என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, கையில் சுத்தியலுடன் வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நயன்தாரா சுத்தியலுடன் வந்து ‘காலம் ஒரு துரோகி...’ என்று வசனம் பேசுகிறார். இந்த புரமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, அடுத்ததாக கோமாளி பட இயக்குனருடன் கைகோர்த்து இருக்கிறார்.
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘கோமாளி’. இப்படத்தை இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். ‘கோமாளி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் - யுவன் சங்கர் ராஜா
இப்படத்தின் மூலம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இயக்கி வரும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

கிராமத்து பின்னணியில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் டிசம்பர் 23ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது "நினைவெல்லாம் நீயடா". இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.
இதில் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். இளம் வயது நாயகன் நாயகியாக மாஸ், மாஸ்டர் பட புகழ் ரோகித்தும், அப்பா, அம்மா கணக்கு, ஆருத்ரா, வினோதய சித்தம் படங்களில் நடித்த யுவஸ்ரீயும் நடிக்கின்றனர். இவர்களுடன் மனோபாலா முத்துராமன் மதுமிதா பட அதிபர் பி எல் தேனப்பன் டைரக்டர் ஜெயபிரகாஷ் ரஞ்சன் குமார் தமிழ்செல்வி ஐஸ்வர்யா உட்பட பலர் நடிக்கின்றனர்.

பிரஜன்
இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகை மனிஷா யாதவ் கூறும்போது, "நான் நடித்த வழக்கு எண்18/9, ஒரு குப்பை கதை போன்ற படங்கள் ரசிகர்களிடம் எனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தன. அந்த வரிசையில் இந்த படம் என் நடிப்புத் திறமைக்கும் நடன திறமைக்கும் தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் கதையை இயக்குனர் ஆதிராஜன் சொன்ன உடனேயே பிடித்து விட்டது. அதற்கு காரணம்.... ஒரே கேரக்டருக்குள் பலவிதமான கேரக்டர்கள் ஒளிந்திருக்கும் வித்தியாசமான வேடம் இது.
இதுவரை இப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை. நிஜமாகவே எனக்கு சவாலான வேடம் இது. அத்துடன் இளையராஜா சார் இசையில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற என்னுடைய கனவும் இந்த படத்தில் நிறைவேறுகிறது. கண்டிப்பாக இந்த படத்தை காதலர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது பிரபல நடிகை ஒருவர் கூறி இருக்கிறார்.
சமுத்திரக்கனி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ரைட்டர். நீலம் புரடக்ஷன் சார்பில் பா ரஞ்சித் தயாரித்திருக்கும் இப்படத்தில் இனியா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் இனியா பேசும் போது, ரைட்டர் படத்தின் இயக்குனர் பிராங்க்ளின் என்னிடம் கதை சொல்லும் போது சிறப்பாக சொன்னார். ஆனால் அதில் என் கதாபாத்திரம் மட்டும் சொல்லவே இல்லை. உங்கள் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் என்று சொன்னார். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து இருக்கிறேன்.

ரைட்டர் படத்தில் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது. எதோ முக்கியமான கதாபாத்திரம் நடிக்கிறார் என்று நினைத்தேன். படப்பிடிப்பு தளத்தில் தான் தெரியும் அவர்தான் ஹீரோ என்று. தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இயக்கத்தில் முழு படத்தில் நடிக்க ஆசை என்றார்.
நடிகர் கிச்சா சுதீப் கிரிக்கெட் வீரருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது 36 வருட கனவு நினைவானதாக கருத்து பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் உலக கோப்பையை இந்திய அணிக்காக முதன்முதலில் வென்று கொடுத்தவர் கபில்தேவ். அவரது தலைமையிலான இந்திய அணி கடந்த 1983-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இந்த நிலையில் கபில்தேவின் வாழ்க்கையையும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு இந்தி படம் உருவாகி உள்ளது.

