search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுஷ்கா சர்மா"

    • விராட் கோலி மற்றும் அனுஷ்க சர்மா தம்பதிக்கு பிப்ரவரி 15-ம் தேதியே ஆண் குழந்தை பிறந்தது.
    • அந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டனர்.

    விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 2021-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி மகள் வாமிகா பிறந்தாள். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    ஆனால், அதற்கு முன் சில மாதங்களாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2-வது குழந்தையை வரவேற்க இருப்பதாகவே செய்தி வெளியாகி வந்தது. இது குறித்து இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அப்போது தான், விராட் கோலியின் நண்பரும், தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரருமான ஏபி டிவியர்ஸ் தனது யூடியூப் சேனலில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2-வது குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிவித்தார்.இதையடுத்து, ஒரு சில நாட்களுக்கு பிறகு அது உண்மையில்லை என்று அதற்கு மறுப்பு செய்தியும் வெளியிட்டார்.

    இந்த நிலையில் தான் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், பிப்ரவரி 15-ம் தேதியே ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் 20-ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டனர்.

    தற்போது விராட் கோலி ஐபிஎல் தொடரில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் தான் அனுஷ்கா சர்மா கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு தனது மகன் அகாய் மற்றும் மகள் வாமிகா உடன் லண்டனிலிருந்து திரும்ப வந்துள்ளார். இந்தியா வந்த அவரை மும்பை விமான நிலையத்தில் புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்டனர்.

    அப்போது தனது மகன் மற்றும் மகளை கேமராவிற்கு மறைத்து தான் மட்டுமே போஸ் கொடுத்துள்ளார். ஆனால், மகனை புகைப்பட கலைஞர்களிடம் காண்பித்துள்ளார். புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஆர்சிபி விளையாடும் போட்டியை பார்க்க அனுஷ்கா வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம்.
    • இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இது தொடர்பாக கேன் வில்லியம்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில், எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    தனது குழந்தையின் பிறப்பை ஒட்டி, அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.

    ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 3 டெஸ்ட் சதங்களை அவர் அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாக்கும் அண்மையில் தான் ஆகாய் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது

    • இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியில் இடம் பிடித்த கோலி பின்னர் 2 டெஸ்ட்டில் இருந்து விலகினார்.
    • கோலி டெஸ்ட்டில் விளையாடததற்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

    இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன்களும் இங்கிலாந்து 253 ரன்கள் எடுத்தது. இன்று 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதலில் இடம் பிடித்தார். பின்னர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதற்கு என்ன காரணம் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் கேள்விக்கு விராட் கோலியின் நண்பரும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரருமான டிவில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார். அதில், விராட் கோலியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதாக தெரிவித்தார்.

    இதனால் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கூட சந்தேகம் தான் என தகவல் வெளியாகி உள்ளது.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 - ஆம் தேதி நடைபெற உள்ளது.
    • விழாவில் பங்கேற்க முக்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க சர்வதேச அளவில் 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள கிரிக்கெட் வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

    கிரிக்கெட் உலகின் முன்னணி வீரரான சச்சின் டெண்டூல்கருக்கு கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் சச்சின் பங்கேற்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதனைதொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தோனியையும் அவரது மனைவியையும் நேரில் சந்தித்து விழா அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால் தோனி இந்த விழாவில் பங்கேற்பாரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. கிரிக்கெட் வீரர் விராட் கோலி-க்கும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோலி கடவுள் நம்பிக்கை உடையவர் என்பதால் இந்த விழாவில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வினுக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

    • சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் டோனிக்கு ஏற்கனவே அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

    உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

     

    இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    • ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
    • ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரராக விராட் கோலி திகழ்கிறார்.

    ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.

    அடுத்தடுத்து சதம் அடித்தது ஆர்சிபி ரசிகர்களுக்கு விருந்தளித்தார் என்றே சொல்லலாம். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த கிறிஸ் கெயில் சாதனையை இதன் மூலம் விராட் கோலி முறியடித்தார்.

    இந்நிலையில் இந்த போட்டியை விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா நேரில் கண்டு களித்தார். அப்போது சதம் அடித்த விராட் கோலிக்கு, அனுஷ்கா சர்மா பிளைங் கிஸ் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    • சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
    • மனைவி அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது.

    ஐதராபாத்:

    நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி கிளாஸனின் அதிரடியான சதம் காரணமாக 186 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி விராட் கோலியின் சதம் காரணமாக 19.2 ஓவர்களில் வெற்றியை பதிவு செய்தது. சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் தனது வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் மனைவியே முக்கியக் காரணம் என்று விராட் கோலி கூறுவார்.

