என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `கடாரம் கொண்டான்', `மஹாவீர் கர்ணா' படங்களை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை அஜய் ஞானமுத்து இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    `டிமாண்டி காலனி', `இமைக்கா நொடிகள்' படங்களை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

    விக்ரமின் 58-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. படத்தை 2020 கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளனர்.


    7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் மற்றும் வயாகாம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம், ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் உருவாகும் இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்றும் பணியாற்றவிருக்கும் நடிகர்கள், கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    விக்ரம் தற்போது `மஹாவீர் கர்ணா' படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க இருக்கிறார். விக்ரம் நடிப்பில் அடுத்ததாக `கடாரம் கொண்டான்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்துள்ளார்.

    தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மாரி 2 படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், அவரது அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடித்த பிரெஞ்சு-ஆங்கில திரைப்படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்'. இந்த படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

    ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனுசுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.



    கடந்த ஆண்டு மே மாதம் பிரான்சில் ரிலீஸான இந்த படம், தமிழில் வருகிற ஜூன் 21-ந் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்நாட் எக்ஸ் சார்பில் சசிகாந்தின் இந்த படத்தை வெளியிடுகிறார்.

    அமித் திரிவேதி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். நிகோலாஸ் எறேரா பின்னணி இசையமைத்துள்ளார்.


    இது குறித்து தனுஷ் கூறுகையில் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' இந்தியாவிற்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதை என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும் எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” என்றார்.

    இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா, நடிகர் சூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என்.ஜி.கே’. இப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் சூர்யாவிடம் கேள்வி கேட்டார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்று சுரேஷ் ரெய்னா கேட்க, அதற்கு சூர்யா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் சுரேஷ் ரெய்னா கேள்வி கேட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்று சூர்யா கூறினார்.



    அதன்பின் ஜோதிகா, கார்த்தியுடன் சேர்ந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, இன்றுதான் ஒரு கதை கேட்டேன். நன்றாக இருக்கிறது. அது அமைந்தால் ஜோதிகாவுடன் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதுபோல் கார்த்தியுடனும் நடிக்க ஆசைதான். அதற்கான நேரம் காலம் அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
    தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது ஹீரோக்களுடன் நடிக்க தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானாலும் ரஜினி முருகன் படம் மூலம்தான் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையானார். தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்தார். யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்துக்கும் கீர்த்தியின் நடிப்புக்கும் நாடு முழுக்க வரவேற்பு கிடைத்தது.

    இந்த வரவேற்பால் திக்குமுக்காடிப் போன கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தை தேர்வு செய்ய காலம் எடுத்துக் கொண்டார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரில்லர் பாணி கதையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோவே இல்லையாம்.



    முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கீர்த்தி தற்போது ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தயக்குகிறார் என்கிறார்கள்.
    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் என்.ஜி.கே திரைப்படம் விஜய்யின் மெர்சல், ரஜினியின் காலா வரிசையில் வெளியிட இருக்கிறார்கள்.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என்.ஜி.கே’. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தணிக்கைக் குழுவுக்கு இப்படத்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், என்.ஜி.கே படத்திற்கான எமோஜி ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. 



    இதற்குமுன் விஜய்யின் ‘மெர்சல்’, ரஜினியின் ‘காலா’ படத்திற்கு ட்விட்டரில் எமோஜியை வெளியிட்டார்கள். தற்போது சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்திற்கு வெளியிட்டிருக்கிறார்கள்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் கதையை பற்றி இந்தி நடிகர் கொடுத்த பேட்டியின் மூலம் கசிந்துள்ளது.
    ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதியானது. தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த 10-ந்தேதி தொடங்கி கடந்த வாரம் வரை நடைபெற்றது. இந்த மாத இறுதியில் மீண்டும் மும்பையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

    ரஜினியுடன் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என தர்பார் படத்தில் தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மற்ற திரையுலகில் இருந்தும் நடிகர், நடிகைகள் படக்குழுவில் இணைந்து வருகின்றனர்.

    தர்பார் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் கசியத் தொடங்கின. மும்பையில் ஒரு கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெற்றதால் அந்த கல்லூரி மாணவர்கள் படப்பிடிப்பை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்ப தொடங்கினார்கள். இதனால் கதையும் கசியத் தொடங்கியது.



    இது படக்குழுவுக்கு தலைவலியானது. அந்த தலைவலியை அதிகரிக்கும் வகையில் படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் தலீப் தாகிர் படத்தின் கதையையே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தர்பார் படத்தில் ரஜினி மும்பையை சுத்தம் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.

    தலீப் பேட்டி மூலம் ரஜினி மும்பையில் தீவிரவாதிகளையும் தாதாக்களையும் என்கவுண்டர் செய்து கொல்லும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதும் அவருக்கு அதிரடியான சண்டைக்காட்சிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    ஜிப்ஸி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கரு.பழனியப்பன், ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார், அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துவதாக தெரிவித்தார்.
    ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜு முருகன் எழுத்து, இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் ஜிப்ஸி. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், படக்குழுவினர் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய "துணிவின் பாடகன் பாந்த் சிங்" என்ற ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது.

    விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது,

    ராஜு முருகன் யுகபாரதிக்கு எப்படி ஒரு தம்பியோ, அதுபோல் என்னைப் போல பலபேருக்கு அவர் தம்பி. ஜீவா, இசையமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தயாரிப்பாளர் அம்பேத்குமார் பெரிதாக ஜெயிக்க வெண்டும். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். ஒரு பையனுக்கு ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டது. நான் தயங்கி கேட்டேன். ஆனால் அவர் அதை செய்து கொடுத்தார். நான் மருத்துவமனை போகும் முன்பே அவர் அங்கிருந்தார்.



    முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் இப்படியான உதவிகளால் தான் இன்னும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் மீது எப்படி ஈடுபாட்டோடு இருப்பாரோ அப்படித்தான் அவர் படங்களும் இருக்கும். ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார், அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துகிறேன்" என்றார்.`

    சக்திவாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘நாயே பேயே’ படத்தின் முன்னோட்டம்.
    கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் படம் ‘நாயே பேயே’.

    நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - நிரன் சந்தர், இசை - என்.ஆர்.ரகுநந்தன், கலை - சுப்பு அழகப்பன், படத்தொகுப்பு - கோபி கிருஷ்ணா, நிர்வாக தயாரிப்பாளர் - சக்கரத்தாழ்வார், ஆக்சன் - ஸ்டான்ட் ஜி.என், நடனம்  தினேஷ், தினா, இணை இயக்குனர் - வே.செந்தில்குமார், தயாரிப்பு மேற்பார்வை - அஸ்கர் அலி, விஜயகுமார், தயாரிப்பு - கோபி கிருஷ்ணா, கலையரசி சாத்தப்பன், டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சக்திவாசன்



    இயக்குனர் சக்திவாசன் படம் பற்றி கூறியதாவது:-

    ‘‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

    இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு அந்த சந்தர்ப்பம் அமைந்ததா, அதில் அவன் வெற்றி பெற்றானா? என்பதே இந்த படத்தின் கதை என்றார்.

    வடிவேலு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இம்சை அரசன் படத்தின் அடுத்த பாகமான இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று நம்புவதாக இயக்குநர் சிம்புதேவன் தெரிவித்துள்ளார்.
    வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

    இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்திலும் நடிகர் வடிவேலுவே நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு வடிவேலு படத்திலிருந்து விலகினார். இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. அரங்கையும் பிரித்துவிட்டனர். இதனால் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.


    இந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போனார் இயக்குனர் ஷங்கர். வடிவேலுவிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் முடிவு எட்டப்படவில்லை.

    இதையடுத்து இயக்குநர் சிம்புதேவன் தனது அடுத்த படத்தை இயக்க சென்றுவிட்டார். ஷங்கரும் ரஜினியின் 2.0 படத்தில் பிசியாகிவிட்டார். இந்த நிலையில், சிம்புதேவன் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது அடுத்த படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு முதலில் இருந்து மீண்டும் துவங்கப்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் ஒத்த செருப்பு படத்தின் அறிமுக விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், பார்த்திபன் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று பாராட்டினார்.
    பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் இயக்குநர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இடம்பெறும்படியாக 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. 

    சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், ஷங்கர், பாக்யராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



    விழாவில் பாக்யராஜ் பேசியதாவது,

    இந்த விழாவை பொறுத்தவரை பார்த்திபனை விட எனக்கு தான் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனென்றால் பார்த்திபன் என் சிஷ்யன். சிஷ்யன் என்பதை தாண்டி அவர் குருவை மிஞ்சிய ஒரு சிஷ்யன். 16 வயதினிலே படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்த போது ஒரு காட்சியில் நான் சொன்ன ஒரு விஷயத்தை ஏற்று, கமல் சார் அப்படியே செய்தார். 

    உதவி இயக்குனர்கள் என்பவர்கள் படத்தின் இயக்குனராக தன்னை நினைத்து வேலை செய்ய வேண்டும். கடமைக்கு வேலை செய்யக்கூடாது என்றார்.

    ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அவர் காரில் கடந்து செல்வதை மக்களுடன் நான் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    நடிகை குஷ்பு சென்னையை பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

    சென்னை எனக்கு புகழ், குடும்பம் என எல்லாவற்றையும் தந்துள்ளது. என் மனதில் இருந்த துன்பத்தை போக்கியது. நான் பாஸ் போர்ட்டில் மும்பை வாசியாக இருந்தாலும், இதயப்பூர்வமாக சென்னை வாசியாக உணர்கிறேன். இந்த சிறப்பான நகரத்துக்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.

