என் மலர்

  சினிமா

  முதல் கட்டத்தை முடித்த தர்பார்
  X

  முதல் கட்டத்தை முடித்த தர்பார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
  பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார். சமூக சேவகராக இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

  இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே 29ம் தேதி தொடங்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.  அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
  Next Story
  ×