    அந்த வகையில் மிகமுக்கியமான சதத்தை விளாசிய பின் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

    • 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களுக்கு வாமிகா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தற்காலிக கேப்டனாக விராட் கோலி இருக்கிறார். போட்டி இல்லாத நேரங்களில் மனைவியுடன் இணைந்து டான்ஸ் ஆடுவது, ரெஸ்டாரண்டிற்கு செல்வது, கடகறைக்கு செல்வது என்று மனைவிக்கு என்று நேரம் செலவிட்டு வருவார்.

    இந்த நிலையில், அனுஷ்கா சர்மா இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு விராட் கோலி டுவிட்டர் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தடித்த, மெல்லிய மற்றும் உங்கள் அழகான பைத்தியக்காரத்தனத்தின் மூலம் உன்னை நேசிக்கிறேன். என்னுடைய எல்லாமுமான உனக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இவர்களுக்கு வாமிகா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
    • நேற்றைய போட்டியில் ஜேஸ்வால் தூக்கி அடித்த பந்தை கேட்ச் பிடித்து தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்து விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார்.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி மைதானத்திலும் சரி பொது வெளியிலும் சரி எது செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கம். நேற்றைய போட்டியில் ஜேஸ்வால் தூக்கி அடித்த பந்தை கேட்ச் பிடித்து தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்து விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    அதனை ரசிகர்கள் ஷேர் செய்த நிலையில் தற்போது ஜிம்மில் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடனம் ஆடியபோது கோலியின் கால் சுளுக்கியது போல ஓடினார். அதனை பார்த்த அவரது மனைவி அனுஷ்கா சர்மா சிரிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • மஹாகாலேஷ்வர் கோவிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்று அனுஷ்கா ஷர்மா கூறினார்.
    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷ் மற்றும் விருந்தாவனத்திற்கும் சென்றிருந்தனர்.

    ஆஸ்திரேலிய அணிவுடனான 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மஹாகாளேஷ்வர் கோயிலுக்குச் சென்றனர்.


    இருவரும் மற்ற பக்தர்களுடன் கோவிலுக்குள் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தூரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த ஒரு நாள் கழித்து இன்று அவர்கள் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

    நாங்கள் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தோம். மஹாகாலேஷ்வர் கோவிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்று அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.


    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷ் மற்றும் விருந்தாவனத்திற்கும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. 

    • விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.
    • அனுஷ்காவும் விராட்டும் ஆசிரமத்தில் வழிபடுவது போன்ற பல படங்கள் வைரலாகி வருகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.

    தம்பதிகள் சுவாமி தயானந்த கிரி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். அனுஷ்காவும் விராட்டும் ஆசிரமத்தில் வழிபடுவது போன்ற பல படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் அங்கு வந்த ரசிகர்களுடன் செல்பியும் எடுத்து கொண்டனர்.


    விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் ஆசிரமத்தில் நடைபெறும் பொது மதச் சடங்குகளில் பங்கேற்று பின்னர் பண்டாரா (மத விருந்து) ஏற்பாடு செய்தார்கள் என்று கூறப்படுகிறது.

    விராட் மற்றும் அனுஷ்கா இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் விருந்தாவனத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் ஆசி பெற்ற சில நாட்களுக்குப் பிறகு ரிஷிகேஷுக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    ஆஸ்திரேலியா அணி சில நாட்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பார்டர் கவாஸ்கர் டிராபி 2023 என்று பிரபலமாக அறியப்படும் இந்தத் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இரண்டு இடங்களைத் தீர்மானிப்பதில் இன்றியமையாததாக இருக்கும்.

    தொடர் பிப்ரவரி 9-ம் தேதி நாக்பூரிலும் ஒருநாள் போட்டிகள் மார்ச் 17-ம் தேதி மும்பையிலும் தொடங்குகிறது.

    • தனது அனுமதியின்றி புகைப்படங்களை பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
    • தற்போது பூமா இந்தியா நிறுவனத்துடன் அனுஷ்கா சர்மா கைக்கோர்த்துள்ளார்.

    ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 70 ஆண்டுகள் பழைமையான பூமா நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


    பூமா இந்தியா நிறுவனம் பதிவு

    இதைத்தொடர்ந்து, கடந்த 2020- ஆம் ஆண்டு பூமா ஆடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை பாலிவுட் நடிகையும் , விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பூமா இந்தியா நிறுவனம் அனுஷ்கா சர்மாவின் அனுமதியின்றி தங்கள் நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


    அனுஷ்கா சர்மா பதிவு

    தனது அனுமதியின்றி புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், " நான் உங்கள் விளம்பர தூதுவராக இல்லாத போது என் புகைப்படத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். தயவு செய்து அதை நீக்குங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், தற்போது பூமா நிறுவனத்துடன் நடிகை அனுஷ்கா சர்மா கைக்கோர்த்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.



    ×