என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jakes bejoy"

    • கேஜிஎப் சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருது பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் கமலின் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்கள்.
    • படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிப்பார் என்றும் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது. படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிப்பார் என்றும் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.

    கமல் 237-ஆவது படத்தினை பிரபல சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ்(அன்புமணி, அறிவுமணி) சகோதர்கள் இயக்குகிறார்கள்.

    கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க மலையாள இயக்குநர் ஷ்யாம் புஷ்கரன் திரைக்கதையில் இப்படம் உருவாக உள்ளது.

    கேஜிஎப் சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருது பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் கமலின் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாவது அனைவரிடையே கவனம் பெற்றது.

    படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிப்பார் என்றும் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் கமல் 237 படத்தின் தொழில்நுட்ப குழுவை படக்குழு அறிமுகப்படுத்தி உள்ளது.

    அதன்படி, ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்கு இசையமைப்பதாகவும், சுனில் கே.எஸ். ஒளிப்பதிவு செய்வதாகவும் ஷெமீர் கே.எம். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசையில் கடைசியாக வெளியான லோகா படம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    இவர்களுடன் இணைந்து கமல் எடுத்துக்கொண்ட புகைப்படங்ளும் வெளியாகி உள்ளது. 

    • இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும்.
    • ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

    1984 ஆம் ஆண்டு 'ஏப்ரல் 18' படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாள சினிமாவிற்கு அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு கமல் நடித்து வெளியான எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார் ஷோபனா.

    பின் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தார்.

    அதன் பின் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி உள்பட ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தில் நடித்தார்.

    இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக ஷோபனா இணைய தளத்தில் சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும். ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

    இவர்கள் இணைந்து நடித்த மணிச்சித்திரதாழு, தென்மாவின் கொம்பத், பால கோபாலன் எம்.ஏ, பவித்ரம், மின்னாரம் ஆகிய படங்கள் மிகப் பெரிய படங்களாக அமைந்தது. ஷோபனா மற்றும் மோகன்லால் ரீல் ஜோடியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள்.

    தற்பொழுது அவர்கள் நடிக்கும் படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். தரூண் மூர்த்தி இதற்கு முன் ஆப்ரேஷன் ஜாவா படத்தை இயக்கியவர் ஆவார்.

    இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல் -360 'என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

     

    கடைசியாக மோகன்லால் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்தார். படம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை, எல் 360 படம் வெற்றியடைய வேண்டும் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. இது குறித்து மோகன்லால் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×