந்த செயல் செய்தாலும் அதில், நல்லதும் கெட்டதும் நடக்கும். கெட்டதிலும் நல்லது நடக்கும். அதுதான் கீக்கு அர்த்தம். கதையை கேட்டவுடன் தலைப்புக்கான அர்த்தம் புரிந்தது.

    இந்த படத்தில் உங்களுடைய கதாபாத்திரம்?

    நான் இந்த படத்தில் தியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நம் அன்றாட வாழ்வில் புதிய டெக்னாலஜியுடன் கூறிய மொபைல் போனை பயன்படுத்தி வருகிறோம். ஒரு ஹாக்கர் மூலம் நம்முடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் படம். 



    பெண்கள் மொபைல் போனை பாதுகாப்பாக உபயோகப்படுத்த வேண்டுமா?

    பெண்கள் மட்டும் இல்லை. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதை தான் இப்படமாக உருவாகியுள்ளது.

    ஜீவாவுடன் நடித்த அனுபவம்?

    ஜீவாவுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கீ படம் நானும் ஜீவாவும் நடித்த முதல் படம், ஆனால், கலகலப்பு 2 முதலில் ரிலீஸ் ஆனது. நாங்கள் இருவரும் துறுதுறுவாக இருப்போம். படப்பிடிப்பில் சண்டை போட்டுக் கொண்டே இருப்போம். ஜாலியாக பலரை கலாய்த்துக் கொண்டே இருப்போம். எங்கள் கிட்ட இயக்குனர்தான் மிகவும் மாட்டிக்கொண்டார். படப்பிடிப்பில் அவ்வளவு ஜாலியாக இருக்கும்.

    இயக்குனர் காலீஸ் பற்றி?

    புது இயக்குனர். மிகவும் பொறுப்புடன் இந்த கதையை தேர்ந்தெடுத்து சிறப்பாக இயக்கி இருக்கிறார். 



    இசை பற்றி?

    படத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். எனக்கும் ஜீவாவிற்கும் ஒரு டூயட் சாங் இருக்கிறது. அதுதான் எனக்கு மிகவும் பிடித்த பாடல். மற்ற பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெறும் பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

    கதாநாயகிகள் தங்களை அழகாக காட்டுவதற்காக கேமரா மேனுடன் லின்க் வைத்திருப்பார்கள்? அதுபோல் நீங்களும் லின்க் வைத்திருக்கிறீர்களா? 

    எனக்கும் கேமரா மேனுக்கும் லின்க் எல்லாம் ஒன்றும் இல்லை. நான் என் வேலையை பார்த்தேன். அவர், அவர் வேலையை பார்த்தார். திரையில் பார்க்கும் போது காட்சிகள் அழகாக இருக்கும். 

    படம் பார்த்துட்டு எப்படி ரியாக்ட் செய்வார்கள்?

    இந்த படம் எல்லாம் தரப்பு மக்களுக்கும் பிடிக்கும். 4 வயது குழந்தை முதல் 70 வயது உள்ளவர்கள் வரை ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். இப்படம் தற்போதைய விழிப்புணர்வு படம் என்றே சொல்லலாம். 

    இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.
    கயல் படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஆனந்தி, தற்போது புதிய படத்தில் பிக்பாக்கெட் திருடியாக நடித்துள்ளார். #Anandhi #AlaudhininArputhaCamera
    ‘மூடர் கூடம்’ படத்தை தொடர்ந்து நவீன் எழுதி, இயக்கியுள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இந்த படத்திலும் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.

    பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி. முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.



