என் மலர்
சினிமா செய்திகள்
அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றிருக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச திபுரான் மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவினையும் தொடர்ந்து அட்லாண்டா மாகாணத்தின் திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குனர் வஸந்தின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரையிடப்பட்டு சிறந்த திரைப்படமாக தேர்வு செய்து விருது பெற்றுள்ளது. தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடபட்டு கொண்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு திரைப்பட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது.
இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி பிரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார். சமூக சேவகராக இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே 29ம் தேதி தொடங்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
#Darbar 1st schedule successfully completed 🎥 🔥🔥 2nd schedule from May 29th 🌟 #ThalaivarinDarbar@rajinikanth@ARMurugadoss#Nayanthara@santoshsivan@anirudhofficial
— Lyca Productions (@LycaProductions) May 15, 2019
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் வென்ற இலக்கியாவிற்கு விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் சார்பில் தங்கம் வழங்கப்பட்டது.
சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி தொழிலாளியின் மகள் இலக்கியா, மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த தங்கமங்கையை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக அகில இந்திய விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு நேரில் சென்று தங்கத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
மான்ஸ்டர் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, பார்ட் 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார். #SJSuryah
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. இதில் இவருக்கு பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியில், ‘மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்கள் வந்தால் மட்டும்தான் வில்லனாக நடிப்பேன். எல்லா படங்களிலும் ஒரே மாதிரி நடிக்க விரும்பவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட வில்லன் வேடங்களை தவிர்த்து இருக்கிறேன். பணத்துக்காக நடிக்கவில்லை. மன திருப்திக்காக நடிக்கிறேன்.

குஷி 2, வாலி 2 படங்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, பார்ட் 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்று கூறியிருக்கிறார்.
ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படக்குழுவினரின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் இசையை மே 17ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், ரசிகருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மாளவிகா மோகனன் அறிமுகமானார். இந்நிலையில் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.
இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதற்கு ரசிகர்கள் சிலர் இந்த டிரஸ் போடுவதற்கு போடாமலேயே இருக்கலாம் என்று கமெண்ட் வெளியிட்டனர்.

இதற்கு கடுப்பான மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருக்கும் பிரணவி, பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவர் பிரணவி. இவர் ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட படங்களில் பாடி புகழ் பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனர் ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதித்தால் மட்டுமே பாட வாய்ப்பு அளிக்கப்படும் என சில பிரபலங்கள் தன்னை வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். அப்படி நடந்த சம்பவம் ஒன்று பற்றியும் அவர் கூறியுள்ளார்.

