என் மலர்
சினிமா செய்திகள்
கணவர் நாகசைதன்யாவுடன் ஜோடியாக நடித்துள்ள மஜிலி திரைப்படம் வெளிவருவதையொட்டி திருப்பதி கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்துள்ளார். #Samantha #NagaChaitanya
நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் அவரது நடிப்பில் யு டர்ன், நடிகையர் திலகம், இரும்புத்திரை, சீமராஜா படங்கள் வெளிவந்தன. விஜய் சேதுபதியுடன் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
கணவர் நாகசைதன்யா ஜோடியாக நடித்துள்ள மஜிலி தெலுங்கு படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது. திருமணத்துக்கு பிறகு முதல் முறையாக இருவரும் ஜோடி சேர்ந்துள்ளதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் சமந்தா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

கணவர் குடும்பத்தினர் வெங்கடாஜலபதியின் தீவிர பக்தர்கள். மாமனார் நாகார்ஜுனா நமோ வெங்கடேசாயா என்ற பக்தி படத்தில் நடித்துள்ளார். திருமணம் முடிவானதும் சமந்தா திருப்பதிக்கு சென்று சாமி கும்பிட்டார். தற்போது கணவருடன் சேர்ந்து நடித்துள்ள மஜிலி தெலுங்கு படம் திரைக்கு வரும் நிலையில் மீண்டும் திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார்.
திருப்பதியில் சமந்தாவை பார்த்ததும் ஆட்டோகிராப் வாங்க ரசிகர்கள் கூடினார்கள். பாதுகாவலர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தினார்கள்.
1964ம் ஆண்டு வெளியான ஜேம்ஸ்பாண்ட் கோல்ட் பிங்கர் படத்தின் நாயகி டனியா மல்லெட் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். #TaniaMallet
ஜேம்ஸ் பாண்ட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் - நடிகைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் மூன்றாவதாக வந்த படம் கோல்ட் பிங்கர். 1964ம் ஆண்டு இந்த படம் வெளியானது. கய்ஹமில்டன் இயக்கினார். இதில் சீன் கானரி ஜேம்ஸ் பாண்டாக நடித்து இருந்தார்.
ஜேம்ஸ் பாண்ட் காதலியாக நடித்தவர் டனியா மல்லெட். இந்த படத்துக்கு பிறகு பெரிய படங்களில் அவர் நடிக்கவில்லை. தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது பிடிக்காமல் சினிமாவை விட்டு விலகி விட்டதாக கூறப்பட்டது.

அதன்பிறகு டி.வி. தொடர்களில் டனியா மல்லெட் நடித்து வந்தார். மாடலிங்கிலும் ஈடுபட்டார். வயது முதிர்வு காரணமாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த டனியா மல்லெட் மரணம் அடைந்ததாக ஜேம்ஸ் பாண்ட் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. அவருக்கு வயது 77.
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு செக் மோசடி வழக்கில் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #MohanBabu
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, இவர் தனது மகன் விஷ்ணு மஞ்சுவை வைத்து 'சலீம்' என்கிற படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் ஒய்விஎஸ் சௌத்ரி இயக்கியிருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஒய்விஎஸ் சௌத்ரி அந்த படத்துக்காக தனக்கு அளிக்கப்பட்ட செக் செல்லுபடி ஆகவில்லை என்றும் மீண்டும் இதுகுறித்து மோகன் பாபுவிடம் கேட்டதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதில், நடிகர் மோகன் பாபுவிற்கு 1 வருட சிறை தண்டனையும், 41 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
Just heard about the false news propaganda by a few TV networks. Much to their disappointment, I am at my home in Hyderabad.
— Mohan Babu M (@themohanbabu) April 2, 2019
இந்நிலையில் இதுகுறித்து மோகன் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், சில தொலைக்காட்சிகள் பொய்யான செய்திகள் பரப்புவதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நான் ஐதராபாத்தில் உள்ள என் வீட்டில் இருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
டம்போ என்னும் கற்பனையான யானைக்குட்டியை வைத்து குழந்தைகளை கவரும் வகையில் வெளியாகி இருக்கும் டம்போ படத்தின் விமர்சனம். #Dumbo #DumboReview
டேனி டிவிட்டோ நடத்தி வரும் சர்க்கஸில் கொலின் பரல் பணிபுரிந்து வருகிறார். அந்த சர்க்கஸில் உள்ள பெரிய யானைக்கு புதிதாக ஒரு குட்டி யானை பிறக்கிறது. அதை அனைவரும் ஆர்வத்துடன் பார்க்க வருகிறார்கள், அந்தக் குட்டியின் காதுகள் வித்தியாசமாக தரையைத் தொடும் அளவுக்கு நீண்டுள்ளது. யாருக்குமே அதைப் பிடிக்கவில்லை. எல்லோரும் அதனிடமிருந்து ஒதுங்கிச் செல்கிறார்கள்.
இந்நிலையில், பெரிய யானையை ஏமாற்றி விற்றதாக கூறி அதை விற்று விடுகிறார்கள். தனிமையில் இருக்கும் குட்டியானைக்கு டம்போ என்று பெயர் வைக்கிறார்கள். இதனுடன் கொலின் பரலின் குழந்தைகள் விளையாடி வருகிறார்கள். அப்போது இறகை வைத்து விளையாடும் போது டம்போ காதை சிறகுகளாகப் பயன்படுத்தி பறக்கிறது. இதை மற்றவர்களிடம் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள்.
ஒருநாள் சர்க்கஸின் போது, டம்போவால் பறக்க முடியும் என்ற வியப்பான விஷயம் அனைவருக்கும் தெரியவருகிறது. அதன்பின் டம்போவுக்குப் பயிற்சி தருகிறார்கள். சர்க்கஸும் செழிப்பாகிறது.

