என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ், ரோபோ சங்கர், யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் சதீஷ், ரோபோ சங்கர் ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். சிவகார்த்திகேயனின் அம்மாவான ராதிகா, டி.வி.சீரியல் நடிகையிடம் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அம்மாவின் ஆசை நிறைவேற்றுவதற்காக டி.வி. நடிகையிடம் பேசி போட்டோ எடுக்க அனுமதி வாங்குகிறார்.

    டி.வி. நடிகையை பார்க்க படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் அங்கு டி.வி. தொடர் தயாரிப்பாளர் நாயகி நயன்தாராவை சந்திக்கிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது. இந்த மோதலில் டி.வி. நடிகைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பின்னர் டி.வி. நடிகைக்காக பேச போய், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கும் நயன்தாராவிற்கும் மோதல் ஏற்படுகிறது.



    அடிக்கடி நடக்கும் மோதலால் சிவகார்த்திகேயனுக்கு நயன்தாரா மீது காதல் ஏற்படுகிறது. மிகவும் செல்வந்தராக இருக்கும் நயன்தாராவிடம் மிடில் கிளாசை சேர்ந்த சிவகார்த்திகேயன், தன்னுடைய காதலை சொன்னாரா? இருவரும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்‌ஷன், நடனம் என அனைத்திலும் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். இவரின் டைமிங் காமெடி பெரிதும் உதவி இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா படம் முழுவதும் அழகு பதுமையாக வருகிறார். சிவகார்த்திகேயன் மீது கோபம் காட்டும் போதும், அன்பு காட்டும் போதும் அழகாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.



    சிவகார்த்திகேயனுடன் வேலை பார்க்கும் சதீஷ், ரோபோ சங்கர், ஆட்டோ ஓட்டுநராக வரும் யோகிபாபு ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். வெகுளியான தாயாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார் ராதிகா. அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் மேனேஜராக வரும் தம்பிராமையா. 

    காமெடி படங்களுக்கு மிகவும் பெயர் பெற்ற இயக்குனர் ராஜேஷ், இந்த படத்தையும் தன்னுடைய வழக்கமான பாணியிலேயே இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். குடிப்பது, புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் எடுத்தது சிறப்பு. திரைக்கதையின் நீளம் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. அதுபோல் நகைச்சுவை இன்னும் அதிகமாக இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.



    வில்சன் மற்றும் தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘மிஸ்டர்.லோக்கல்’  பொழுதுபோக்கு.
    எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் பாடல்கள் இன்று வெளியானது.
    எம் 10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’.

    இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியானது.



    தற்போது இப்பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் ஜூன் மாதம் முதல் வெளியாக இருக்கிறது.
    வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ என்ற நாடகம் தமிழில் ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தில் சாக்‌ஷி அகர்வால் நாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலக பிரசித்தி பெற்ற ‘மெக்பெத்’ என்ற நாடகம் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தமிழில் திரைப்படமாகிறது. 

    இப்படத்திற்கு ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கதைக்கு திரை வடிவம் கொடுத்து  இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் இயக்குநர் அனீஸ். இவர் ஏற்கெனவே ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற படத்தை இயக்கியவர்.



    ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு 96 புகழ் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கதாநாயகர்களாக சதீஸ் நீநாசம், சரண் சஞ்சய்யும் நடிக்கிறார்கள். தற்போது கதாநாயகியாக சாக்‌ஷி அகர்வால் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 

    மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், மலையாளத்தில் ஓராயிரம் கினாக்கள் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்திலும், அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.
    பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிக்கு பிரபல பாடகர் குரல் கொடுக்க இருக்கிறார்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார்.

    மும்பையில் நடைபெற்று வந்த இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவு அடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. பிரதிக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என தர்பார் படத்தில் தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மற்ற திரையுலகில் இருந்தும் நடிகர், நடிகைகள் படக்குழுவில் இணைந்து வருகின்றனர்.