அந்த படம் கன்னடம் உள்பட பல மொழிகளில் உருவாகி இருக்கிறது. அந்த திரைப்படத்தை கன்னடத்தில் வெளியிடும் விழா பெங்களூருவில் நடந்தது. இதில் கபில்தேவ், நடிகர் கிச்சா சுதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கபில்தேவை நேரில் பார்த்ததும் நடிகர் கிச்சா சுதீப், கபில்தேவிடம் சென்று மகிழ்ச்சி பொங்க உரையாடினார். பின்னர் அவர் கபில்தேவுடன் நிறைய புகைப்படங்களையும், செல்பி புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். அதையடுத்து அவர் அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தனது கருத்தையும் பதிவிட்டு இருக்கிறார்.

கபில் தேவ் - கிச்சா சுதீப்
அவர் பதிவிட்டுள்ள கருத்தில், ‘‘ 36 ஆண்டுகளாக நான் அவரை பார்க்க முயற்சித்தேன். ஆனால் அது நடக்கவில்லை. 36 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நான் அவரை நேரில் பார்ப்பது மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். எனது 36 வருட கனவு தற்போது நினைவாகி உள்ளது. இது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை தருகிறது’’ என்று பதிவிட்டு உள்ளார்.
ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 500 இந்தியர்களின் பெயர்கள் பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.
புது டெல்லி
பனாமா ஆவண விவகாரம் தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியல் பனாமா ஆவணம் என்ற பெயரில் வெளியானது. இதில் பல நாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 500 இந்தியர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் பகுதி 37-ன் கீழ், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜாராக வேண்டும் என அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதாகவும், இது தொடர்பாக அவர் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தன் மகளை விளம்பர வெளிச்சம் இல்லாமல் வளர்க்க நினைப்பதாக நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து இருவரும் தங்களது மகளின் முகத்தை சமூக வலைதளங்களில் வெளியிடாமலேயே ரகசியம் காத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் விராட் கோலி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்திற்காக மும்பை விமான நிலையம் சென்றிருந்தபோது தனது மகள் வாமிகா, மனைவி அனுஷ்கா சர்மா இருவரையும் அழைத்து சென்றார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், கோலியின் மகளின் முகத்தை புகைப்படம் பிடித்துவிட்டார். ஆனாலும் அந்த புகைப்படம் எந்த பத்திரிக்கையிலும் வெளியாகவில்லை. இந்நிலையில் அந்த பத்திரிக்கையாளருக்கு அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
என் மகளின் புகைப்படம், வீடியோ எதையும் வெளியிடாத அந்த பத்திரிக்கையாளருக்கும், ஊடகங்களுக்கும் நன்றி. எங்கள் மகளை விளம்பர வெளிச்சம் இல்லாமல் வளர்க்க நினைக்கிறோம். அவர் வளர்ந்த பிறகு தன் விருப்பத்தை அவரே தேர்ந்தெடுக்கட்டும். அதுவரை எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்.
இவ்வாறு அனுஷ்கா சர்மா கூறினார்.
தன் மகன் ஒரு நடிகராவதில் தனக்கும், தன் மனைவிக்கும் விருப்பமில்லை என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
துபாய்
நடிகர் மாதவன், தன் மகன் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதற்காக துபாயில் குடியேறியுள்ளார்.
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரராக உள்ளார். அவர் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் பங்கேற்று 7 பதக்கங்களை வென்றார். இதை தொடர்ந்து அவர் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், அவர் நீச்சல் பயிற்சி பெறுவதற்காக மாதவன், தன் மனைவி சரிதாவுடன் சென்று துபாயில் குடிபெயர்ந்துள்ளார். இது குறித்து நடிகர் மாதவன் கூறியதாவது:-
வேதாந்த், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார். அவர் பயிற்சி பெறுவதற்கு பெரிய நீச்சல் குளங்கள் தேவை. ஆனால் மும்பையில் உள்ள நீச்சல் குளங்கள் அனைத்தும் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளன. அதனால் அவர் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக நானும், என் மனைவியும் துபாயில் குடியேறியுள்ளோம். எங்கள் மகன், உலகம் முழுவதும் நடைபெறும் பல நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை ஒரு நடிகராக்குவதில் எனக்கும், என் மனைவிக்கும் விருப்பமில்லை.
