என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வரும் நடிகர் விவேக் விரைவில் சமூக அக்கறையுள்ள காமெடி படமொன்றை இயக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். #Vivekh
    நடிகர் விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வெள்ளை பூக்கள். விவேக் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வருகிறது.

    இந்த நிலையில் விவேக் அளித்த பேட்டியில் கூறியதாவது,

    அடுத்த திட்டம்?

    விரைவில் ஒரு படம் இயக்க போகிறேன். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நகைச்சுவை படமாக இருக்கும். முன்னணி கதாநாயகர் ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன்.



    சமீபகாலமாக சினிமாவில் காமெடி குறைந்தது போல் தெரிகிறதே?

    நான், வடிவேலு போன்றோர் நடிக்கும் வரை படங்கள் இரண்டரை மணி நேரத்தை தாண்டி ஓடும். எனவே எங்களுக்கு நகைச்சுவைக்காக தனி டிராக் கிடைக்கும். ஆனால் இப்போது 2 மணி நேரம் ஒரு சினிமாவில் ரசிகர்களை அமர வைப்பதே சவாலாக இருப்பதால் அதற்கும் குறைவான படங்களே உருவாகின்றன. எனவே படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்றார். #Vivekh #VellaiPookkal

    நெசவுக்கலையின் அவசியத்தை உணர்த்தும் வகையில், தறி என்ற தொடரை தயாரிப்பதாக நடிகை லலிதா குமாரி கூறியுள்ளார். #LalithaKumari
    கே.பாலசந்தர் இயக்கிய `மனதில் உறுதி வேண்டும்' படத்தில் நடிகையாக அறிமுகமானவர் லலிதா குமாரி. இவர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். நீண்ட காலமாக நடிப்பில் இருந்து விலகி இருந்த லலிதா குமாரி தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ‘தறி’ என்ற தொடரை தயாரிக்கிறார்.

    இது குறித்து லலிதா குமாரி பேசுகையில், “நெசவாளர் சமூகத்தின் உண்மையான சாரத்தையும், அவர்களது சவால்களையும் நேர்த்தியாக படம்பிடித்திருக்கிறோம். தறி தொடருக்காக இரண்டு வாரங்கள் நெசவாளர்களுடன் தங்கி, அவர்கள் எப்படி நூல் எடுக்கிறார்கள், எப்படி நூலை காய வைக்கிறார்கள், எப்படி கலர் பூசுகிறார்கள், பட்டு நூலை எப்படி காயவைத்து பிரிக்கிறார்கள் என்பதை அறிந்து, அங்கிருக்கும் மக்களிடம் நேர்காணல் செய்துதான் இந்த கதையை உருவாக்குகிறோம்.



    இந்த கதையின் வழியாக நெசவுக்கலை மீது மக்களது கவனமும், அக்கறையும் திரும்பும் என்று உறுதியாக நம்புகிறோம். பாரம்பரியமான நெசவு தொழிலை பாதுகாக்கும் அவசியத்தை இந்த நிகழ்ச்சி வலியுறுத்தும் என்றார். #LalithaKumari #Thari

    எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் காமெடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஈஷா ரெபா என்ற தெலுங்கு நடிகை ஒப்பந்தமாகியிருக்கிறார். #GVPrakashKumar #EeshaRebba
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் குப்பத்து ராஜா படம் வருகிற ஏப்ரல் 5-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. தொடர்ந்து வாட்ச்மேன் படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

    இந்த நிலையில், எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக தெலுங்கு நடிகை ஈஷா ரெபா தமிழில் அறிமுகமாகிறார்.



    அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ்.பி. பிள்ளை தயாரிக்கும் இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். திகில் கலந்த காமெடி படமாக இந்த படம் உருவாகிறது. #GVPrakashKumar #EeshaRebba #Ezhlil

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா ஒப்பந்தமாகி இருக்கிறார். #SK16 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் 5 படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படம். சின்னத்திரையில் வலம் வந்த சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ்.

    மெரினா திரைப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும்  இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி இருக்கிறார்.



    சிவகார்த்திகேயனுக்கு தாத்தா அல்லது அப்பாவாக பாரதிராஜா நடிக்கலாம் என்கிறார்கள். பாரதிராஜா, சுசீந்திரன் இயக்கிவரும் ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்து வருகிறார். பெண்கள் கபடியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. #SK16 #Sivakarthikeyan #Bharathiraja

    ஜே.பி.ஆர், ஷாம் சூர்யா இயக்கத்தில் பாபி சிம்ஹா, மதுபாலா நடிப்பில் வெளியான அக்னிதேவி படத்திற்கு பாபி சிம்ஹா எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் மீது மதுபாலா கோபத்தில் இருக்கிறாராம். #AgniDevi #BobbySimha
    தமிழில் ரோஜா படத்தில் நடித்து பிரபலமாகி 1990-களில் முன்னணி நடிகையாக இருந்த மதுபாலா நீண்ட இடைவெளிக்கு பிறகு பாபி சிம்ஹா கதாநாயகனாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த அக்னி தேவி படத்தில் வில்லியாக நடித்தார். இந்த படம் சர்ச்சையில் சிக்கியது. படத்தை தடைசெய்யும்படி பாபிசிம்ஹா கோர்ட்டுக்கு சென்றார்.