    இந்நிலையில் தர்பார் படத்தின் ரஜினி அறிமுக பாடலை அவரது ஆஸ்தான பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட இருப்பதாக தகவல் வருகின்றன. பேட்ட படத்திலும் ரஜினி அறிமுக பாடலான மரண மாஸ் பாடலை அவர்தான் பாடினார்.
    ஒரு அடார் லவ் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா வாரியர், அவருடன் நட்புதான், காதல் இல்லை என்று கூறியிருக்கிறார்.
    ஒரு அடார் லவ் மலையாள படத்தில் கண்ணடித்து பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு ஜோடியாக ரோ‌ஷன் நடித்திருந்தார். 

    பிரியா வாரியர் தற்போது இந்தியில் நடித்து வருகிறார். ஆனாலும் தன்னுடன் முதல்படத்தில் இணைந்து நடித்த ரோ‌ஷனுடன் டேட்டிங் செய்வதாகவும் இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.



    இதுபற்றி பிரியாவிடம் கேட்ட போது, 'சினிமாவில் வதந்திகள் தொழிலின் ஒரு அங்கமாகி விட்டது. அது நீண்ட நாள் தொல்லை தராது. தற்போது நடிப்பில் தான் கவனம் செலுத்துகிறேன். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. என்னையும் ரோ‌ஷனையும் ஜோடியாக வைத்து படங்கள் எடுக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. அவ்வளவு தான்’ என்றார்.
    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் விமர்சனம்.
    இந்த உலகத்தில் வாழும் எந்த உயிரையுமே கொல்லக்கூடாது என்ற எண்ணத்துடன் வளர்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இவரும், கருணாகரனும் சென்னையில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர். 

    இந்த நிலையில் தனது சொந்த ஊரில் இருக்கும் பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க செல்கின்றனர். ஆனால் ஏதோ காரணத்தால் பெண்ணை பார்க்க முடியவில்லை. ஒருகட்டத்தில் சொந்த வீடு இருந்தால் தான் பெண் தருவார்களோ என்று நினைத்து வீடு ஒன்றை வாங்க முடிவு செய்கிறார். இப்படி இருக்க பிரியா பவானி சங்கரிடம் இருந்து போன் வர சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கிவிடுகிறார்.



    பின்னர் அந்த வீட்டில் தங்கும் அவருக்கு எலி ஒன்று பெரும் தொல்லை கொடுக்கிறது. வீட்டில் எது வாங்கி வைத்தாலும் அதனை கடித்து துண்டு துண்டாக்கி தொல்லை கொடுக்கிறது. தினமும் இந்த நிலையே தொடர அதனை கொல்ல விருப்பமில்லாமல், அதை எங்கேயாவது கொண்டு சென்று விட்டுவிட எண்ணுகிறார்.

    இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவுக்கும், பிரியா பவானி சங்கருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நிலையில், பிரியா ஆசைப்பட்டு கேட்கும் ஷோபா ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறார். அந்த ஷோபாவையும் எலி கடித்து நாசம் செய்ய, கடுப்பாகும் எஸ்.ஜே.சூர்யா அதை கொன்று விட முடிவு செய்கிறார்.



    கடைசியில், எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணத்துடன் வளர்ந்த எஸ்.ஜே.சூர்யா அந்த எலியை கொன்றாரா? பிரியா பவானி சங்கரை கரம் பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மான்ஸ்ட்ரான எலியின் மீதிக்கதை.

    எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் தனது வழக்கமான நடிப்பு இல்லாமல் ஒரு சாதாரண இளைஞராக சிறப்பாக நடித்திருக்கிறார். எலியால் படும் தொல்லைகள், எலிலை கொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம். பிரியா பவானி சங்கர் படம் முழுக்க அழகான குடும்ப பெண்ணாக வந்து கவர்கிறார். கருணாகரன் காமெடி கதாபாத்திரமாக இல்லாமல், குணச்சித்திர வேடத்தில் வருகிறது. பெரிதாக காமெடி செய்யவில்லை.