    ஏப்ரல் 19ந்தேதி இந்தப் படம் ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் இந்த படத்தில் வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகும் `உயர்ந்த மனிதன்' படத்தில் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #UyarndhaManithan
    பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல்முறையாக எஸ்.சூர்யாவுடன் இணைந்து நேரடி தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ்வாணன் இயக்கத்தில் ‘உயர்ந்த மனிதன்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், படத்தில் அமிதாப் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு இந்தி படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



    திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். தமிழ், மற்றும் இந்தியில் இந்த படம் உருவாகி வருகிறது. #UyarndhaManithan #AmitabhBachchan #SJSuryah #RamyaKrishnan

    நிதின் சத்யா தயாரிப்பில் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பூர்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Vaibhav #Poorna
    வைபவ் நடிப்பில் ஆர்.கே.நகர் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர காட்டேரி, சிக்ஸர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

    தற்போது நிதின் சத்யா தயாரிப்பில் இரண்டாவது படமாக உருவாகும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜன், ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பூர்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    வைபவ், பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகிய மூன்று பேருமே போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக உருவாகும் இதன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Vaibhav #Poorna

    ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `மாம்' படத்தின் புதிய சீன ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #MOM #Sridevi
    இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது 300-வது திரைப்படமான `மாம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது.

    இந்த படத்தில் தனது மகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து பழிவாங்கும் தாயாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். இந்தியா மட்டுமின்றி, போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் இந்த படம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சீனாவிலும் வெளியாக இருக்கிறது. மார்ச் 22-ஆம் தேதி `மாம்' படம் சீனாவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.



    அதன்படி படம் அன்னையர் தினத்தை முன்னிட்டு மே 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரவி உதயவார் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ரஹ்மானுக்கு கிடைத்தது. #MOM #Sridevi

    மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமாகி இருக்கிறார். #PonniyinSelvan #AishwaryaRai
    இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில வி‌ஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

    கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என பெரிய நட்சத்திரங்களை வைத்துப் படமாக்க முயற்சித்தார் மணிரத்னம். ஆனால், அது கைகூடவில்லை. எனவே, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.



    இந்நிலையில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

    பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். கதைப்படி நந்தினி கதாபாத்திரம் பேரழகி. கதையின் வில்லியான இந்தக் கதாபாத்திரம், பல்வேறு வேடங்கள் தரித்து ஏமாற்று வேலை செய்யும். எனவே, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயை விதவிதமான தோற்றங்களில் காணலாம். #PonniyinSelvan #AishwaryaRai  #Maniratnam

    பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி இருக்கும் லூசிபர் படத்தில் மோகன் லால் போலீஸை மிதிக்கும் காட்சிக்கு கேரள போலீஸார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #Lucifer #MohanLal
    மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் மலையாள படம் லூசிபர். இந்த படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கியிருக்கிறார். லூசிபர் கேரளாவில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல தியேட்டர்களில் திரையிட்டுள்ளனர். படத்தில் மோகன்லால் சண்டைக் காட்சிகளில் அதிரடிகாட்டி இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

    ஒரு காட்சியில், மோகன்லால் செருப்பு அணிந்த காலுடன் போலீஸ் அதிகாரியின் மார்பில் மிதிப்பது போன்ற காட்சி படத்தில் உள்ளது. இதை சுவரொட்டிகளாக அச்சிட்டும் கேரளாவில் ஒட்டி உள்ளனர். இதனை கேரள போலீஸ் சங்கம் கண்டித்து முதல்-மந்திரியிடம் புகார் அளித்துள்ளது. 



    புகார் மனுவில், “மக்கள் மத்தியில் போலீசார் மீது அவப்பெயரை ஏற்படுத்துவது போல் இந்த காட்சி உள்ளது. முன்பு குற்றவாளிகளே போலீஸ் மீது கைவைக்க பயந்தனர். தற்போது பொதுமக்கள்கூட போலீசை தாக்க அஞ்சாத நிலை உள்ளது. இந்த மாதிரி படங்கள் இளைஞர்கள் மனதை கெடுத்து போலீசை தாக்க தூண்டிவிடுகின்றன. புகையிலை, மது அருந்துவது தவறு என்று படத்தில் வாசகம் இருப்பதுபோல், போலீசாரை தாக்குவது தவறு என்ற வாசகமும் இடம்பெற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    போலீசாரின் இந்த புகாரை பலரும் சமூக வலைத்தளத்தில் கேலி செய்து வருகிறார்கள். பொதுமக்கள் படத்தை படமாக மட்டுமே பார்க்கின்றனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். #Lucifer #MohanLal #Prithviraj #ManjuWarrier

