என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடித்து வரும் புதிய படத்தின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
    மைனா, கயல், கும்கி ஆகிய படங்களின் இயக்குனரான பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகி வரும் புதிய படத்தில் ராணா டகுபதியின் வயதான தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ராணா டகுபதி, விஷ்ணு விஷால், சோயா ஹுசைன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு தமிழில் ‘காடன்’ என்றும் தெலுங்கில் ‘அரன்யா’ என்றும் இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.



    ராணா மூன்று மொழிகளில் நாயகனாகவும், சோயா ஹுசைன் மூன்று மொழிகளில் நாயகியாகவும், விஷ்ணு விஷால் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
    சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி வந்த வதந்திக்கு கடிதம் எழுதி அதன் மூலம் அவர்களின் வாயை நடிகை சமந்தா அடைத்திருக்கிறார்.
    சமந்தாவுக்கு அவரது பெற்றோருடன் தகராறு என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு உள்ளது. அதற்கெல்லாம் விடைகொடுக்கும் வகையில் தனது தாய் குறித்து சமந்தா ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

    அதில், ‘எனது தாய் செய்யும் பிரார்த்தனையில் எப்போதும் நான் நம்பிக்கை கொண்டிருப்பேன். அவரது பிரார்த்தனை என் வாழ்வில் மேஜிக் செய்திருக்கிறது. சிறுமியாக இருந்த போது எனக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரிடம் நான் கேட்பேன். இப்போதும் அப்படித்தான் கேட்கிறேன். அதற்கு காரணம் எனக்காக அவர் அதை செய்வார் என்பது தெரியும். எனது தாயிடம் உள்ள மிகச் சிறந்த பண்பு என்னவென்றால் தனக்காக ஒருபோதும் அவர் பிரார்த்திப்பதில்லை.



    கடவுளுக்கு அடுத்தபடி அம்மாவைத்தான் சொல்வேன். லவ் யூ அம்மா’ என்று குறிப்பிட்டிருக்கிறார். உருக்கமான இக்கடிதம் மூலம் தாயுடன் தனக்கு மோதல் இருப்பதாக சொல்பவர்களின் வாயை அடைத்திருக்கிறார் சமந்தா.
    விஷால் எல்லோரையும் பயன்படுத்தி கழற்றி விட்டுவிடுவார் என்று கொச்சின் ஷாதி அட் சென்னை 03 படத்தின் விழாவில் ஆர்.கே.சுரேஷ் கூறியிருக்கிறார்.
    மஞ்சித் திவாகர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03 ‘என்ற படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நடிகர் சங்க தேர்தல் குறித்து தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது: -

    நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி நான்காண்டுகள் தான் ஆகிறது. அதனால் பொறுப்புகளுக்கு போட்டியிட இயலாது.

    நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலைத் தவிர்த்து வேறு அனைவருக்கும் என்னுடைய ஆதரவு உண்டு. அதே சமயத்தில் நடிகர் உதயா உள்ளிட்ட பலர் இணைந்து ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அணிக்கு என்னுடைய ஆதரவை தெரிவிப்பேன்.



    விஷால் மீது நான் ஊழல் குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர் அப்படிப்பட்ட ஆளில்லை. அவர் தனக்கு யார் தேவையோ அவர்களை பயன்படுத்திக் கொள்வார். அவர் தேர்தலில் போட்டியிட்ட போது அவருடன் ரித்திஷ் இருந்தார். பிறகு அவரைவிட்டு பிரிந்துவிட்டார்.

    அவருடன் இணைந்திருந்த உதயா தற்போது இல்லை. அவருடைய மேனேஜர் முருகராஜ் விஷாலுடன் இருந்தார். தற்போது அவரும் இல்லை. அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரிய வில்லை.



    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர், தமிழ் நடிகர்கள் சங்கம் என்று விதிப்படி மாற்றி அமைக்க மீண்டும் முயற்சிப்போம். விஷால் நடிக்கட்டும். அவரை நடிக்க அனுமதியுங்கள்.

    ‘பில்லா பாண்டி’ பட வி‌ஷயத்தில் எனக்கும் விஷாலுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இந்நிலையில் ‘பில்லா பாண்டி’ படத்தின் கதை நன்றாக இல்லை. அதனால் ஓடவில்லை என்று அவர் சொன்னது எனக்கு வருத்தமாக இருந்தது. அப்படி சொல்லி இருக்க தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் இளம் நாயகிகள் பலரும் நடித்து வரும் நிலையில், மற்றுமொரு நாயகியாக அம்ருதா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
    விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கால்பந்து போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி வந்த நிலையில், தற்போது பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில், படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் நடித்த அம்ருதா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சர்வதேச அளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளனர்.
    சர்வதேச அளவில் பிரபலமான 72-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த வருடம் உலகம் முழுவதிலும் இருந்து வந்த மொத்தம் 1,845 முழு நீளப் படங்களில் 47 படங்கள் அதிகாரப்பூர்வ போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    இந்த இறுதிப் பட்டியலில் இந்தியப் படமும் எதுவும் இடம்பெறவில்லை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி இசையமைத்து வரும் விர்ச்சுவல் ரியாலிட்டி படமாக உருவாகிக்கொண்டிருக்கும் `லே மஸ்க்‘ ஆங்கிலப் படத்தில் இருந்து `சென்ட் ஆப் தி சாங்’ என்ற பாடலை வெளியிட கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார்.



    அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    `நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் அஜித்தின் 60-வது படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜிப்ரான் முதல்முறையாக அஜித்துடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
    பொங்கல் அன்று வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம் அவரது படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அஜித் நடித்து வந்த `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    `நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான ‘தல 60’ படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார். இது வினோத் அஜித்துக்காக எழுதிய சொந்த கதையாகும். பெரிய பட்ஜெட்டில் ஆக்‌‌ஷன் படமாக இது உருவாகவுள்ளது.



    இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித்தை சந்தித்த ஜிப்ரானிடம் ‘இணைந்து பணியாற்றலாம்’ என்று அஜித் கூறியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார் ஜிப்ரான்.

    தற்போது வெளியான செய்தி அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. ஜிப்ரான் ஏற்கனவே வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் முன்னோட்டம்.
    பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்.எல்.பி. சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் ஆர்.தங்க பிரபாகரன் இணைந்து தயாரித்துள்ள படம் `மான்ஸ்டர்'.

    எஸ்.ஜே.சூர்யா நாயகனாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்துள்ளனர். கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    ஒளிப்பதிவு - கோகுல் பினோய், இசை - ஐஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பு - வி.ஜே.சாபு ஜோசப், கலை இயக்கம் - சிவ சங்கர், இணை எழுத்து - சங்கர் தாஸ், சண்டைப்பயிற்சி - சுதேஷ், நடனம் - சந்தோஷ், பாடல்கள் - யுகபாரதி, கார்த்திக் நேத்தா, சங்கர் தாஸ், தயாரிப்பு மேற்பார்வை - டி.நிர்மல் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம் - டி.பி.சசிகுமார், ஒலி வடிவமைப்பு - சின்க் சினிமாஸ், ஒலிக்கலவை - கண்ணன் கண்பத், ஆடை வடிவமைப்பு - பி.செல்வம், ஒப்பனை - ஏ.ஜி.மொய்தின், எழுத்து, இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது,

    குழந்தைகளுக்கும், செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.

    சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறுவார். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை’ என்றார்.

    `மான்ஸ்டர்' வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    மான்ஸ்டர் டீசர்:

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 படம் பாசமலர் பாணியில் அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகிறதாம்.
    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காரைக்குடி செல்லவிருக்கிறது.

    பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகும் இந்த படத்திற்காக காரைக்குடியில் பிரம்மாண்ட திருவிழா செட் அமைக்கப்படுகிறது. அங்கு முக்கிய காட்சிகளை படமாக்க பாண்டிராஜ் முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேலும், தங்கையாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள். கடைக்குட்டி சிங்கம் படம் அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவான நிலையில், எஸ்.கே.16 பாசமலர் பாணியில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகுவதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் இருக்கும் என்கிறார்கள்.



    பாரதிராஜா சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், வேலராமமூர்த்தி, நாடோடிகள் கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

    உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சன் - எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனத்துக்கும் அமிதாப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல்முறையாக எஸ்.சூர்யாவுடன் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ என்ற நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்கிறார். தமிழ்வாணன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இந்த படத்தில் இருந்து அமிதாப் பச்சன் விலகியதாக சில வதந்திகள் பரவி வந்தது. 

    இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,


    அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் அது சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். மான்ஸ்டர் படத்தின் ரிலீசுக்கு பிறகு நான் மும்பை சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்பேன். நானும், இயக்குநர் தமிழ்வாணனும் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். படப்பிடிப்பின் மூன்றாவது நாளில் அமிதாப் சார் பதிவு செய்த ட்வீட்டில் அவரது அன்பும், எங்களது உழைப்பின் மீது அவர் வைத்திருந்த மரியாதையும் தெரிந்தது. எதிர்மறை விமர்சனங்களை தவிர்க்கவும்.

    தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தை திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

    அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் `கேம் ஓவர்' படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    `மாயா', `இறவாக்காலம்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து `கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நேற்று வெளியான இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

    இந்த படத்தின் இந்தி உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும், `இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவருமான அனுராக் காஷ்யப் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேம் ஓவர் டீசர்:

    விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் `பாக்ஸர்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
    அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான `தடம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், அவர் தற்போது பிரபாசுடன் `சாஹோ', விஜய் ஆண்டனியுடன் `அக்னிச் சிறகுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    மேலும் விவேக் இயக்கத்தில் `பாக்ஸர்' என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் அருண் விஜய், வியட்நாம் சென்று அங்கு பாக்ஸிங்குக்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில், அருண் விஜய் ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரித்திகா ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் லியோன் ஒப்பந்தமான நிலையில், தற்போது டி.இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். 

    மார்குஸ் ஒளிப்பதிவையும், மதன் படத்தொகுப்பையும், சி.எஸ்.பாலச்சந்தர் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

    தமிழில் பூ படம் மூலம் அறிமுகமாகி, சென்னையில் ஒரு நாள், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார்.
    நடிகைகள் ஸ்ரீபிரியா, ரேவதி, கீது மோகன்தாஸ் போன்றவர்கள் இயக்குனர்களாகி உள்ளனர். பூ பார்வதியும் தற்போது டைரக்டராக மாறுகிறார். தான் விரும்பிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதிலும் சில சமரசங்கள் செய்து நடிக்க வேண்டி இருந்ததால் தானே இயக்குனர் ஆவது என்று முடிவு செய்திருக்கிறார்.

    இதுபற்றி பார்வதி கூறும்போது, ‘மிக விரைவில் நான் டைரக்‌‌ஷன் செய்ய இருக்கிறேன். இதற்கான முடிவை ஏற்கனவே எடுத்து முடித்துவிட்டேன். நடிகையாக எனக்கு இது திரையுலகில் மிக முக்கிய படமாக இருக்கும். 



    எனக்கு முக்கிய படம் என்பதைவிட என்னுள் புதைந்திருக்கும் இயற்கையின் வெளிப்பாடாக இருக்கும். நான் படம் இயக்குவது, ஒரு டைரக்டராக என்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நேர்மையாக ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எண்ணமே காரணம்’ என்று கூறியுள்ளார்.
    ×