    ஒரு நாள் கூத்து படத்தில் யதார்த்தமான வாழ்க்கை முறையை படமாக்கிய நெல்சன் வெங்கடேசன், இந்த படத்தில் எலியால் ஏற்படும் தொல்லைகளை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தின் திரைக்கதை ஒட்டாமல் இருப்பது போல தோன்றுகிறது. பெரும்பாலான இடங்களில் எலியை கிராபிக்ஸ் மூலம் காட்டி இருக்கிறார்கள். எலியே பாதி படத்தை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த உலகில் வாழும் எந்த உயிர்களையும் கொல்லக் கூடாது என்ற கருத்தை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்.

    ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. கோகுல் பினேயின் ஒளிப்பதிவில் காட்சிகளும் அபாரம்.

    மொத்தத்தில் `மான்ஸ்டர்' சுவாரஸ்யம் குறைவு.

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படம் சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு ஜூனில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
    கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவி வரும் நிலையில், படம் மீண்டும் துவங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கிய நிலையில் படத்தில் இடம்பெறும் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். கமல்ஹாசன் தோற்றத்தில் மாற்றம் செய்த பிறகும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. 

    கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டதால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு படத்தின் பட்ஜெட் விவகாரத்தில் இயக்குநர் ‌ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டு படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது. இந்தியன் 2 படத்தை தயாரிக்க ‌ஷங்கர் வேறு 2 பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அணுகி இருப்பதாகவும் கூறப்பட்டது.



    தற்போது ‌ஷங்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு லைகா நிறுவனதே ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரபுதேவாவுடன் `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்த நடிகை அடா சர்மா இந்தியில் நடிக்கும் புதிய படத்திற்காக எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
    சிம்பு - நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அடா சர்மா. இவர் கடைசியாக பிரபுதேவாவுடன் இணைந்து `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்திருந்தார்.

    மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.



    அடா சர்மா தற்போது `மேன் டூ மேன்' படத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட தனது படத்தை தான் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு பார்த்த ரசிகர்கள் அவரது உடலமைப்பை பாராட்டியும், சிலர் திட்டியும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் கிஷோர் - லவ்லின் சந்திரசேகர் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஹவுஸ் ஓனர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    நடிகர், இயக்குநர் என பன்முக திறமைகளை கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `ஹவுஸ் ஓனர்'. பசங்க கிஷோர் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆடுகளம் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையமாக வைத்து தீவிரமான காதல் கதையாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்த வரும் நிலையில், படம் வருகிற ஜூன் 21-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவையும், பிரேம் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

    அனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ படம் கடைசியாக வெளியான நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.
    நடிகை அனுஷ்கா மாதவன் ஜோடியாக ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து நடித்து தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியானார்.

    ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். கடைசியாக அவரது நடிப்பில் ‘பாகமதி’ படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின்னர் அனுஷ்கா படங்களில் நடிக்கவில்லை.

    இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த போது ஏற்றிய தனது உடல் எடையை வெளிநாடு சென்று குறைத்துவிட்டு வந்திருக்கிறார். சமீபத்தில் தான் ஒல்லியாக இருக்கும் தோற்றத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வருகிறார்.



    ஹேமந்த் மதுகர் இயக்கும் சைலன்ஸ் படத்தில் மாதவனுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் பிசியாகி இருந்த மாதவன், தனது புதிய தோற்றத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சைலன்ஸ் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

    இதுதவிர அனுஷ்கா சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் விமர்சனம்.
    கவின், அருண்ராஜா காமராஜ், ராஜூ மூன்று பேரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஏற்படும் ஒரு சம்பவத்திற்கு பிறகு பெண்களை நம்ப கூடாது. இனி நமது வாழ்வில் பெண்களே கிடையாது என்று முடிவு செய்கிறார்கள்.

    வேலை இல்லாமல் ஊர் சுற்றி வரும் இவர்கள், சுயமாக ஒரு தொழில் தொடங்க முடிவு செய்கிறார்கள். கல்யாணத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து கொடுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பணியை தொடங்குகிறார்கள்.



