என் மலர்
சினிமா செய்திகள்
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் முன்னோட்டம்.
ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் `தேவி 2'.
பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - அயனங்கா போஸ், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - லெவ்லின் அந்தோணி கான்சால்வ்ஸ், சங்கீத் சத்யநாதன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா, மனோகர் வர்மா, பாடல்கள் - பிரபுதேவா & கார்கி, வசனம் - கிரேஸி மோகன், விஜய், தயாரிப்பு - டாக்டர் ஐசரி கே.கணேஷ் & ரவீந்திரன், எழுத்து, இயக்கம் - விஜய்.

படம் குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது,
"நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது இப்போது தேவி 2 படத்தில் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவி 2 படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய கூறுகள் படத்தில் உள்ளன. இந்த கோடையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
தேவி 2 படத்தின் டிரைலர்:
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தில் அரசியல்வாதி கதபாத்திரத்தில் இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் நடிப்பதாக வெளியான தகவலை வெங்கட் பிரபு மறுத்துள்ளார்.
`சென்னை 600028' இரண்டாம் பாகத்திற்கு பிறகு வெங்கட் பிரபு `பார்ட்டி' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு `மாநாடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், முக்கிய கதபாத்திரத்தில் அர்ஜூனும் நடிக்கிறார்கள்.

அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கட் பிரபுவின் அப்பாவும், இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்த தகவலில் உண்மையில்லை என்று வெங்கட் பிரபு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
`நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் தல 60 படத்தின் இயக்குநர் யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை'. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் இவரே தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தையும் எச்.வினோத் இயக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
அஜித்துக்காக அரசியல் கலந்த திரில்லர் கதையை வினோத் உருவாக்கியதாகவும், ஆனால் அதில் அரசியல் கதையில் விருப்பம் இல்லாத அஜித் வேறு கதையை தயார் செய்யும்படியாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே எச்.வினோத்துக்கு பதிலாக வேறு ஒரு இயக்குநருடன் அஜித் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை வினோத் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சுந்தர்.சி-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
`பேட்ட' படத்திற்கு பிறகு சசிகுமார் `நாடோடிகள் 2', கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் கென்னடி கிளப் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகுமார் தற்போது கே.வி.கதிர்வேலு இயக்கத்திலும், என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் கே.வி.கதிர்வேலு இயக்கும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில்
நடிக்கின்றனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக தயாராகிறது. சென்னை மற்றும் பொள்ளாச்சியில் முதல்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கசட தபற படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.
பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
I am extremely happy and super thrilled to unveil the #6editorsofkasadatabara my hearty wishes to the team #kasadatabara@vp_offl@chimbu_deven@blacktktcompany@tridentartsoffl@muzik247inpic.twitter.com/p5KQgv2ahY
— sreekar prasad (@sreekar_prasad) May 21, 2019
மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 பேரும் ஒரே கதையில் பணியாற்றியிருப்பதாக பிரபல படத்தொகுப்பபளரான ஸ்ரீகர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். `மெர்சல்' படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. அடுத்ததாக `பாரிஸ் பாரிஸ்' என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள `சீதா' என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்திற்கான புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