‘நான் சினிமாவில் பாட பலரிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது பிரபல இயக்குனர் ஒருவர் தனக்கு பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்தார். ஸ்டூடியோவுக்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றதும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் சின்ன பொண்ணு இப்போதுதான் பள்ளி படிப்பை முடித்து இருக்கிறேன் என்று கூறினேன்.
ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆபாசமாகவும் பேசினார். எனக்கு கோபம் வந்தது. அவரை பார்த்து செருப்பால் அடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன்’.
இவ்வாறு பிரணவி கூறியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் மான்ஸ்டர் படத்தின் கதையை கேட்டு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சிரித்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் மான்ஸ்டர் படம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி:
எலியுடன் போராட்டம் தான் கதையா?
ஆமாம். ஆனால் இதில் எலி எலியாக தான் இருக்கும். மனிதர்கள் போன்ற குறும்புகளை செய்யாது. எலியை மையப்படுத்திய கதை என்றாலும் கிராபிக்ஸ் எலியை பயன்படுத்தாமல் நிஜ எலியை நடிக்க வைத்தே எடுத்தோம். நெல்சன் கதை சொல்ல தொடங்கும்போதே நீங்களும் எலியும் என்றுதான் தொடங்கினார். என் வேடத்தின் பெயர் அஞ்சனம் அழகிய பிள்ளை என்றார். அது எனக்கு பிடித்து இருந்தது. வள்ளலார் பக்தராக ஈ, எறும்புக்கும் பாவம் நினைக்காத ஒரு பொறியாளர். அவனது காதலுக்கு எலி எப்படி வில்லனாகிறது என்பதே படம்.
உங்களுடன் நடிக்க பயந்ததாக பிரியா பவானி சங்கர் சொன்னாரே?
அது சுவாரசியத்துக்காக சொன்னது. அவர் மாணவியாக இருந்தபோது என் படங்களை பார்த்திருக்கிறார். எனவே அந்த எண்ணத்திலேயே கூட யோசித்து இருக்கலாம். குடும்பத்து குத்துவிளக்காக நடிக்கும் நாம் எஸ்.ஜே.சூர்யா படத்தில் எப்படி நடிப்பது என்று தயங்கி இருக்கலாம். சிம்ரன், நிலாவுக்கு பிறகு எனக்கு பொருத்தமான ஜோடியாக அமைந்துள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு மான்ஸ்டர் கதை தெரியுமா?
தெரியும். பட ரிலீஸ் தேதி உறுதியானதும் கூறினேன். படத்தின் கதையை கேட்டு நன்றாக சிரித்தார்.
உங்கள் படங்கள் ரிலீஸ் சிக்கலில் சிக்குகிறதே?
ஆமாம். மான்ஸ்டர் வந்த பிறகு அவை எல்லாம் பிரச்சினைகள் முடிந்து வெளியில் வந்துவிடும்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து உடல் எடை குறைப்பு பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
விஜய், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா தமிழில் வெளியான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்தார். அதன் பின் ‘பாகுபலி’ படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்காவால் தன்னுடைய பழைய உடல் எடைக்கு திரும்ப முடியவில்லை.
தற்போது பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ள அனுஷ்கா, அதற்காகத்தான் எடுத்த முயற்சிகளை தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம்முடைய உடல் எடை அதிகரிப்பு அதற்கான சிகிச்சை முறை என எல்லாமே வாழ்க்கை முறை மாற்றத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனஅழுத்தம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் உறவு முறை, தூக்கம், உணர்ச்சிகள் தொடர்பான எல்லாவகையான பிரச்சினைகளுக்கும் வேறு எந்தச் சிகிச்சை முறையும் இன்றி வாழ்க்கை முறையை சரியாக அமைத்துக்கொண்டாலே போதுமானது.
நமக்கு இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகளும் இருக்கின்றன. நமக்கான தீர்வை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். அது தொடர்பான தகவல்களை இந்த புத்தகம் உங்களுக்கு வழங்கும்” என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகத்துக்கு ஷில்பா ஷெட்டி முன்னுரை எழுதியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கும் நிலையில், வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் - ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது.
இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால் நிறுத்தப்பட்டதாகவும் மேக்கப் சரியில்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

தேர்தல் முடிந்த பிறகும் படப்பிடிப்பு இன்னமும் துவங்கப்படவில்லை. படத்தை தயாரிக்க ஒப்பந்தமான லைகா புரொடக்ஷன்ஸ் பின்வாங்கியதால், படத்தை வேறு நிறுவனத்தை வைத்து தயாரிக்க பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ரிலையன்ஸ நிறுவனம் அல்லது சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க வாயப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது பற்றி சில தகவல்கள் வைரலாகி வருகிறது.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. பொதுவாக விஜய், அஜித் ஆகிய இரு நடிகர்களுமே ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே அவர்களின் அடுத்த படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாக தொடங்கும்.

இருவருமே அதிக அளவில் இளம் இயக்குனர்களுக்கும் புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்கள். ஆனால் சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் இவர்களை அணுக முடியாத சூழல் இருந்தது. விஜய் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்களுக்கு சில இளம் இயக்குனர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அவரிடமும் கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜிடமும் விஜய் கதை கேட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த வரிசையில் இமைக்கா நொடிகள் அஜய் ஞானமுத்துவும் இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அஜய் ஞானமுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்காக தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் ரஜினி என்கவுண்டர் போலீசாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். மும்பையில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பி உள்ளார்.
படத்தில் ரஜினி போலீசாக நடிப்பது போஸ்டர் மூலம் வெளியான நிலையில் அவர் என்கவுண்டர் சிறப்பு போலீசாக நடிப்பது தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு நடந்த கல்லூரியிலேயே குற்றவாளிகளை விசாரிக்கும் சிறப்பு அறையை செட் போட்டு படம்பிடித்துள்ளனர்.

ரஜினி குற்றவாளியை விசாரிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளார்கள். படப்பிடிப்பில் ரஜினி மற்ற தொழிலாளர்களுடன் ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். மேலும் ரம்ஜான் விரதம் அனுசரிக்கப்படுவதால் படப்பிடிப்பில் கலந்துகொண்ட இசுலாமிய பணியாளர்களுக்கு சிறப்பு இப்தார் விருந்து அளித்தும் சிறப்பித்து இருக்கிறார்.