    வி.வி.விநாயக் இயக்கத்தில் ராம் சரண் - காஜல் அகர்வால், அமலா பால் நடிப்பில் வெளியான `நாயக்' படத்தின் விமர்சனம். #Naayak #NaayakReview
    நாயகன் ராம் சரண் ரகசியமாக சிலரை கொலை செய்து வருகிறார். இதற்கிடையே நாயகி காஜல் அகர்வாலை பார்க்கும் ராம் சரணுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதலிக்க ஆரம்பிக்கிறார். உள்ளூர் ரவுடியும், காஜல் அகர்வாலின் அண்ணணுமான ராகுல் தேவ் தனது தங்கை பின்னால் சுற்றும் ராம் சரணை கொல்ல திட்டமிடுகிறார்.

    இந்த நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவரை ராம் சரண் கொலை செய்வதை பார்த்து ராகுல் தேவ் மிரண்டுபோகிறார். இதையடுத்து ராம் சரண் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். அதில் ராம் சரண் இரட்டையர் என்பது தெரிய வருகிறது. இந்த வழக்கை ஆசிஷ் வித்யார்த்தி விசாரிக்க, கடைசியில் ராம் சரண் செய்யும் கொலைகளுக்கான காரணம் என்ன? ராம் சரண் - காஜல் அகர்வால் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ராம் சரண் ஆக்‌ஷன், காதல் என அதளகளப்படுத்தியிருக்கிறார். காஜல் அகர்வால், அமலாபால் என இருவருமே கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருந்தாலும், ஒரு பாடலில் மட்டும் நடனமாடி செல்லும் சார்மி ரசிக்க வைத்திருக்கிறார். பிரம்மானந்தத்தின் காமெடி படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. ராகுல் தேவ், ஆசிஷ் வித்யார்த்தி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    வழக்கமான பழிவாங்கல் கதையை கதைக்களமாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் வி.வி.விநாயக். தற்போது பார்ப்பதற்கு சலிப்பை ஏற்படுத்தினாலும், படம் ரிலீசான நேரத்தில் வரவேற்பை பெற்றிருக்கும் என்பதை உணர முடிகிறது.



    சோட்டா கே.நாயுடுவின் ஒளிப்பதிவு அற்புதம். தமனின் இசை படத்திற்கு பலம் தான். பாடல்கள் சுமார் ரகம்.

    மொத்தத்தில் `நாயக்' அதிரடி இல்லை. #Naayak #NaayakReview #RamCharan #KajalAggarwal #AmalaPaul

    எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை இயக்கத்தில் உருவாகும் `கடாவர்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தில் நடிகை அமலா பால் புதிய அவதாரம் ஒன்றை எடுக்கவிருக்கிறார். #Cadavar #AmalaPaul
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியான அமலா பால் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ராட்சசன் படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல, ஆடை மற்றும் சில மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. `கடாவர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் அமலா பால், தடய நோயியல் நிபுணராக நடிக்கிறார். அதுல்யா, ஹரிஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் உமா டத்தனால் எழுதப்பட்ட 'ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இயக்குனர் அனூப் பணிக்கர் மற்றும் எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை திரைக்கதையில் குறிப்பிடத்தக்க வேலைகளை செய்துள்ளார்கள்.



    ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். ராகுல் கருப்பையா கலை பணிகளையும், விக்கி சண்டைப்பயிற்சியையும் மேற்கொள்கின்றனர்.

