என் மலர்
சினிமா செய்திகள்
சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் முன்னோட்டம்.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’.
நாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - யுவா, இசை - தரண், எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - எம்.எஸ்.பி. மாதவன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன், தயாரிப்பு - ரவீந்தர் சந்திரசேகரன், இயக்கம் - சிவா அரவிந்த். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.

படம் பற்றி இயக்குனரிடம் பேசியதாவது,
“இது நண்பர்களின் உண்மை கதை. உண்மையான நட்பு பற்றி சொல்லும் ஜாலியான படமாக உருவாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். ஆனால், இதில் ஒரு இளைஞன் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவி செய்யாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.
பின்னர் அந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை, கொஞ்சம் சினிமா கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் நாயகன் கவின் சினிமாவுக்கு புதியவர். என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா நம்பீசன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஒத்துழைத்தார். இதில் ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.
நட்புனா என்னானு தெரியுமா டிரைலர்:
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூர்யா - சிவா கூட்டணி முதல்முறையாக இணைகிறது.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தை போலவே இந்த படமும் சென்டிமெண்ட் கலந்த குடும்ப படமாக உருவாக இருப்பதால் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவா படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவும் தற்போது விஜய்யின் தளபதி 63, ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் டி.இமான் இந்த படத்திற்கு இசையைமக்க இருப்பதாகவும், விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அதே குழுவினரை சூர்யா 39 படத்திலும் ஒப்பந்தம் செய்ய சிவா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிரிசய்யா இயக்கத்தில் துருவ் விக்ரம் - பனிதா சந்து நடிப்பில் உருவாகி வரும் `ஆதித்யா வர்மா' படத்தின் படப்பிபடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.
வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து ‘வர்மா’ படத்தின் புதிய பதிப்பை அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார். ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தில் துருவ் ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை பனிதா சந்து தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரியா ஆனந்த் மற்றும் புதுமுகங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
@E4Emovies@dop007@sooriaruna@DhruvVikramOffl@BanitaSandhu@Viveka_Lyrics@sureshsrajan Adithya Varma shoot completed See Dhruv rejoice pic.twitter.com/i1CDTmexZZ
— MUKESH RATILAL MEHTA (@e4echennai) May 14, 2019
படத்தின் பின்னணி வேலைகள் விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படம் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இந்தி பதிப்பான கபீர் சிங் வருகிற ஜூன் 21-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைக்கிறார்.
நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக நேற்று செயற்குழு கூட்டம் நடந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் சங்க செயற்குழுவில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், தேர்தலில் மீண்டும் எங்கள் அணி போட்டியிடும் என்றும் நாசர் அறிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2015-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணியின் பதவி காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளி வைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் நடிகர் சங்க தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

கோப்புப்படம்
இதுகுறித்து ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், அஜய்ரத்னம், சரவணன், மோகன், உதயா, ஜூனியர் பாலையா, டி.பி.கஜேந்திரன், ஸ்ரீமன், குட்டி பத்மினி, சங்கீதா, லலிதகுமாரி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முறைப்படி அலுவலகத்தை இன்று (புதன்கிழமை) அவரிடம் ஒப்படைப்போம். தேர்தல் நடத்துவதற்கான 3 இடங்களை நாங்கள் பரிந்துரை செய்வோம். அதில் ஒரு இடத்தை நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்து தேர்தலை நடத்துவார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியல் மாவட்ட பதிவாளரிடம் வழங்கப்படும். நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி மீண்டும் போட்டியிடும் என்றார்.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் பணிகள் முழுவீச்சில் நடப்பதாக மோகன் ராஜா கூறியிருக்கிறார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகிய தனி ஒருவன் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு தனி ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் அறிவித்தனர்.
இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார்.
தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மோகன் ராஜா உள்ளார்.