பெரிய சர்க்கஸ் கம்பெனி நடத்தி வரும் மைக்கேல் கீட்டன் இதையறிந்து டம்போவை வாங்க முயல்கிறார். இதை தர மறுக்கும் சர்க்கஸ் குழுவினரை பார்ட்னராக மாற்றி டம்போவை வாங்கி அவர் இடத்திற்கு கொண்டு சென்று விடுகிறார்.
அங்கு ஒரு நாள் சர்க்கஸின் போது ஒரு விபத்து ஏற்படுகிறது. இதில் தன்னுடைய தாய் யானை இருப்பதை டம்போ அறிந்து அங்கு சென்று விடுகிறது. இதை பிரிக்க நினைக்கிறார் மைக்கேல் கீட்டன். இறுதியில் இவரது திட்டம் நிறைவேறியதா? தாய் யானையுடன் டம்போ சேர்ந்ததா? என்பதே படத்தின் கதை.
குழந்தைகளுக்கான பேன்டஸி படங்கள் வரிசையில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் டிம் பர்டன். முதல் பாதி ஜாலியாகவும் இரண்டாம் பாதி சென்டிமென்ட்டாகவும் திரைக்கதை நகர்கிறது. டம்போவைப் பார்த்துக்கொள்ளும் நபராக, கொலின் பரல். அவரது குழந்தைகள்தான் படத்தின் நிஜ ஹீரோக்களாக வருகிறார்கள். வில்லனாக மைக்கேல் கீட்டன் சிறப்பாக நடித்திருக்கிறார். சர்க்கஸில் வேலை பார்க்கும் பெண்ணாக ஈவா க்ரீன் என கலர்புல் பட்டாளமாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘டம்போ’ குழந்தைகளின் செல்ல பிள்ளை.
‘சண்டிமுனி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் மனிஷா யாதவ், முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடி இருக்கிறார். #ManishaYadav #SandiMuni
சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் டி.சிவராம் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘சண்டிமுனி’. நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கும், இதில் நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், வாசுவிக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, காதல் சுகுமார், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கதை திரைக்கதை வசனம் எழுதி மில்கா செல்வகுமார் இயக்குகிறார். இந்த படத்திற்காக சென்னை வளசரவாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அரங்கமும் சிலையும் அமைக்கப்பட்டது. முப்பது அடி உயர சிலை அமைக்கப்பட்டு அதன் முன் மனிஷா யாதவ் பக்தி ரசம் சொட்ட ‘பெரும் கோபக்காரா எங்க சண்டி வீரா’ என்று பாட்டு பாடி ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் தீ மிதி காட்சிகளும் ஆணி செருப்பில் நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.

இப்படம் குறித்து இயக்குனர் மில்கா செல்வகுமார் கூறும்போது, ‘இது ஒரு ஹாரர் படம். நட்ராஜ் - மனிஷா யாதவ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் நட்ராஜுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையில் இருந்து அவர் விடுபடவும் இருவருக்கும் திருமணம் நடக்கவும் குலதெய்வ வழிபாட்டு காட்சி தான் இது என்றார் இயக்குனர்.
பழனி, கொடைக்கானல், பொள்ளாச்சி, வால்பாறை போன்ற இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்தது. விரைவில் இதன் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த இயக்குனர் மகேந்திரனின் உடல் மந்தைவெளி சென்ட் மேரீஸ் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. #Mahendran #RIPMahendran
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரன் (79) சிறுநீரக கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
மகேந்திரனின் உடல் பள்ளிக்கரனை அருகே உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி, இசையமைப்பாளர் இசையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் மோகன், சசிகுமார், உதயநிதி, தலைவாசல் விஜய், கருணாகரன், நடிகைகள் ரேவதி, அர்ச்சனா, வரலட்சுமி, இயக்குநர்கள் பாக்யராஜ், அகத்தியன், ஷங்கர், திரு, சிம்புதேவன், சந்தானபாரதி, சஞ்சய் பாரதி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