    இந்த படத்தின் மூலம் அமலா பால் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுக்கிறார். ஏபிஜே ஃபிலிம்ஸ் சார்பில் அஜய் பணிக்கர் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் பிரதீப்புடன் இணைந்து அமலா பாலும் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து படங்களை தயாரிப்பது பற்றி முடிவு செய்வதாக அமலா பால் கூறியுள்ளார். #Cadavar #AmalaPaul

    பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்துள்ள பல்லக் லால்வானி அளித்த பேட்டியில் தமிழ் பேசுவதற்கு பயந்ததாக கூறினார். #PalakLalwani
    டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்குனராக அறிமுகமாகும் தமிழ் படம், குப்பத்து ராஜா. ஜிவி.பிரகாஷ், பார்த்திபன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இதில் கதாநாயகியாக நடித்துள்ள பாலக் லால்வானி கூறும் போது, ‘படத்தில் நடிக்க ஒப்பந்தமான நான், முதல் நாள் படப்பிடிப்பில் அதிக பதற்றத்துடன் இருந்தேன்.

    காரணம், இந்தக் கதை லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியா தமிழைப் போன்று பேசி நடிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன். பிறகு டைரக்டர் என்னிடம் பொறுமையாகப் பேசி, எனக்கான வசனத்தை சொல்லி கொடுத்தார். 



    சென்னை விளிம்பு நிலை ஏரியா ஒன்றில் நடக்கும் கதையில், அங்கு வசிக்கும் ஒரு பெண்ணாக நடிக்கிறேன். படத்தில் சும்மா வந்து போகும் கேரக்டராக இருக்காது’ என்று சொன்னார். #PalakLalwani #KuppathuRaja

    ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் `காஞ்சனா 3’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஓவியா, ரசிகர்கள் தனக்கு பக்கபலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். #Oviyaa #Kanchana3
    ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் `காஞ்சனா 3’. `முனி’, `காஞ்சனா’, `காஞ்சனா 2’ ஆகிய வரிசையில் இந்தப் படமும் தயாராகி இருக்கிறது. திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தில் ஓவியா, வேதிகா ஆகிய 2 கதாநாயகிகளுடன் 3வதாக நிக்கி தம்போடி என்ற நாயகியும் இணைந்துள்ளார். பிக்பாஸ் மூலம் ஓவியா ஏற்பட்ட புகழை 90 எம்.எல் படத்தில் நடித்ததன் மூலம் கெடுத்துக் கொண்டார் என்று பேச்சு எழுந்துள்ளது.



    எனவே ஓவியா தனது இமேஜை முனி4 படம் தான் தூக்கி நிறுத்தும் என்று நம்பி இந்த படத்தை எதிர்பார்த்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது ’எனக்கு எந்த பிரச்சினை இருந்தாலும், என் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள். என்னோட அடுத்த படமான ‘காஞ்சனா 3’ மற்றும் ‘களவாணி 2’ படத்துல வர்ற கதாபாத்திரம் முற்றிலும் வேறமாதிரி இருக்கும்’ என்றார். #Oviyaa #Kanchana3

    நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா இன்று பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். #NadanaThalaivan #Prabhudeva
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபுதேவா இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. பிரபுதேவா இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    சமூக வலைதளங்களில் பலரும் பிரபுதேவாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரபுதேவாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக `நடன தலைவன்' என்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.



    அதில் பிரபுதேவாவை முன்மாதிரியாக நினைக்கும் பல்வேறு நடன கலைஞர்கள் இதில் நடனமாடியுள்ளனர். மேலும் இந்த வீடியோவில் பிரபல நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், ஜானி மற்றும் தீபக் உள்ளிட்டோரும் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளனர்.

    சந்தோஷ் நடனத்தில் உருவாகி இருக்கும் இந்த வீடியோவை கார்த்திக் என்பவர் இயக்கியிருக்கிறார். #NadanaThalaivan #Prabhudeva

    ×