search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகை அமலா பாலின் புதிய அவதாரம்
    X

    நடிகை அமலா பாலின் புதிய அவதாரம்

    எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை இயக்கத்தில் உருவாகும் `கடாவர்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தில் நடிகை அமலா பால் புதிய அவதாரம் ஒன்றை எடுக்கவிருக்கிறார். #Cadavar #AmalaPaul
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியான அமலா பால் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ராட்சசன் படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல, ஆடை மற்றும் சில மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. `கடாவர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் அமலா பால், தடய நோயியல் நிபுணராக நடிக்கிறார். அதுல்யா, ஹரிஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் உமா டத்தனால் எழுதப்பட்ட 'ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இயக்குனர் அனூப் பணிக்கர் மற்றும் எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை திரைக்கதையில் குறிப்பிடத்தக்க வேலைகளை செய்துள்ளார்கள்.



    ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். ராகுல் கருப்பையா கலை பணிகளையும், விக்கி சண்டைப்பயிற்சியையும் மேற்கொள்கின்றனர்.

    இந்த படத்தின் மூலம் அமலா பால் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுக்கிறார். ஏபிஜே ஃபிலிம்ஸ் சார்பில் அஜய் பணிக்கர் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் பிரதீப்புடன் இணைந்து அமலா பாலும் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து படங்களை தயாரிப்பது பற்றி முடிவு செய்வதாக அமலா பால் கூறியுள்ளார். #Cadavar #AmalaPaul

    Next Story
    ×