    இதனால் படக்குழுவினர் முதலில் வைத்திருந்த அக்னிதேவ் தலைப்பை அக்னிதேவி என்று மாற்றி திரைக்கு கொண்டு வந்துவிட்டனர். படத்துக்கு எதிராக பாபிசிம்ஹா தொடர்ந்துள்ள வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து போலீசிலும் புகார் அளித்தது.



    இந்த படத்தின் சர்ச்சைகள் குறித்து மதுபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

    ‘‘நான் அக்னிதேவி படம் சம்பந்தமாக நடக்கும் பிரச்சினைகளை கவனித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு நல்ல படத்துக்கு பிரச்சனை ஏற்பட்டு இருப்பது வருத்தமாக உள்ளது. இயக்குனர்கள் ஜான் மற்றும் சூர்யாவுக்காக வருந்துகிறேன். எனது சினிமா வாழ்க்கையில் நான் நடித்ததில் சிறந்த படம் இதுதான். சிறந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்து இருந்தார்கள். இதை பெரிய ஆசிர்வாதமாக கருதுகிறேன். இந்த படத்தின் இயக்குனர்கள் ஜான், சூர்யா ஆகியோருக்கு ஆதரவாக இருப்பேன்.’’

    இவ்வாறு மதுபாலா கூறியுள்ளார். 

    பாபிசிம்ஹா பெயரை அவர் குறிப்பிடவில்லை. படத்தை தடுக்க முயன்றதால் பாபிசிம்ஹா மீது மதுபாலா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. #AgniDevi #BobbySimha #MadhooBala

    பிரதமர் மோடியின் படத்திற்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து, படத்தில் மோடியாக நடித்துள்ள விவேக் ஓபராய், மோடியின் படத்தை கண்டு பயமா? காவலாளியின் தடியை கண்டு பயமா? என கேள்வி எழுப்பியுள்ளார். #VivekOberoi #NarendraModiMovie
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

    மோடி படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். மோடி படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்த படம் நடைபெற உள்ள தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்து உள்ளது.

    ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் “இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும்” என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.



    இது குறித்து படத்தில் பிரதமர் மோடியாக நடித்திருக்கும் விவேக் ஒபராய் கூறியதாவது:

    இந்த படத்தை ஏன் இந்த அளவு சிலர் எதிர்க்கின்றனர்?  என புரியவில்லை. மூத்த மற்றும் பிரபல வக்கீல்களான அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் இது போன்ற சாதாரண படத்திற்கு தடை கோரி மனு அளித்ததும் ஏன்? என தெரியவில்லை. இவர்கள் மோடியின் படத்திற்கு பயப்படுகிறார்களா?அல்லது  காவலாளியின் தடியை கண்டு பயப்படுகிறார்களா?

    படத்தில் மோடியை மிகைப்படுத்தி காட்டப்படவில்லை. மேலும் அவரை ஒரு ஹீரோவாகவும் காட்டவில்லை. அவர் எனக்கு மட்டுமல்ல,  நாட்டில் உள்ள அத்தனை கோடி மக்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் ஹீரோ ஆவார். திரைக்கு வரவிருக்கும் மோடியின் வாழ்க்கை குறித்த இந்த படம் மக்களை ஊக்குவிக்கும் படமாகும்.  

    இவ்வாறு அவர் கூறினார். #VivekOberoi #NarendraModiMovie 
    ‘வாண்டட்’ படத்தை தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் உருவாகும் தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை பிரபு தேவா இயக்கவிருக்கிறார். #Dabangg3 #SalmaanKhan #Prabhudeva
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபுதேவா இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ளார். தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்களை இயக்கி உள்ளார். போக்கிரி படத்தை இந்தியில் சல்மான் கான் நடிக்க ‘வாண்டட்’ என்ற பெயரில் இயக்கியிருந்தார். இந்த படம் வசூல் குவித்தது.

    தொடர்ந்து அக்‌ஷய்குமார் நடித்த ரவுடி ரத்தோர், அஜய்தேவ்கன் நடித்த ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ மற்றும் ராமையா வாஸ்தாவையா, ஆர்.ராஜ்குமார், சிங் இஸ் பிளிங் ஆகிய படங்களை இயக்கி இந்தி பட உலகிலும் முன்னணி இயக்குனராக இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.



    இந்தியில் வெளியாகி பரபரப்பாக ஓடிய தபாங் படத்தின் மூன்றாம் பாகமாக இது தயாராகிறது. இதன் முதல் பாகம் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாம் பாகத்தை அர்பாஸ்கான் இயக்கினார். தபாங் 3-ஆம் பாகத்தை பிரபுதேவா இயக்குகிறார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கி உள்ளது. இதனை சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். சல்மான் கான் ஜோடியாக சோனாக்சி சின்ஹா நடிக்கிறார். 