தனி ஒருவன் 2 படத்திற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்த்த இயக்குநர் ராம், ராஜா மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்தேன், மிகப் பெரிய உழைப்பு, அடுத்த பாகத்தை ரொம்ப கவனத்துடன் எடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு மோகன் ராஜா அளித்த பதிலில், தனி ஒருவன் 2 படத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தனது உதவி இயக்குநர்களிடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடலாமல்லவா? என்று கேட்டேன், 200% கண்டிப்பாக என்று கூறினார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
In A moment of high in Script work of TO nxt part,
— Mohan Raja (@jayam_mohanraja) May 13, 2019
Me to my ADs : ‘expectations reach pannidalamla’
Ads : ‘200% sir’
phone rings @Director_Ram : ‘Raja Marubadi TO pathutuirukken, Miga periya uzhaippu, epdi ipdi, nxt part carefula pannunga‘$&@! :)))
“Passion will win” :))👍👍
ஜெயம் ரவி தற்போது கல்யாண் இயக்கத்தில் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் ஸ்ரீதேவி நடித்த படத்திற்கு அமோக வரவேற்பு பெற்று ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்திய படங்களுக்கு சமீபகாலமாக உலக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹாலிவுட் படங்களைபோல் அனைத்து நாடுகளிலும் வசூல் குவிக்கின்றன. இந்திய படங்கள் மீது உலக நாடுகளின் கவனம் திரும்ப காரணமாக அமைந்த முதல் படம் பாகுபலி-2. இந்த படத்தின் வசூல் சர்வதேச அளவில் ரூ.1,000 கோடியை தாண்டியது.
தற்போது சீனர்களும் இந்தி படங்களை விரும்பி பார்க்கிறார்கள். அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய இரண்டாவது திரைப்பட சந்தையாக சீனா விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமீர்கானின் தங்கல் இந்தி படத்தை மொழி மாற்றம் செய்து சீனாவில் வெளியிட்டனர். இந்த படம் கார்டியன் ஆப் தி கேலக்சி என்ற ஹாலிவுட் படத்தை மிஞ்சி ரூ.800 கோடி வசூலித்ததது.

விஜய்யின் மெர்சல் படமும் சீனாவில் திரையிடப்பட்டு வசூல் குவித்தது. இந்த படங்களின் வரிசையில் மறைந்த ஸ்ரீதேவி கடைசியாக நடித்த ‘மாம்’ படத்தையும் சீனாவில் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் திரையிட்டனர். இந்த படம் முதல் நாளிலேயே ரூ.9.8 கோடி வசூலித்து முதல் நாள் வசூல் படங்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட சமூக சேவகர் கணேசனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்து இருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). சமூக சேவகரான இவர் 108 ஆம்புலன்ஸ் சேவை போல இலவச கார் சேவை செய்து வருகிறார். பிரசவம், அவசர சிகிச்சையோ என்றால் கணேசனுக்கு போன் செய்தால் போதும் உடனே சம்பவ இடத்திற்கு தனது காரில் சென்று விடுவார். எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழகத்தின் எந்த பகுதிக்கும் அழைத்து செல்வார்.
இதன் மூலம் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கும், விபத்தில் சிக்கிய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார். இது மட்டுமின்றி ஆதரவற்று மரணமடைபவர்களின் உடல்களை மீட்டு அவரே அடக்கம் செய்து வருகிறார்.
இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை மீட்டு அடக்கம் செய்துள்ளார். அவரின் சமூக சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கியுள்ளன.