பின்னர் 4.30 மணியளவில் இயக்குனர் மகேந்திரனின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள் மற்றும் திரைத்துறையினர் ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதியாக மந்தைவெளி சென்ட் மேரீஸ் கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. #Mahendran #RIPMahendran
தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பிரபலமான நடிகை பாவனா, தற்போது புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். #Bhavana
கதாநாயகிகள் பெரும்பாலும் தங்கள் உடல்தோற்றம் குண்டானால் அந்த படத்தை வெளியிட மாட்டார்கள். அவர்களிடம் இருந்து பாவனா மாறுபட்டு இருக்கிறார். சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்த பாவனா கடந்த 2010ம் ஆண்டு அஜித்துடன் அசல் படத்தில் கடைசியாக தமிழில் நடித்தார்.
அதன்பிறகு மலையாளம், கன்னட படங்களில் கவனம் செலுத்தினார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாவனா கடந்த ஆண்டு தனது நண்பரும், கன்னட பட தயாரிப்பாளருமான நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து மலையாள படங்களில் நடிப்பதையும் கைவிட்டு கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டில் 2 கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ஹிட்டான 96 படத்தின் கன்னட ரீமேக்காக உருவாகும் 99 படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
திருமண ஆன சந்தோஷத்தில் பாவனா தனது ஒல்லியான தோற்றத்திலிருந்து மாறி இருக்கிறார். சில மாதங்களாகவே அவர் இணைய தளத்தில் அமைதி காத்து வந்தார். இந்நிலையில் தனது புதிய படங்களை வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற லெஹங்கா டிரஸ் மற்றும் சிவப்பு நிற சேலை, அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்து குண்டான தோற்றத்தில் இருக்கிறார். பாவனாவின் இந்த தோற்றமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவது குறித்து நடிகை ராஷி கன்னா கருத்து தெரிவித்துள்ளார். #RaashiKhanna
தெலுங்கில் வலம் வந்த ராசி கன்னா தமிழில் இமைக்கா நொடிகள் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு படத்தில் நடித்தார். அவர் நடிப்பில் வெளியாகியுள்ள இரு படங்களுமே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகளை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தில் தற்போது அதிக அளவில் நிகழ்ந்துவரும் நிலையில் இது குறித்து ராசி கன்னா கருத்து தெரிவித்துள்ளார்.
“ஒரு நடிகையாக இது போன்ற படங்களில் நடிக்க முடியும். சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடமுடியும். ஆனால் இத்தகைய குற்றங்களை நிறுத்துவதற்கோ அல்லது குறைப்பதற்கோ இது போதுமானதாக இருக்காது. நீதித்துறையில் மாற்றங்கள் நிகழவேண்டும். சட்டங்கள் மூலம் கடுமையாகவும் உடனடியாகவும் தண்டிக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நடிகர், நடிகைகள் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவர்கள். எனவே திரையில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் அது எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