    பிரபுதேவா நடிப்பில் தேவி-2 படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதுதவிர யங் மங் சங், பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். #Dabangg3 #SalmaanKhan #Prabhudeva

    தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை ரெஜினா, தெலுங்கு நடிகரை காதலிப்பதாக வரும் கிசுகிசு பற்றி செய்திகள் வெளியாகியுள்ளது. #Regina
    கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயம் ஏன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு பில்லா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் சாய் தரம் தேஜுடன் இணைந்து நடித்தார் ரெஜினா.

    திரையில் இருவருக்கும் காதல் காட்சிகள் இயல்பாக வந்ததால் இருவரும் நிஜமாகவே காதலிப்பதால் தான் அப்படி நடிக்க முடிந்தது என்று பேச்சு எழுந்தது. திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். அவர்களின் நடிப்பு தற்போது காதலாக மலர்ந்திருப்பதாக திரையுலகினர் மத்தியில் கிசுகிசு நிலவுகிறது.



    இதுகுறித்து சாய் தரம் தேஜிடம் கேட்டபோது ஒரே வரியில் பதில் அளித்தார். அவர் கூறும்போது, ’நானும் ரெஜினாவும் உண்மையான நண்பர்களாக இருக்கிறோம்’ என்றார். ரெஜினாவும் இந்த கிசுகிசுவை மறுத்து இருக்கிறார்.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் படக்குழுவினர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். #Thalapathy63 #ThalapathyVijay
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வந்தது. அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவது இல்லை. அந்த பாணியில் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று முதலில் கூறினார்கள்.

    ஆனால் சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் மட்டும்தான் இங்கு உள்ள தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என விஜய் கேட்டுக் கொண்டதால், இங்கேயே படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. காசிமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்பு நடந்த போது, விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் பெருமளவு கூடிவிட்டார்கள். இதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ச்சியாக ரசிகர்கள் தொந்தரவு இருந்து வருவதால், தினமும் திட்டமிட்ட காட்சிகளை அதற்கான கால அளவுக்குள் படமாக்க முடியவில்லை. இதனால், ‘தளபதி 63’ படக்குழு இனிமேல் அரங்குகளுக்குள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிவு எடுத்துள்ளது. தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் விஜய் விரைவில் சென்னை திரும்பவுள்ளார்.



    அதனைத் தொடர்ந்து ‘தளபதி 63’ படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இது முழுமையாக அரங்குகளில் மட்டுமே நடைபெற உள்ளது. இதற்காக பின்னி மில்ஸ், ஈவிபி மற்றும் ஆதித்யராம் ஸ்டூடியோஸ் ஆகியவற்றில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
    ’துருவங்கள் பதினாறு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேன், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். #KarthikNaren #Kannadi
    ‘துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அந்த படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

    அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் 'நராகசூரன்' என்ற படத்தை இயக்கினார். இப்படம் சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் கார்த்திக் நரேன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.



    சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் 'கண்ணாடி' என்கிற படத்தில் கார்த்திக் நரேன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் ராஜூ இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    இப்படம் தமிழில் கண்ணாடி என்ற பெயரிலும், தெலுங்கில் 'நின்னு வீடனி நீடனு நேனே' என்ற பெயரிலும் உருவாகியுள்ளது. 
    போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. #NerkondaPaarvai #AjithKumar
    விஸ்வாசம் படத்தை அடுத்து, அஜித் தற்போது போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது. இதில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.



    இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் பின்னணி வேலைகளை படக்குழுவினர் தொடங்க இருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் 2வது லுக் போஸ்டரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

    இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. #NerkondaPaarvai #AjithKumar 
    நடிகர் விஜய் சேதுபதியை கண்டித்தும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் திருநங்கைகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். #VijaySethupathi
    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும் விஜய் சேதுபதியின் திருநங்கை நடிப்பை பலரும் பாராட்டினர். 

    ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், விஜய் சேதுபதி பேசும் வசனம் உள்ளது. இதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

    விஜய் சேதுபதியை கண்டித்தும் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். 



    திருநங்கைகள் ரேவதி, பிரேமா, கல்கி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் இதுகுறித்து கூறியதாவது:-

    ‘‘விஜய் சேதுபதி மீது மரியாதை வைத்து இருந்தோம். சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் அதை கெடுத்துக்கொண்டார். திருநங்கைகள் குழந்தைகளை கடத்துவதுபோல் வசனம் பேசி உள்ளார். திருநங்கைகள் எப்போது குழந்தைகளை கடத்தினார்கள் என்று சொல்ல முடியுமா? கதையை கேட்டதும் விஜய் சேதுபதி அதில் நடிக்காமல் புறக்கணித்து இருக்க வேண்டும். 

    திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் காட்சியில் நடித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. குழந்தை பெற்றபின் அவர் திருநங்கையாக மாறுவதுபோன்றும், மனைவியிடம் புடவை வாங்கி உடுத்தும் காட்சிகளும் எந்த அடிப்படையில் என்று புரியவில்லை. திருநங்கை சமூகத்துக்கு இந்த படம் அநீதி இழைத்துள்ளது’’

    இவ்வாறு கூறியுள்ளனர்.
    ×