இதுதவிர ஜெயம் ரவியுடன் இணைந்து `கோமாளி' படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர கமல்ஹாசனின் `இந்தியன் 2' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த `மான்ஸ்டர்' படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரியா பவானி சங்கர் பெயரில் முளைத்திருக்கும் போலி ட்விட்டர் கணக்கால் அவர் கோபமடைந்து உள்ளார்.
`மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக இவர் நடித்த `மான்ஸ்டர்' படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ட்விட்டரில் பிரியா பவானி சங்கரின் பெயரில் செயல்படும் போலி கணக்கு ஒன்றில், “மான்ஸ்டர் படம் அனைவருக்கும் பிடித்து இருப்பதாக நம்புகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி” என்று பிரியா பவானி சங்கர் கூறுவதுபோல் கருத்து பதிவாகி உள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியா பவானி சங்கர், அந்த ட்விட்டை குறிப்பிட்டு “போலி கணக்கு தொடங்கிய உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. எனக்கு தொல்லை கொடுப்பதையே வேலையாக வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.
Dear fake profile! I understand your excitement and responsibility in posting something. But pls don’t make it as your duty to embarrass me in an hourly basis. Thanks but no thanks 🙏🏼 https://t.co/teO1K1VC6w
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 20, 2019
சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் நடிகர், நடிகைகளின் பெயரில் பல போலி கணக்குகள் முளைத்து வருகின்றன. அதில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் பேசுவதுபோலவே கருத்துகளை பதிவிடுகிறார்கள். அதை உண்மை என்று நம்பி ரசிகர்களும் பின்தொடர்கிறார்கள். இதனால் குறிப்பிட்ட பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்கி எதிர்ப்புக்கு உள்ளாவதும், அதன்பிறகு விளக்கம் அளிப்பதும் தொடர்ந்து வருகிறது.
விவேக் ஓபராய் பதிவிட்ட ட்விட், சர்ச்சையானதை தொடர்ந்து அதற்கு வருத்தம் தெரிவித்து விளக்கமும் அவர் அளித்துள்ளார்.
வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தேசிய ஊடகங்கள் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் வெளியிட்டன. தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பு குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தனர். கடந்த காலங்களில் கருத்துக் கணிப்புகளின்படி ஆட்சி மாற்றம் நடைபெறவில்லை என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.
இந்த கருத்துக் கணிப்பு களை விமர்சிக்கும் வகையில் பாலிவுட் நடிகரும் பா.ஜனதாவின் ஆதரவாளருமான விவேக் ஓபராய், அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு என்று கூறி சல்மான்கானுடன் ஐஸ்வர்யா ராய் இருக்கும் படத்தையும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு என்று கூறி தன்னுடன் ஐஸ்வர்யாராய் இருக்கும் படத்தையும் தேர்தல் முடிவு என்று கூறி அபிஷேக் பச்சன் மற்றும் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் முதலில் சல்மான்கானையும் பின்னர் விவேக் ஓபராயையும் காதலித்தார். பின்னர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
விவேக் ஓபராயின் இந்த ட்விட்டுக்கு கண்டனங்கள் எழுந்தன. அந்த படத்துக்கு மேல், ‘இது கற்பனைத்திறன். இங்கு அரசியல் இல்லை. வாழ்க்கை மட்டுமே’ என்று எழுதியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் விவேக் ஓபராயின் இந்த ட்விட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தேசிய பெண்கள் ஆணையம் அவருக்குக் கண்டனம் தெரிவித்தது.
இந்த சர்ச்சை பெரிதானதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக் ஓபராய், மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் நன் பகிர்ந்ததில் என்ன தவறு? நான் செய்தது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்பேன். நான் செய்ததில் என்ன தவறு என கூறினார்.
இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய மீம்-ஐ நீக்கிவிட்ட விவேக் ஓபராய், ‘ஒருசிலரால் நகைச்சுவையாக பார்க்கக்கூடிய விஷயம் பிறரால் அப்படி பார்க்கப்படுவதில்லை. நான் ஒருபோதும் பெண்களை அவமரியாதை செய்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2000 பெண்களின் முன்னேற்றத்திற்காக உதவியிருக்கிறேன். எனினும், எனது பதிவு சிலரது மனதை புண்படுத்தியதாக அறிந்ததால் அந்த பதிவை நீக்கிவிட்டேன். மேலும் இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்று விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
நட்புன்னா என்னனு தெரியுமா படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் ரம்யா நம்பீசன், அவர் இசையில் பாட பயம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
ரம்யா நம்பீசனுக்கு வாய்ப்புகள் நிறைய வந்தாலும் பீட்சா, சேதுபதி என்று தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நட்புன்னா என்னனு தெரியுமா? படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் அவர் அளித்த உற்சாக பேட்டி:-
பெரிய ஹீரோக்கள், புது ஹீரோக்கள் பாரபட்சம் இல்லாமல் நடிப்பது ஏன்?
எனக்கு மார்க்கெட் பற்றி கவலை இல்லை. சேதுபதிக்கு பிறகு அதிகமாக அம்மா கதாபாத்திரங்களே வந்தன. இந்த படம் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக வந்தது. முற்றிலும் புதியவர்கள், இளைஞர்கள் என்பதால் ஒப்புக்கொண்டேன். அம்மாவாக நடிப்பதை விட இதுபோன்ற வேடங்களை அதிகம் விரும்புகிறேன். பெரிய ஹீரோ படம் என்றாலே அம்மா வேடங்களாக வருகின்றன.
கவுரவ தோற்றத்தில் அதிகம் நடிப்பது ஏன்?
என்னை கவுரவ நடிகையாகவே மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எல்லாம் நண்பர்களுக்காக நடித்தவை. இனி குறைத்துக்கொள்வேன். நான் தேர்ந்தெடுத்து எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வேன்.

அடுத்து?
விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் படத்தில் நடித்து வருகிறேன்.
அந்த படத்துக்கு இளையராஜா இசை. அதில் பாட வாய்ப்பு உண்டா?
அவர் இசையில் பாட எனக்கு பயம். இளையராஜா 75 நிகழ்ச்சியில் அவர் முன்பு பாடியதே நான் செய்த பாக்கியம்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி - ராஷ்மிகா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு கசிந்துள்ளது.
கார்த்தி நடிப்பில் தற்போது ‘கைதி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நிக்கிலா விமல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இது தவிர பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ராஷிமிகா நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘சுல்தான்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய் அடுத்ததாக நடித்து வரும் படத்திற்காக சூர்யா வில்லனிடம் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார்.
அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் ‘பாக்ஸர்’ என்கிற படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். விவேக் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த ஜானி பயிற்சி கொடுத்து வருகிறார்.

ஜானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வியட்நாமில் மாஸ்டர் ஜானியுடன் பயிற்சி எடுத்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
மாரி 2 படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற படத்தின் தமிழ் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடித்த பிரெஞ்சு-ஆங்கில திரைப்படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்'. இந்த படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனுசுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் பிரான்சில் ரிலீஸான இந்த படம், தமிழில் வருகிற ஜூன் 21-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.