இந்தநிலையில் ஆலங்குடியில் மிகச்சிறிய வீட்டில் வசித்து வந்த கணேசனின் வீடு, கடந்த ஆண்டு தமிழகத்தில் வீசிய கஜா புயலில் பலத்த சேதமடைந்தது. வீட்டை இழந்த அவர் தங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தார். இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆலங்குடிக்கு சென்றிருந்த நடிகர் ராகவா லாரன்ஸ், சமூக சேவகர் கணேசனின் சேவையை அறிந்தும், அவர் வீடின்றி தவிப்பதையும் அறிந்து உடனே அவருக்கு உதவி செய்ய முன்வந்தார்.
அதன்படி ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு ஒன்று கட்டி கொடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கினார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த வீடு கட்டும் பணி முடிவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு வீட்டை திறந்து வைத்து, அதனை கணேசனிடம் ஒப்படைத்தார். தனக்கு வீடு கட்டி கொடுத்து உதவிய ராகவா லாரன்சுக்கு கணேசன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘களவாணி 2’. இப்படத்திற்கான காப்பிரைட் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதற்காக நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாகவும் கூறி சிங்காரவேலன் தரப்பினர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர்.
பின்னர் இயக்குனர் சற்குணம் தரப்பினர் இந்த தடையை உடைத்தனர். இருப்பினும் வழக்கு நிலுவையில் இருந்ததால் படத்தை வெளியிடுவதில் முட்டுக்கட்டை நீடித்தது. இந்நிலையில் இன்று நேரில் சந்தித்து கொண்ட விமல் மற்றும் சிங்காரவேலன் பிரச்சனையை பேசி தீர்த்து கொண்டனர்.

சிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு ஈடாக 2019 ஆம் ஆண்டிற்குள் இரண்டு படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக விமல் உத்தரவாத கடிதம் கொடுத்ததையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்காரவேலன் தெரிவித்துள்ளார். இதனால் களவாணி - 2 படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கியிருக்கிறது.
தெலுங்கு, இந்தி, மலையாளம் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை அமலா, தமிழில் நடிக்காததற்கு காரணம் சொல்லியிருக்கிறார்.
நாகார்ஜூனாவை திருமணம் செய்துகொண்ட அமலா அதற்கு பின் தமிழ் சினிமாவில் அதிகம் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். மற்ற மொழிகளில் நடிப்பவர் தமிழில் நடிக்காததற்கான காரணத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
’காரணம் எதுவும் இல்லை. வருடத்துக்கு ஒரு படமாவது தெலுங்கு, இந்தி, மலையாளம்னு நடிச்சுக்கிட்டுதான் இருக்கேன். தமிழ் சினிமா வாய்ப்பு அமையலை, அவ்ளோதான். என் பிரண்ட்ஸ் எல்லோரும் சென்னையில்தான் இருக்காங்க. எங்களுக்குன்னு தனியா ஒரு வாட்ஸப் குரூப் இருக்கு.

தமிழ்நாட்டுல நடக்குற முக்கியமான செய்திகள், தமிழ் சினிமாக்கள் பற்றியெல்லாம் அதுமூலமா தெரிஞ்சுக்குவேன். தவிர, நானும் அடிக்கடி சென்னைக்கு வந்துக்கிட்டு தானே இருக்கேன். வர்றப்போ எல்லாம் தமிழ் படங்களைப் பார்ப்பேன். சமந்தா நடிச்ச ‘சூப்பர் டீலக்ஸ்’ பார்க்கணும்னு நினைச்சேன், இன்னும் பார்க்கல. சீக்கிரமே பார்த்துவிடுவேன்’. இவ்வாறு கூறியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் ஆசிட் வீச்சு சம்பவம் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பெண்கள் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இளம் நடிகைகள் பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்துள்ளனர்.
இந்துஜா, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் அதில் முக்கியமானவர்கள். தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் இந்துஜா தமிழ்நாடு அணிக்காக விளையாடுவது உறுதியாகியுள்ள நிலையில் ஜெர்சி நம்பர் ‘63’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் நடிக்கும் 63ஆவது படத்தை குறிக்கும் வகையில் இந்த எண்ணை தேர்வு செய்திருக்கலாம் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரெபா மோனிகா ஜான் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் அவரது முகத்தின் இடது பக்கம் ஆசிட் வீச்சினால் சிதைந்துள்ளது போல் மேக்கப் போடப்பட்டுள்ளது. இதனால் அணியில் இடம்பெறும் வீராங்கனைகளுக்கு அழுத்தமான முன்கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் பல படங்களில் நடித்த சோனியா அகர்வால், 36 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் என்று வேதனையாக கூறியிருக்கிறார்.
காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். 7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்ளிட்ட படங்களில் நடித்தார். இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றார்.
மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சோனியா அகர்வாலுக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. சமீபத்தில் வெளியான அயோக்யா படத்தில் ஒரு காட்சியில் மட்டும் வந்து சென்றார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
‘தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறேன். சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்று இருந்தேன். அங்கு ரசிகர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் சினிமாத்துறையினர் என்னை ஒரு மும்பை பெண்ணாகவே பார்க்கின்றனர். சிலர் என்னை மும்பைக்கே திருப்பி அனுப்ப முயற்சிக்கின்றனர்.

