என் மலர்

  சினிமா

  விஜய் படத்தில் ஆசிட் வீச்சு சம்பவம்
  X

  விஜய் படத்தில் ஆசிட் வீச்சு சம்பவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் ஆசிட் வீச்சு சம்பவம் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பெண்கள் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இளம் நடிகைகள் பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்துள்ளனர். 

  இந்துஜா, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் அதில் முக்கியமானவர்கள். தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் இந்துஜா தமிழ்நாடு அணிக்காக விளையாடுவது உறுதியாகியுள்ள நிலையில் ஜெர்சி நம்பர் ‘63’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  விஜய் நடிக்கும் 63ஆவது படத்தை குறிக்கும் வகையில் இந்த எண்ணை தேர்வு செய்திருக்கலாம் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரெபா மோனிகா ஜான் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் அவரது முகத்தின் இடது பக்கம் ஆசிட் வீச்சினால் சிதைந்துள்ளது போல் மேக்கப் போடப்பட்டுள்ளது. இதனால் அணியில் இடம்பெறும் வீராங்கனைகளுக்கு அழுத்தமான முன்கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×