    இந்த நிலையில், ரம்யா நம்பீசனை பார்க்கும் ராஜூவுக்கு காதல் வந்து விட, அடிக்கடி ரம்யாவை பார்க்க செல்கிறார். இது மற்ற இருவருக்கும் சந்தேகத்தை உண்டுபண்ண, ராஜூ தனது நண்பர்களை கூட்டிச் சென்று ரம்யா நம்பீசனை காட்டுகிறார். ரம்யாவை பார்க்கும் இருவருக்குமே பிடித்துப் போகிறது.

    இந்த நிலையில், அருண்ராஜா காமராஜ் கவினை உசுப்பேற்றிவிட கவின் ரம்யாவை காதலிப்பதாக கூறுகிறார். ரம்யாவும், எந்தவித எதிர்ப்பும் இன்றி கவினின் காதலை ஏற்றுக் கொள்கிறார். இதனால் இவர்களது நட்பில் விரிசல் ஏற்படுகிறது.

    கடைசியில், நண்பர்கள் இணைந்தார்களா? கவின் - ரம்யா நம்பீசன் காதல் சேர்ந்ததா? அதன் பின்னணியில் நடக்கும் பின்னணியே நட்பான மீதிக்கதை.



    இந்த படத்தின் மூலம் கவின் தன்னை ஒரு நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். நண்பர்களுடனான காட்சியிலும் சரி, காதலியுடனான காட்சியிலும் சரி சிறப்பாக நடித்திருக்கிறார். முன்று நண்பர்களின் நட்புக்கு இடைஞ்சலாக வரும் கதாபாத்திரத்தில் ரம்யா நம்பீசன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    இயக்குநராக வெற்றி வாகை சூடியிருக்கும் அருண்ராஜா காமராஜூக்கு இந்த படம் நடிப்பில் சொல்லிக் கொள்ளும் படமாக இருக்கும் எனலாம். இனி முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அனைத்தையும் விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் ராஜூ தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.



    மற்றபடி இளவரசு, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், ரமா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    தனது முதல் படத்திலேயே நட்பு, காதலை மையப்படுத்திய கதையை இயக்கி இளைஞர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குநர் சிவா அரவிந்த். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மனதில் பதியும் வரை மெதுவாக போகும் கதை, கதாபாத்திரங்கள் பற்றிய புரிதல் ஏற்படும் போது புத்துணர்ச்சியை கொடுக்கிறது. காதலும், நட்புப் போட்டி போட்டுக் கொண்டு விளையாடும் இந்த கதையில், காமெடிக் காட்சிகள் பெரும்பங்கு வகிக்கிறது. நண்பர்கள் முன்று பேருமே அவர்களது கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் வசனங்கள் படத்திற்கு முக்கிய பலம்.

    சி.தரண்குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இடத்திற்கு தகுந்தாற்போல் வந்து ரசிக்க வைக்கிறது. கே.யுவராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `நட்புனா என்னானு தெரியுமா' கலாட்டா.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்மைபயில் நடந்து முடிந்தது. தனது காட்சிகளை முடித்து சென்னை திரும்பிய ரஜினி அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக விரைவில் மும்பை செல்லவிருக்கிறார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வருகிற மே 29-ந் தேதி தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.

    படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதியானது. ரஜினி இந்த படத்தில் சமூக சேவகர், அதிரடி போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல்படி, அவர் என்கவுண்டர் சிறப்பு போலீசாக நடிப்பது தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு நடந்த கல்லூரியிலேயே குற்றவாளிகளை விசாரிக்கும் சிறப்பு அறையை செட் போட்டு படம்பிடித்துள்ளனர். ரஜினி குற்றவாளியை விசாரிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளார்கள்.



    மற்றொரு கதாபாத்திரத்தில் ரஜினி தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை.

    தாதா ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியான ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா வருகிறார். தற்போது என்கவுண்ட்டர் போலீஸ் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

    ×