    சென்னை காலத்துக்கேற்ப நிறைய மாறி இருக்கிறது. ஆனாலும் இங்கு கலாசாரம் வேரூன்றி இருக்கிறது. எனது மகள்கள் இங்கே வளர்ந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஒரு நடிகையாக, தற்போது விளம்பர பலகைகள், பேனர்களை அண்ணா சாலையில் பார்க்க முடிய வில்லை என்பது சற்று வருத்தம் தான். முன்பெல்லாம் பட ரிலீசின் போது மவுண்ட் ரோட்டுக்கு சென்ற போது பெரிய பெரிய பேனர்களை பார்த்திருக்கிறேன். எனது முதல் தமிழ் படமான ‘தர்மத்தின் தலைவன்’ வெளியான போது நான் மவுண்ட் ரோட்டுக்கு சென்றேன்.

    அங்கு பெரிய அளவில் திரண்டிருந்த ரசிகர்கள் பேனர்களை பார்த்து கொண்டிருந்தனர். அதில் பிரபுவின் படம் மட்டும் இருந்தது. அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

    எனது கணவர் சுந்தர் சி நடித்த ‘தலைநகரம்‘ படம் வெளியான போது மவுண்ட்ரோட்டில் அவரது படத்துடன் கூடிய பெரிய பேனர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த போது எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. நான் தென்னிந்தியாவில் முதலில் தெலுங்கு படத்தில்தான் நடித்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விஜயவாகினி ஸ்டூடியோவில் 1986-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்கியது.

    அந்த நாட்களை என் வாழ்வாளில் மறக்க முடியாது. ரஜினிகாந்துடன் நான் நடித்த ‘பாண்டியன்’ படத்தின் படப்பிடிப்பு முட்டுக்காடு பகுதியில் நடைபெற்ற போது ரசிகர்களும், சுற்றுலா பயணிகளும் பெரிய அளவில் திரண்டிருந்தனர். அதேபோல ‘அண்ணாமலை’ படத்தின் ஒரு பாடல் காட்சி போட்கிளப் பகுதியில் நடந்த போதும் அப்பகுதி பொதுமக்கள் தெரு முழுவதும் திரண்டு நின்று பார்த்தனர். இதை என்னால் மறக்க முடியாது.

    ஒரு அரசியல்வாதியாக எனக்கு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் பெரிய செல்வாக்கு இருந்தது. இது எனக்கு கிடைத்த அரியாசனமாக உணர்ந்தேன். நான் சென்னையில் நீண்ட காலமாக வசித்த போது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நான் பார்த்திருக்கிறேன்.

    ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். அவர் காரில் கடந்து செல்வதை பார்க்க தெருக்களில் மக்கள் அலை போல திரண்டு இருப்பதை பார்த்திருக்கிறேன்.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது தினமும் காலை 9.30 மணிக்கு மியூசிக் அகாடமி ரோட்டில் காரில் செல்வார். நானும் மக்களுடன் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன். அவர் மதியம் சாப்பிட செல்லும் போது சாலையின் எதிர் திசைக்கு சென்று அவரை பார்ப்பேன்.


    இது சில வாரங்கள் சென்று கொண்டே இருந்தது. இதைப் பார்த்த அவர், ஒரு நாள் அவரது மெய்க்காப்பாளர்களை அனுப்பி என்னை யார்? என விசாரித்துள்ளார்.

    எனக்கு அமைதி தேவை என்றால் உடனே மெரினா கடற்கரைக்கு சென்று விடுவேன். தி.நகர் கடைகளுக்கு சென்று சேலைகள் வாங்கியதையும் மறக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பள்ளிகளில் அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்றும், விடுமுறை நாட்களில் ஏரி, குளங்களை தூர்வார இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் கொடைக்கானலில் விவேக் கூறினார்.
    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடந்த 1978-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் முன்னாள் மாணவரும், நடிகருமான விவேக் கலந்து கொண்டார். பின்னர் அவர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் வறண்டதுடன், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்ய வேண்டும் என்றால் தொடர்ந்து மரக்கன்றுகளை நட வேண்டும். பள்ளிகளில் அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார இளைஞர்கள் முன்வர வேண்டும்.



    தற்போது மரக்கன்றுகள் நடவு செய்தால் மட்டும் தான் 10 ஆண்டுகளில் மழை பொழிவை பெற முடியும். ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலும், அரசியான ஊட்டியையும் கிழவியாக மாற்றி வருகிறோம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்துக்கு அதிகளவு மரங்கள் வெட்டப்பட்டதே காரணம் ஆகும். இவ்வாறு அவர் கூறினர். 

    இதையடுத்து அரசியலுக்கு வருவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நல்ல கருத்துகளை சினிமா மூலம் எடுத்துச் சொல்வதாகவும், வாய்ப்பு இருந்தால் அரசியலுக்கு வருவேன் என்றும் தெரிவித்தார்.

    ×