நான் முதன்மை வேடத்தில் நடித்த ‘தனிமை’ என்ற படம் வெளியானது. படத்தின் தயாரிப்பாளர் அனுபவம் வாய்ந்தவர். இருந்தாலும் அந்த படத்தில் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. தியேட்டர்கள் சரியாக கிடைக்கவில்லை. ஆனால் படத்தின் சிக்கல்களுக்கு நானும் காரணம் என்று கிளப்பிவிட்டார்கள். ‘தனிமை’ நல்ல தரமான கதையம்சம் உள்ள படம்.
இதுபோன்ற கதைகள் எனக்கு அதிகம் வருவதில்லை. எனக்கு இப்போது 36 வயது ஆகிறது. ஒரு பையனுக்கோ சிறுமிக்கோ அம்மாவாக நடிக்க நான் தயார். ஆனால் இயக்குனர்கள் என்னை என் வயதையொத்த ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க கேட்கிறார்கள். இது என்னை எரிச்சலாக்குகிறது.
‘தடம்’ படத்தில் அருண் விஜய்யின் சிறுவயது அம்மாவாக நடித்தேன். அதற்கே முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. கதையை முழுமையாக கேட்டபிறகு என் வேடத்துக்கான முக்கியத்துவம் கருதி ஒப்புக் கொண்டேன். அயோக்யா விஷாலின் படம். என்னுடைய படம் அல்ல. எனவே ஒரு காட்சியில் வந்து சென்றேன்’.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோக்யா திரைப்படத்தின் கதை பற்றி கூறிய பார்த்திபன் கருத்து அப்படத்தின் இயக்குனர் பதில் அளித்துள்ளார்.
விஷால், ராசி கண்ணா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் அயோக்யா. இப்படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்து இருந்தார்.
அயோக்யா படத்தின் கதை தனது உள்ளே வெளியே படத்தின் சாயல் தான் என்று பார்த்திபன் பதிவிட பரபரப்பானது. தனது படத்தை திருடி தெலுங்கில் படமாக்கி அதை தமிழில் எடுக்கும்போது தன்னையே வில்லனாக்கியது அயோக்கியத்தனம் என்று கூறி இருந்தார்.
அடுத்த பதிவுகளில் தான் படத்தின் விளம்பரத்துக்காகவே இப்படி செய்ததாகவும் விஷாலுக்கும் தனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இருந்தாலும் பார்த்திபனின் கருத்து சர்ச்சையானது.

இதுகுறித்து அயோக்யா படத்தின் இயக்குனர் வெங்கட் மோகனிடம் கேட்டோம். ‘அவரது பதிவை நானும் பார்த்தேன். அது அவரது கருத்து. உள்ளே வெளியேயின் கதை சாயல் இதில் இருந்து இருக்கலாம். நான் கதை எழுதவில்லை. தெலுங்கில் கதையை எழுதிய வக்கந்தம் வம்சியிடம் தான் கேட்கவேண்டும். நான் அந்த கதையில் கிளைமாக்சை மாற்றி இருக்கிறேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
முன்னணி கதாநாயகன் ஒருவர் இப்படி ஒரு நெகட்டிவ் கிளைமாக்சில் நடித்ததற்காக விஷாலுக்கு தான் எல்லா பாராட்டுகளும் சேரும்’.
இவ்வாறு அவர் கூறினார்.