இவ்வாறு மாதவன் கூறினார்.
தமிழ் சினிமாவில் சாதி வேற்றுமை நிலவுகிறது என்ற கருத்தில் நான் தெளிவாக இருக்கிறேன் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 14-ம் தேதி இசைவெளியிட்டு விழா ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சினிமாவிற்கு சாதி, மதம் எதுவும் கிடையாது. யார் என்ன கூறினாலும் பரவாயில்லை, சினிமாவிற்கு சாதி மதம் கிடையாது. இங்கு விளக்கை அணைத்தால் ஒரே ஒளி மட்டும்தான் என்று பேசியிருந்தார். இந்நிலையில் கமலின் இந்த கருத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாத்துறையில் சாதி வேற்றுமை இருக்கிறது என்ற எனது நிலைப்பாட்டில் நான் தெளிவாக இருக்கிறேன். அவற்றை நான் உணரவும் செய்கிறேன் என பா.ரஞ்சித் பதிலளித்துள்ளார்.
பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, சீனியர் கலைஞன் ஜனகராஜிற்காக ஒரு படத்தில் நடித்து கொடுத்து இருக்கிறார்.
ஜே.பி.ஜே.பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயசீலன் தயாரித்துள்ள படம் "ஒபாமா". இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பூர்நிஷா நடித்துள்ளார். மற்றும் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி.சிவா, தளபதி தினேஷ், கோதண்டம், கயல் தேவராஜ், செம்புலி ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
இப்படம் பற்றி இயக்குனர் நானி பாலா கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சமூகம் சார்ந்த கருத்துக்களை காதல், காமெடி கலந்து ஜனரஞ்சகமாக உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க உறுதி அளித்து இருந்தார், ஆனால் அவர் ஷூட்டிங் நேரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் நான் ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டேன் அதை பார்த்த நடிகர் ஜனகராஜ், என்னிடம் வந்து இரு குட்டி நான் ஒரு முயற்சி செய்கிறேன் என்றார். பின் அவர் 96 படத்தின் டைரக்டர் பிரேம் அவர்களிடம் இந்த மாதிரியான படம் விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பாரா என்று கேட்க, அவரும் உங்களுக்காக கேட்டு பார்க்கறேன் என்றார். அதை கேட்டு அவரும் அண்ணனுக்காக நடித்து கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். இதை அவர் சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை. அவரை கேட்டால் நடிப்பார் என்று எப்படி தோன்றியது என்று ஜனகராஜிடம் கேட்டேன்? அதற்கு ஜனகராஜ் அவரோடு பழகிய போது தெரிந்தது என்றார். அது சீனியர் ஒருவருக்கான மரியாதை, தொழிலுக்கு காட்டும் நன்றி தான் அதற்கு காரணம் என்றார்.

ஜனகராஜ் - பிரித்வி பாண்டியராஜ்
உடனே நான் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை நேரில் சந்தித்து டிஸ்கஷன் செய்தேன், பிறகு நடித்து கொடுத்தார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் ஆண்பாவம் படம் முதல் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறேன். பலரையும் கண்டு இருக்கிறேன். ஆனால் மக்கள் செல்வன் பட்டத்திற்கு ஏற்ற மனிதர் தான் விஜய் சேதுபதி’ என்றார்.
உச்ச நடிகராக இருக்கும் ரஜினி, தனது ரசிகரின் மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவருக்கு ஆறுதல் கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'அண்ணாத்த'. இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ரஜினி, அவருக்கு தங்க செயின் பரிசாக அளித்தார்.
மேலும் கடந்த 12 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களும் இணைத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ரசிகரின் மகள் சௌமியா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதை அறிந்த ரஜினி, அவரை காணொளி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். கண்ணா பயப்படாத, தைரியமா இரு. கொரோனாவால என்னால நேர்ல வர்ற முடியல என ஆறுதலாக பேசியுள்ளார் ரஜினி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