தெலுங்கு திரையுலகில் நான்கு ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். தற்போது தெலுங்கு சரளமாக பேசுகிறேன். படப்பிடிப்பு தளத்தில் நான் தமிழில் பேச முயற்சித்து வருகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். மொழி தெரிந்தால் மட்டுமே என் வசனங்களை நான் முழுமையாக புரிந்து பேசமுடியும். இதில் நான் மிகுந்த தீவிரம் காட்டிவருகிறேன். ஏனென்றால் என் பணியை நான் மிகவும் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத் தமிழன், விஷால் நடிக்கும் அயோக்யா ஆகிய படங்கள் உள்ளன. அயோக்யா படம் இந்த மாதம் 19-ம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.
பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா நடிப்பில் உருவாகி இருக்கும் `குப்பத்து ராஜா' படத்தின் முன்னோட்டம். #KuppathuRaja #GVPrakashKumar
எஸ் ஃபோகஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன்.டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `குப்பத்து ராஜா'.
ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா, நாயகிகளாக நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு - மகேஷ் முத்துஸ்வாமி, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., கலை - கிரண், சண்டைப்பயிற்சி - அன்பறிவ் & திலீப் சுப்பராயன், பாடல்கள் - லோகன், தயாரிப்பு மேற்பார்வை - எம்.அம்பிகாபதி, நிர்வாக தயாரிப்பு - கர்ணராஜா, இணை தயாரிப்பு - படூர் ரமேஷ், தயாரிப்பு - சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன்.டி, கதை, வசனம், இயக்கம், நடனம் - பாபா பாஸ்கர்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பேசும்போது,
நடன இயக்குனராக என் பயணத்தை துவக்கி வைத்தவர் தனுஷ், என் இயக்குனர் கனவை நனவாக்கியவர் ஜிவி பிரகாஷ். அவர் கதை மீது வைத்த நம்பிக்கை தான் காரணம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும், அப்படி எனக்கு கிடைத்த தயாரிப்பாளர்கள் எனக்கு வரம். கலை இயக்குனர் கிரண் ராயபுரத்தை சேர்ந்தவர் என்பதால் மிகவும் உதவிகரமாக இருந்தார். இந்த குழுவில் எங்களை மிகச்சிறப்பாக வழிநடத்தி சென்றவர் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சார்.
பலமான பல கலைஞர்கள் சேர்ந்தது தான் இந்த குப்பத்து ராஜா. யோகிபாபு காமெடியனாக இல்லாமல் மிக முக்கிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை வேறு பரிமாணத்தில் பார்ப்பீர்கள் என்றார்.
படம் வருகிற ஏப்ரல் 5-ந் தேதி திரைக்கு வருகிறது. #KuppathuRaja #GVPrakashKumar #Parthiban #PoonamBajwa #PalakLalwani
விவேக் இளங்கோவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெள்ளை பூக்கள் படத்தில் நடிகர் விவேக் வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். #VellaiPookkal #Vivekh
விவேக் வெள்ளை பூக்கள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக அவர் அளித்துள்ள பேட்டி:
டிரைலர் பார்க்கும்போது சீரியசான போலீஸ் வேடம் போல தெரிகிறதே?
அமெரிக்காவை சேர்ந்த பொறியாளரான விவேக் இளங்கோவன் இந்த படத்துக்காக என்னை அணுகினார். முழு கதையையும் படித்து பார்த்த நான் இந்த கதைக்கு சத்யராஜ் போன்ற ஒருவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கூறிவிட்டேன். ஆனால் அவரோ இந்த வேடத்தில் இதுவரை பார்த்திராத ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். ஓய்வுபெற்ற டிஐஜி வேடம். முதன்முதலாக இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறேன்.

உங்கள் திரையுலக நண்பர்கள் என்ன சொன்னார்கள்?
ஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்த டீசரை காண்பித்ததும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவரை இசையமைக்க வைக்கலாம் என்று திட்டமிட்டு காத்திருந்தோம். ஆனால் அவர் பல பணிகளில் பிசியாக இருப்பதால் அது நடக்காமல் போய்விட்டது.
மீடூ இயக்கம் பற்றி?
பெண்களிடம் நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. நமது கலாசாரத்தின்படி எல்லா பெண்களையுமே தாயாக பார்க்கும்படி தான் வளர்ந்தோம். ஆனால் சமீபகாலத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியிலான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. காரணம் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் ஆபாச படங்கள் தான். 25 சதவீதம் சினிமாவுக்கும் இதில் பங்கு உண்டு. என்றாலும் 75 சதவீதம் இணையத்தில் கிடைக்கும் ஆபாச படங்கள் தான் காரணம் என்றார். #VellaiPookkal #Vivekh
மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு இளையராஜா, மணிரத்னம், சுஹாசினி, ரேவதி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #Mahendran #RIPMahendran
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரன் (79) சிறுநீரக கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மகேந்திரனின் உடல் பள்ளிக்கரனை அருகே உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை முதலே சினிமா பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து மகேந்திரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி, இசையமைப்பாளர் இசையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் மோகன், சசிகுமார், உதயநிதி, தலைவாசல் விஜய், கருணாகரன், நடிகைகள் ரேவதி, அர்ச்சனா, வரலட்சுமி, இயக்குநர்கள் பாக்யராஜ், அகத்தியன், ஷங்கர், திரு, சிம்புதேவன், சந்தானபாரதி, சஞ்சய் பாரதி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். #Mahendran #RIPMahendran
மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Mahendran #RIPMahendran
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரன் (79) சிறுநீரக கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மகேந்திரனின் உடல் பள்ளிக்கரனை அருகே உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை முதலே சினிமா பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து மகேந்திரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நடிகரும், மகேந்திரனின் நண்பருமான நடிகர் ரஜினிகாந்த் மகேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மகேந்திரனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,
இயக்குநர் மகேந்திரனுடன் எனக்கு சினிமாவை தாண்டிய நட்பு உள்ளது. எனக்குள் இன்னொரு ரஜினி இருப்பதை காட்டியவர் மகேந்திரன் தான். எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர், தமிழ் சினிமா உள்ளவரை இயக்குநர் மகேந்திரனுக்கென்று தனி இடம் இருக்கும் என்றார். #Mahendran #RIPMahendran #Rajinikanth






