என் மலர்

  சினிமா

  தர்பார் படத்தின் கதை கசிந்தது
  X

  தர்பார் படத்தின் கதை கசிந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் கதையை பற்றி இந்தி நடிகர் கொடுத்த பேட்டியின் மூலம் கசிந்துள்ளது.
  ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

  இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதியானது. தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த 10-ந்தேதி தொடங்கி கடந்த வாரம் வரை நடைபெற்றது. இந்த மாத இறுதியில் மீண்டும் மும்பையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

  ரஜினியுடன் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என தர்பார் படத்தில் தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மற்ற திரையுலகில் இருந்தும் நடிகர், நடிகைகள் படக்குழுவில் இணைந்து வருகின்றனர்.

  தர்பார் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் கசியத் தொடங்கின. மும்பையில் ஒரு கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெற்றதால் அந்த கல்லூரி மாணவர்கள் படப்பிடிப்பை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்ப தொடங்கினார்கள். இதனால் கதையும் கசியத் தொடங்கியது.  இது படக்குழுவுக்கு தலைவலியானது. அந்த தலைவலியை அதிகரிக்கும் வகையில் படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் தலீப் தாகிர் படத்தின் கதையையே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தர்பார் படத்தில் ரஜினி மும்பையை சுத்தம் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.

  தலீப் பேட்டி மூலம் ரஜினி மும்பையில் தீவிரவாதிகளையும் தாதாக்களையும் என்கவுண்டர் செய்து கொல்லும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதும் அவருக்கு அதிரடியான சண்டைக்காட்சிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
  Next Story
  ×